இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ?
சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன்.
சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.
அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்.....
சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.
ஒவ்வொரு அத்தியாயமாக படிக்கும் போது அது ஒரு ஆனந்தம் தான். பலவருடங்கள் தீட்டிய மார்க்கம் போல என்னை நானே நினைத்தது நகைத்துக் கொள்வேன். எதை எழுதுவேன் ?
இன்பம், துன்பம், கோபம், காமம், கனவு என்று அனைத்தையும் கிறுக்கி வைக்கப் போகிறேன். எதை மறைக்க வேண்டும் ?
அறிவார்ந்தவர்கள் சிலதை மறைக்கே வர்புரித்தியிருந்தன்ர். அல்லது வற்புறுத்தியுள்ளனர் என்று கூட கூறலாம். அப்படி மறைத்து வைக்க வேண்டிய சம்பவங்கள் என்னில் தினமும் நடக்கும்.
யாரோ இதை படித்தால் குழப்பமில்லை. என்னை சுற்றியுள்ளவர்கள் கண்களில் பட்டுவிடக் கூடாது. அது என்னைப் பற்றி பேச நானே வழி உருவாக்கி நல்ல ஆதாரம் கொடுத்ததாகவும் ஆகிவிடும்.
சரி நல்லதை சொல்வோம் என்று சுயசரிதையை நாளைய தலைமுறைக்கு தோதுவாக எழுத நிறைய பொய்கள் சொல்லவேண்டியிருக்கும். பொய் சொல்வது என்பது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. ஏனென்றால் நான் நிச்சயம் மாட்டிக் கொள்வேன்.
பொய் என்னை தூங்க விடாது. என்னுள் ஒரு பதற்றத்தை உருவாக்கிக் விடும் நாள் முழுவதும் பயந்துக் கொண்டே இருப்பேன். அனைத்துக்கும். அம்மாவைப் போல என்று நினைக்கிறேன். ஆம் அவளும் அப்படித்தான் அனைத்திற்கும் பயந்துக் கொண்டே இருப்பாள்.
அம்மாவைப் பற்றி சொல்லும் போது தான் ஒன்று நினைவிற்கு வருகிறது. நான் இந்த சம்பவம் என்வாழ்வில் என்றும் மறக்கப் போவதே இல்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். ஆம், அப்போது நான் மூன்றாம் வகுப்பு படித்திக் கொண்டிருந்தேன். எனது வயது அப்போது ஏழு இருக்கும்.
நான் படித்தது உள்ளூர் பள்ளிக் கூடம் தான் வீட்டில் இருந்து பத்து நிமிடங்களில் நடந்து சென்று விடலாம்.
0 Comments
நன்றி