பரோட்டா கடை காந்தி (குறுங்கதை)

 


தினமும் மாலை துவங்கும் பரோட்டா கடை வியாபாரம் எத்தனை கடைகள் இருந்தாலும் சூடு பிடிக்கும் வியாபாரம். கையில் ஒரு லட்சம் சேமிப்பு இருக்கும் எவனும் முதலில் தொழில் என்று சிந்திக்கும் போது டீ கடை அல்லது ஹோட்டல் என்பது தான் நடுத்தர வர்க்கத்தவனின் எண்ணமாக இருக்கும். அப்படித் தான் காந்தி துவங்கினான் ஒரு ஹோட்டல். ஏற்கனவே அங்கு நடந்து கொண்டிருந்த பரோட்டா கடை அண்ணன் தம்பி சண்டை காரணமாக மூடப் பட்டு இருந்தது. 

காந்தி கையில் பணம் வரவே அவனால் அதனை வைத்துக் கொண்டு இருக்க முடியவில்லை. அக்கவுண்டில் பணம் இருக்கிறதா என்று மணிக்கு மூன்று முறை அவனது வங்கி கணக்கை இணையம் மூலம் திறந்து திறந்து பார்த்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது தான் அவனுடைய செவிக்கு வந்தது அந்த செய்தி ஏதும் யோசிக்காமல் அடுத்த நொடியே அந்த கடை முதலாளிக்கு அழிப்பை தொடுத்து ஏக வசனம் பேசி அந்த கடையை மாதம் இரண்டாயிரம் வாடகைக்கு முடித்தான். இடத்தின் முதலாளி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார் காந்தி இதற்க்கு முன் ஐந்தாயிரத்திற்கு வாடகை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று மூன்றாயிரம் குறைக்க சொன்னால் உனக்கே நியாயமா என்றார். 

"யோ.., உம்மா கடைக்கு வாடகைக்கு வந்து எவனாவது நாலு மாசம் இருந்துருக்கானா ? கிடையாது. ஏன்னா சுத்தமான இராசியில்லாத கடை ஓய் உம்மது."

"காந்தி ராசி கீசியெல்லாம் தெரியாது எனக்கு வாடகை முக்கியம் யாரும் வரலன்னா அது சும்மா கிடந்தாலும் பரவால்ல கேட்டியா !"

"ஓய், மாச, மாசம் இரண்டாயிரம் சார்ப்பா வரும். கரண்டு பில்லு தண்ணி பில்லு கட்டிரலாம். வியாபாரம் சோரா போனா நீறு கெட்டாத விட ஜாஸ்தி தரேன், வாங்கிக்கும்."

"சரி, உனக்குனால தரேன் டே, ஊருல வேற எவன் கிட்டயும் சொல்லிபுடாத, லிங்கம் இரண்டாயிரத்துக்கு கடையை வாடகைக்கு கொடுத்தான்னு சொன்னா மத்த கடை காரனும்லா கொறச்சி கேப்பான்!" 

"சரி ஓய், எவன்கிட்டயும் சொல்லல வீட்டுக்கு வாறன் சாவிய தாரும்" 

"டேய், அது கடை முன்னால துரு பிடிச்சி கிடக்கிற அந்த சைக்கிள் பெடல் மேல இருக்குடே.." என்றான் கடையின் முதலாளி லிங்கம்.

அவசர, அவசரமாக சென்று சாவியை எடுத்துக் கொண்டான். தினமும் அவன் மது அருந்த செல்லும் இடத்திற்கு வரும் ஒருவனுடன் ஏற்பட்ட பழக்கம் ஒரு பரோட்டா மாஸ்டர் கிடைத்தார். கடை துவங்கியது. முதல் நாள் ஆர்பாட்டம் இல்லாத வியாபாரம். காந்தியுடன் பழக்கத்தில் உள்ள அனைவரும் அங்கு வந்தே மதுவிற்கு பின் இரவு உணவை களித்தனர். 

காந்தியுடன் மது அருந்தி வருபவருக்கு பரோட்டா இலவசம்.. 

"லே மக்கா, பரோட்டா எத்தன வேணுமோ வாங்கி தின்னுங்கல நம்ம கடைதான். ஆம்லெட், ஆபாயில் மட்டும் வாங்கிராதுங்கல முட்ட கொடூரமான விலை மக்கா." என்றான் காந்தி மிதமான குடி போதையில். 

மாஸ்டர் தினமும் கல்லா பெட்டியில் நூறு, இருநூறு எடுத்து பாக்கெட்டில் சொருகிக் கொள்வதும், காந்தி வாங்கி கொடுக்கும் மதுவை குடிப்பதும், அவனுடைய தினச் சப்பளம் மற்றும் படி பணத்தை தவறாமல் வாங்கிக் கொள்வான். 

இவன் திருடுவது காந்திக்கு ஓர் நாள் தெரிய வந்தது. சரி ஒரு நாள் கையும் களவுமாக மாட்டட்டும் என்று பொருந்து இருந்தான். தீபாவளி அன்று காலையில் கடையை ஆரம்பித்து விட்டான். நல்ல வியாபாரம் காலைமுதல். காந்தியும் காலையில் குடிக்க துவங்கியவன் இரவு வரை தொடர்ந்த மது விருந்து. இரவு மாஸ்டருக்கு ஒரு பாட்டில் வாங்கிக் கொண்டு கடைக்கு வந்தான். கடையில் வியாபராம் முடிந்து மாஸ்டர் எல்லா பொருட்களையும் ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தார். பின் இருவரும் சேர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். நல்ல மது போதையில் காந்தி மாஸ்டரிடம் 

"ஓய், உம்மள நம்பி கடையை விட்டதுக்கு நீர் ரொம்ப நேர்மையா கடைய நடத்திட்டு வரீரு, எனக்கு அது ரொம்ப சந்தோசம். இப்படியே நல்லபடியா கடையை நடத்தும், உம்மளுக்கு தனியா ஒரு ஹோட்டல் ரெடி பண்ணி தாரேன்."

"அதுவெல்லாம் வேணாம் டே, இதுவே போதும். சரி டே ரொம்ப நேரமாச்சி பிள்ளைய தேடும் திபாவளி வேற."

என்று மாஸ்டர் சொல்லவும் மது  போதையில் அன்றைய கலெக்சனை கணக்கு வாங்க மறந்துவிட்டான் காந்தி. மாஸ்டர் கிளம்பிய பின் நினைவு வர சரி நாளைக்கு வாங்கிக்கலாம் என்று கடையிலேயே உறங்கி விட்டான் காந்தி.

காலை எழுந்து போதை தெளிந்து அரை மயக்கத்தில் கல்லா பெட்டி நினைவு வர பெட்டியை திறந்து பார்த்தால் ஒரு ருபாய் கூட இல்லை. காந்தி மாஸ்டருக்கு போன் செய்ய என் "தற்போது உபயோகத்தில் இல்லை" என்று வர கோபம் கொண்டான்.  

அவனுக்கு மாஸ்டரை பரிந்துரைத்த நண்பனுக்கு விஷயத்தை சொல்ல அவன் வீட்டை காலிசெய்து விட்டு சென்று விட்டான் என்கிறான் அவன் நண்பன். எப்படியும் இருபதாயிரத்திற்கு மேல் இருக்கும் சரக்கு மட்டும் ஆறாயிரத்திற்கு மேல் வாங்கியிருந்தேன் என்றான் காந்தி.

காந்தியின் நண்பர்கள் அவனை கேலி செய்தனர். காந்தி போல ஒரு நல்லவன் கிடையாது "மக்கா, நான் வரட்டா டே உன்னோட கடிக்கு மாஸ்டரா ? ஏன்னா சரக்கும் வாங்கி தருவ கடை வருமானத்தையும் மொத்தமா தருவ! உன்ன போல ஒரு இளிச்சவாயன் ஓனர் எங்க டே கிடைப்பான்?" ஹா..ஹா..என்று அனைவரும் அவனை பார்த்து சிரிக்க 

"போங்கல புண்டாமக்கா நாளைக்கு வேற மாஸ்டர் வரான் என் தம்பி." என்று சொல்லவும் இன்னமும் சத்தமாக அனைவரும் சிரித்தனர். அவனாலும் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை." 







  

Post a Comment

0 Comments