குடும்பம், காதல், வாழ்வு – ஒரு சமநிலை தேவை

 குடும்பம், காதல், வாழ்வு – ஒரு சமநிலை தேவை




வாழ்க்கையின் அடிப்படை தேவை என்ன? பணம்? இல்லையா, காமம்? இந்த இரண்டிற்கும் நடுவே வாழ்க்கை ஒரு சமநிலையில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு இருக்கும். ஆனால் உண்மையில், நம் சமூகம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே விதமான வாழ்க்கை வாய்ப்புகளை கொடுத்திருக்கிறதா?


இன்றைய காலத்தில், குடும்பத்தை பிரிந்து, பணத்திற்காக வெளியூரில் வேலை செய்ய வேண்டிய நிலை ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அவர்கள் வேலை செய்யும் இடத்தில் தங்கள் உடல் தேவைகளை பணம் கொடுத்து நிறைவு செய்யும் சலுகை இருக்கலாம். ஆனால், அவர்கள் வீட்டில் இருக்கும் மனைவியாரின் நிலை? கிராமப்புற பெண்கள், ஒழுக்கம் என்ற மந்திரவாக்கியத்திற்குள் அடைக்கப்பட்டு தங்கள் உணர்வுகளையும், உடல் தேவைகளையும் மறந்து வாழ்ந்து வருகின்றனர். சுய இன்பம் என்ற செயல் கூட அவர்களுக்கு அறியப்படாத ஒன்று.


இந்த நிலை மாறவேண்டும். ஆண்களும் தங்கள் குடும்பத்தோடு இருக்க வேண்டும். மனைவி, பிள்ளைகள், பெற்றோர் என்ற உறவுகளோடு இணைந்து வாழும் வாழ்க்கையே ஒருவருக்கான முழுமையான வாழ்க்கை. இதை செயல்படுத்த அரசே முன்வர வேண்டும். ஊரிலேயே பண வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஆண் வெளிநாடோ, வேறொரு மாநிலமோ சென்று பணம் சம்பாதிக்க வேண்டிய நிலை மாற வேண்டும். வெளியூரில் கிடைக்கும் சம்பளம், அவரது சொந்த ஊரிலேயே கிடைக்க வேண்டும்.


ஒரு குடும்பம் பிரிந்து வாழும் காரணம் காதல், காமம், உணர்வுகள் குறைவதல்ல. அது சொந்த ஊரிலேயே அந்த குடும்பத்திற்கு தேவையான வாழ்வாதாரம் கிடைக்காததால். ஒருவன் தன் உறவுகளை விட்டு சென்றால், அவனுக்கு காதலும், காமமும் கூட ஒரு வெறும் உடலுணர்வாகவே மாறிவிடும். வாழ்க்கையின் உண்மை தொடர்பு துலக்கப்பட்டு விடும்.


இந்த நிலையை மாற்ற, சமூக ஒழுங்குகளும், அரசின் முடிவுகளும் மாற்றம் அடைய வேண்டும். அன்றாட குடும்ப வாழ்க்கை என்பது உணர்வுகளின் பரிமாற்றம்தான். அதை பிரிக்காமல், ஒருவருக்கு நிதியளவிலும், உணர்வளவிலும் முழுமை கிடைக்கும் வாழ்க்கையை அமைக்க நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments