உடல் உழைப்பு

 


உழைப்பு உடல் சார்ந்தது மட்டுமல்ல, உழைப்பு மனம் சார்ந்தது உடலில் வலு இருந்த போதிலும் சில வேலைகளில் நாம் சோம்பலை உணர்ந்திருப்போம். என்று வேலை செய்ய வேண்டாம் என்று எண்ணியிருப்போம். அல்லது நன்றாக என்று நித்திரைக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஓங்கியிருக்கும். ஆனால் நாம் அதையும் செய்யாமல் அன்றைய நாளை வீணாக கழிப்போம். 

இந்த சோம்பல் எங்கிருந்து குடி கொள்கிறது உடல் அசதியை அந்த சோம்பல் எண்ணமே உருவாகியிருக்கும். மனம் அசட்டையாக இருக்கும். ஆரோக்கியம் முதலில் மனதிற்கு தான் தேவை. மனம் ஆரோக்கியமாக இருக்கும் போது எந்தவித சலிப்பும், சோம்பலும் உடலை தாக்காது. 

அப்படி மனம் உற்சாகம் ஆகவில்லையெனில் நன்றாக ஓய்வு தேவை என்பதை உறுதி செய்துக் கொள்ளவேண்டும். இருள் நிறைந்த அறையில் நல்ல தூக்கம். அதுவே உடலுக்கும் மனதிற்கும் போதுமானது. தேவையான அளவு உணவு அவ்வளவு தான்.

உழைக்கும் நேரம் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற தெளிவு நமக்கு என்றும் இருக்கவேண்டும். உணர்தல் என்பது மனிதனுக்கு இயற்கை கொடுத்த பெரிய வரம். மனிதனால் உள்ளும் புறமும் உணர முடியும் என்றாலும் அவன் எதன் பின்னோ அவன் ஓடிக் கொண்டிருக்கிறான். 

உடல் ஒரு செயலில் ஈடு பட மனம் வேறு எங்கோ பரவசம் கொண்டிருக்கிறது. அப்படி மனம் லயிக்காத செயல் சிரத்தையாக அமையாது. உடலும் மனதும் ஒத்திசைய வேண்டும். 

Post a Comment

0 Comments