கதைக்குள் கதை
பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது
ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது.
ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.
கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை.
அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தகப்பன் குடும்பத்தை விட்டு தனியாக ஒரு வாழ்வை வாழ்ந்து வந்தார். தமையன் வீட்டில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் வெளியூர் சென்று வேலை செய்து அதில் வரும் பணம் கொண்டு அவனது படிப்பை படித்து முடித்து விட்டு வெளியூரிலே வேலை செய்து வந்தான்.
யாரும் கேட்பார் இல்லை தாய்க்குச் செல்லப் பிள்ளை என்பதினால் அவன் தான் ராஜாவாக யாருக்கும் அடங்காமல் அதுமட்டுமில்லாமல் நல்ல வேலை வேறு வாழ்வை மதுவின் பிடியில் சிக்க வைத்து அது தான் வாழ்வு என்று நம்பிக் கொண்டிருந்த தருணம் அது.
பலராமனின் மது விருந்துக்கு கண்ணன் அழைக்கப் பட்டான் கண்ணன் வலுவானவன் ஆளுமை உடையவன் என்பதனால். மது விருந்தில் தீர்மானம் கிறிஸ்தவர்களுக்கு வரி வாங்க வேண்டுமென்று தான் தீர்மானம் வர வேண்டும் நாம் அவர்கள் பக்கம் தான் என்று அவர்கள் கூற சிறிதும் விருப்பமில்லாத கண்ணன் மதுவினாலும் நட்பினாலும் அவனது நிலையில் இருந்து மாறினான்
ஊர் கூட்டம் கார சாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்க விவாதம் துவங்கியது. ஊர் தலைவர், இந்த ஆண்டிலிருந்து கிறிஸ்தவ மதத்வர்களுக்கு வரி செலுத்தும் உரிமையில்லை. ஊர் சார்பாகவோ, ஊரிலிருந்து யாரும் அவர்கள் வீட்டு நல்லது கெட்டதிற்கு பங்கு கொள்ள மாட்டார்கள் என்று கூறினார்
ரவி கூட்டத்தில் இருந்து இரண்டு அடி முன்பு வந்து சரி நாங்கள் இனி வரி செலுத்தவில்லை இத்தனை வருடம் செலுத்திய வரியை திரும்ப கொடுங்கள் அதுமட்டுமல்லாமல் நான் கோவில் பணி நடக்கும் போது நன்கொடை இருபதாயிரம் கொடுத்திருந்தேன் அதையும் திரும்ப தருமாறு கேட்க
ஊர் தரப்பு அதையெல்லாம் முடிந்தவை இனி நடப்பவற்றை பற்றி முடிவெடுக்க வே இந்த கூட்டம் என்று கூற கண்ணனோ கூட்டத்தில் இருந்து முன்வந்து ஊர் நிர்வாகிகளிடம் அவர் கேட்பது சரி தானே அவர் நேற்றோ இன்றோ கிருஸ்தவ மதத்திற்கு மாறவில்லை பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
அவர் கிறிஸ்தவராக இருக்கும் போது தான் நன்கொடை வரிபணம் எல்லாம் செலுத்தினார் அதனால் அவர் கேட்பதை செய்யுங்கள் என்றான்.
அவன் பேசியதும் அவனை தொடர்ந்து பலரும் கண்ணனுக்கு எதிராகவும் துணையாகவும் கருத்து தெரிவிக்க எந்த ஒரு முடிவும் எடுக்காமல் அன்றைய ஊர் கூட்டம் முடிந்தது.
ஆனால் கண்ணனுக்கு ஏனோ மனம் பாரமாகவே இருந்தது. விருப்பமில்லாத ஒன்றை செய்துவிட்டோமே என்று வருந்திக் கொண்டிருந்தான்.
அதன் பின்னான வாழ்க்கையில் வழக்கம் போல பல மது விருந்துகளும் விளையாட்டும் வேலையும் என்று சென்று கொண்டிருந்தன. ஒரு நாள் அவன் தன் நண்பர்களிடம் தன் வேலையை விட போவதாக கூறினான். ஆனால் நண்பர்களோ அவனை இதை விட நல்லவேலை யாருக்கும் கிடைக்காது. அதனால் நீ வேலையை விட்டு விடாதே என்று கூறினார்கள் அவனுக்கு ஏதாவது பிஸினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஒட்டிக் கொள்ளவே வேலையை தைரியமாக விட்டான்.
சென்னைக்கு சென்றான் அங்கு உறவினர் ஒருவரோடு சேர்ந்து தொழில் செய்ய திட்டமிட்டான்
தொடரும்…
Comments
Post a Comment
நன்றி