Posts

Showing posts from January, 2022

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

🐶 நாய் குட்டி

Image
அது அன்று அப்படி தான் காண நேர்ந்தது ஆம் தின மும் சந்தைக்கு சென்று வரும் பாதை  ஓர் நாள் சிறிது அதிகமான துர்நாற்றம் அருகில் சு ற்றும் முற்றும் பார்த்தால் அந்த வீட்டு வாசலில்  சுற் றி வந்த மூன்று நாய்குட்டிகளில் ஒன்று எப்படியும் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்க வேண்டும். அதன்  அருகினில்  வருவோர்      போவோரை ஏக்கமாய் பார்க்கும் அந்த தாய் நாய்,  அதன் பார்வை எப்படியாவது என் குழந்தையை காப் பாற்றுங்கள் அல்லது அதற்க்கு  இறுதி  சடங்கையாவது  நடத்தி  வையுங்கள் என்பது போன்ற பார்வை  அது பொதுவாக விலங்குகள் அதன் பார்வையிலேயே விளக்கிவிடுகின்றன. எதுவும் செய்யமுடியவில்லை அந்த வீட்டினில் இரண்டு பெண்பிள்ளைகள் தினமும் அதற்க்கு அவர்கள் தான் உணவு வைக்கிறார்கள்  இறந்து போன அந்த நாய் குட்டியை ஓர் நாள் ஆச்சர்யமாக பார்த்தார்கள் அந்த இரண்டு பெண்களும் அவர்களுடைய தாயாரும் அவ்வளவு தான்  இன்றோடு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன உடல் ஊதி அதிக துர்நாற்றம் வீசியிருக்க வேண்டும் பனி காலம் என்பதனால் நாய்குட்டி இறந்த நிலையிலேயே அப்படியே கிடக்கிறது. இன்று நாளை மறுநாள் என ஓர் நாள் யாராவது அதனை அப்புற படுத்துவார்கள் என்று நி

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *