Skip to main content

Posts

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
Recent posts

வயதிற்கு வந்த பெண்ணின் மன ஓட்டம்: ஆழமான ஒரு வாழ்வியல் கதை

 கார்த்திகாவிற்கு அந்த ஞாயிற்றுக்கிழமை காலை எப்போதும் போல விடியவில்லை. அம்மா அவசர அவசரமாக அவளைக் குளிக்க வைத்ததும், வீடே உறவினர்களால் நிறைந்ததும், ஊரே அவளை ஒரு புதிய பார்வையில் பார்த்ததும் நடந்து இப்போது இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. "பெரியவள் ஆகிவிட்டாள்" என்ற அந்த ஒற்றைச் சொல், அவளது பதிமூன்று ஆண்டுக்கால சுதந்திரக் காற்றைச் சட்டென்று ஒரு மூடிய அறைக்குள் சிறைபிடித்தது போலிருந்தது. அந்த இரண்டு மாதங்களில் கார்த்திகாவின் உடம்பிலும் மனதிலும் எத்தனையோ மாற்றங்கள். கண்ணாடி முன்னால் நிற்கும் போதெல்லாம் தன் உடலின் புதிய வளைவுகளும், திடீரெனத் தோன்றும் சோர்வும் அவளுக்குப் விசித்திரமாக இருந்தன. ஆனால், அவளுக்குள் ஏற்பட்ட மாற்றங்களை விட, அவளைச் சுற்றியுள்ள உலகம் மாறிய விதம் தான் அவளுக்கு மிகப் பெரிய புதிராக இருந்தது. பள்ளிக்குக் கிளம்பும் போதெல்லாம் கார்த்திகா இப்போது தன் உடையை இரண்டு முறை சரிபார்த்துக் கொள்கிறாள். தாவணி போடும் பழக்கம் இன்னும் முழுமையாக வராவிட்டாலும், சுடிதாரின் துப்பட்டாவை எப்படி சரியாக அணிவது என்பதில் அம்மா தினமும் பாடம் நடத்துகிறாள். அன்று காலை பள்ளிக்குச் செல்ல அவள் வீட்...

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

குடும்பம், காதல், வாழ்வு – ஒரு சமநிலை தேவை

 குடும்பம், காதல், வாழ்வு – ஒரு சமநிலை தேவை வாழ்க்கையின் அடிப்படை தேவை என்ன? பணம்? இல்லையா, காமம்? இந்த இரண்டிற்கும் நடுவே வாழ்க்கை ஒரு சமநிலையில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கு இருக்கும். ஆனால் உண்மையில், நம் சமூகம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே விதமான வாழ்க்கை வாய்ப்புகளை கொடுத்திருக்கிறதா? இன்றைய காலத்தில், குடும்பத்தை பிரிந்து, பணத்திற்காக வெளியூரில் வேலை செய்ய வேண்டிய நிலை ஆயிரக்கணக்கான ஆண்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அவர்கள் வேலை செய்யும் இடத்தில் தங்கள் உடல் தேவைகளை பணம் கொடுத்து நிறைவு செய்யும் சலுகை இருக்கலாம். ஆனால், அவர்கள் வீட்டில் இருக்கும் மனைவியாரின் நிலை? கிராமப்புற பெண்கள், ஒழுக்கம் என்ற மந்திரவாக்கியத்திற்குள் அடைக்கப்பட்டு தங்கள் உணர்வுகளையும், உடல் தேவைகளையும் மறந்து வாழ்ந்து வருகின்றனர். சுய இன்பம் என்ற செயல் கூட அவர்களுக்கு அறியப்படாத ஒன்று. இந்த நிலை மாறவேண்டும். ஆண்களும் தங்கள் குடும்பத்தோடு இருக்க வேண்டும். மனைவி, பிள்ளைகள், பெற்றோர் என்ற உறவுகளோடு இணைந்து வாழும் வாழ்க்கையே ஒருவருக்கான முழுமையான வாழ்க்கை. இதை செயல்படுத்த அரசே முன்வ...

உடல் உழைப்பு

  உழைப்பு உடல் சார்ந்தது மட்டுமல்ல, உழைப்பு மனம் சார்ந்தது உடலில் வலு இருந்த போதிலும் சில வேலைகளில் நாம் சோம்பலை உணர்ந்திருப்போம். என்று வேலை செய்ய வேண்டாம் என்று எண்ணியிருப்போம். அல்லது நன்றாக என்று நித்திரைக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஓங்கியிருக்கும். ஆனால் நாம் அதையும் செய்யாமல் அன்றைய நாளை வீணாக கழிப்போம்.  இந்த சோம்பல் எங்கிருந்து குடி கொள்கிறது உடல் அசதியை அந்த சோம்பல் எண்ணமே உருவாகியிருக்கும். மனம் அசட்டையாக இருக்கும். ஆரோக்கியம் முதலில் மனதிற்கு தான் தேவை. மனம் ஆரோக்கியமாக இருக்கும் போது எந்தவித சலிப்பும், சோம்பலும் உடலை தாக்காது.  அப்படி மனம் உற்சாகம் ஆகவில்லையெனில் நன்றாக ஓய்வு தேவை என்பதை உறுதி செய்துக் கொள்ளவேண்டும். இருள் நிறைந்த அறையில் நல்ல தூக்கம். அதுவே உடலுக்கும் மனதிற்கும் போதுமானது. தேவையான அளவு உணவு அவ்வளவு தான். உழைக்கும் நேரம் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற தெளிவு நமக்கு என்றும் இருக்கவேண்டும். உணர்தல் என்பது மனிதனுக்கு இயற்கை கொடுத்த பெரிய வரம். மனிதனால் உள்ளும் புறமும் உணர முடியும் என்றாலும் அவன் எதன் பின்னோ அவன் ஓடிக் கொண்டிருக்கிறான்....

கொல்லைப் புற ராட்சதர்கள் (மேகக் கூட்டங்கள் பகுதி 1)

மேகக் கூட்டங்கள்  பகுதி 1 பெரும் காடு அந்த காட்டின் உயிர்ப்பை தன் வசம் கொண்டு எல்லைகளற்றவையாய் கிளைகளின் ஊடேயும், பாறைகளிலும் குடியிருப்பவனாய் எண்ணிலடங்கா தன் இனத்தின் அடைக்கலம் கொண்டு அவர்களே கதியென்று வெளியுலகம் பார்க்காது தன் கூட்டத்தின் நிழலிலேயே இருந்து. எண்ணியிராத பெரும் காற்றில் தனித்து கொண்டு வரப்பட்ட சிறு தேனியைப் போலவே அன்று கோமுகி பதறிக் கொண்டிருந்தாள்.    எந்த திசையில் செல்வதென்பது அவளுக்கு விளங்காமல் இருந்தது. உயிர் இருந்தும் அவள் உயிரை இழந்தவள் போலவே உணர்ந்தாள். அந்த இருள் சிறு விளக்கின்  உஷ்ணம் தாங்கியிருந்தது. கடும் குளிர் அதன் ஒளியை மங்கச் செய்திருந்தது. நிழலாடும் அதன் தீபம் அவளை இன்னமும் நெஞ்சடைக்கச் செய்திருந்தது. எங்கோ தூரமாய் கேட்ட கானாக ஓசை அவளுக்கு அலறலாகவே கேட்டது. இசை அதன் உயிர் இழந்திருந்தது அவள் காதுகளில் நுழையும் போது. பத்து அறைகளுக்கு மேலிருந்த அந்த வீடு மானுட நடமாட்டத்தை ஏனோ விரும்பாமல் இருந்தது. ஊரின் எல்லையில் காவலன் போல காட்சியளிக்கும் அந்த கல் அடுக்குகளால் ஆனா வீடு மனிதர்களுக்கு என்னவோ நரகத்திற்கான வழியாகவே தெரிந்தது. இரவு நேர இரைச்ச...