கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

காதலன் காமனின் புதல்வன்

 அவனுக்கு பெண்கள் புதிதல்ல, அவனை சுற்றி எப்போதும் பெண்களே உள்ளனர் அவனுக்கு மற்றைய ஆண்களை போல பெண்களை தன்னை பார்க்கும் படி ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் கிடையாது.

அவன் அவனுடைய இயல்பை எப்போதும் யாருக்காகவும் மாற்றியது இல்லை. அவன் பெண்களை ரசிப்பவன் அவர்களின் ரசிகன். ஆணழகன் இல்லை.

அவனை விரும்பாத பெண்கள் இல்லை. அவன் மீது மோகம் கொள்ளாதவளும் இல்லை. அவன் யாரையும் வேண்டாமென்று விலக்கியது இல்லை. தெளிவானவன் பெண்களிடம் காதல் வார்த்தைகளை கூறி அவர்களை நயவஞ்சகம் செய்து ஏமாற்றி அடைய அவன் பொறுக்கி இல்லை.

ஆனால் அவனை எப்படியாவது அடைய வேண்டுமென்ற எண்ணம் பெண்களுக்கு உண்டு. ஆனால் அது நீங்கள் நினைப்பது போல் இல்லை. அவன் மடி மீது சாய வேண்டும், அவனை கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும், அவனுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்ற ஒரு காதல் பிரியம் தான் அது.



அவனது இயல்பான பேச்சு அவனை யாரிடமும் வெறுக்கச் செய்யாது. ஆண்களிடமும் தான் ஆனால் ஆண்கள் அவனை கன்னி ராசிக் காரன் என்று சொல்வார்கள். ஆனால் அவன் மிதுன ராசிக் காரன் என்பது அவர்கள் அறிந்திருக்கவில்லை. 

அவன் ஒளிவு மறைவு இல்லாதவன். எந்த பெண்ணிடமும் எந்த நிலையிலும் சில நேரம் ஊடலில் கூட அவன் ஆபாச வார்த்தைகள் பேசாதவன்.

அப்படி என்ன இருக்கிறது அவனிடம்? அனைத்து பெண்களும் விரும்புமளவு! என்றால் அது அவனுக்கு தெரியாது. ஆனால் அவன் பொறுமையானவன். அவனிடம் பேசும் அனைவருக்கும் பெரும்பாலான நேரங்களில் அவனுடைய பதில் அவனது புன்னகை மாத்திரமே.

அது ஒருவேளை பெண்களுக்கு பிரியமோ! இருக்கலாம் …இருக்கலாம் எதிர் கருத்தை எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள் தான். அவன் எளிதில் அவர்கள் நினைத்த மாத்திரம் அவர்களுடன் ஊடலில் பகிர்ந்திடாதவன்.

அது இயற்கையாய் நிகழ வேண்டும் என்று எண்ணுபவன். அதற்க்காக காத்திருக்காதவன். காமத்திற்காக ஏங்காதவன். ஊடலில் அவள் கண்களை ஆழ்ந்த புன்னகையுடன் ரசிப்பவன், அவன் பார்வையால் அவளை வெட்கம் கொள்ள செய்பவன்.

எந்த நிலையிலும் எந்த பெண்ணிடமும் அவன் ஆண்மையை இழக்காதவன். அவளை முழு எல்லைக்கு கடத்திச் செல்பவன். அந்த ஊடல் அவளை பண்பில் மாற்றமடைய செய்திருக்கும். சமனை வெளிவிடாதவன் பெண்ணை இன்பமுறச் செய்து தனது இன்பத்தை தள்ளிப் போடுபவன்.

அதுமட்டுமல்லாமல் அவனை அவன் இழக்க என்றும் நினையாதவன். கற்பு கரசன் இல்லை. அவன் காமனின் மைந்தன். அவனை காதல் செய்ய யாருக்கும் தடையில்லை அவனுக்கு தான் கூடியிருக்கும் பெண்களை அன்பால் கவர்பவன்.

அவர்களை பேச வைத்து இரசிப்பவன். அவர்கள் ஆசையை கேட்டு அதனை ஆச்சர்யமுடன் ஏற்பவன். அவனது நாட்குறிப்பில் “ எனக்கு நீண்ட நாட்கள் வாழ ஆசையில்லை நான் வந்த காரணம் தெரிந்ததும் அதனை நிறைவேற்றி விட்டு திருப்ப செல்ல வேண்டுமென்று குறிப்பிட்டு வைத்திருந்தான்”

யோசோதா அதனை ஏதேர்ச்சியாகா பார்க்க என்ன டா இது உனக்கு அப்படி என்ன வயதாகிவிட்டது இப்போ தானே கல்லூரியில் சேர்த்திருக்கிறாய் என்றாள்.

அவன் அவளுக்கு புன்னகையையே பரிசாக கொடுத்தான். 

என்னப்பா நீ என்ன அதிசய பிறவி தான் என்றவள் அவனுடன் அன்று இரவை பகிர்ந்து கொள்ள எண்ணினாள்.

அவனது குறிப்பேட்டை படித்தவளுக்கு அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது. அவன் அப்படி என்ன எழுதியிருந்தான் என்பது பெரிய சரித்திரமெல்லாம் இல்லை.

அவனை சுற்றி வந்த பெண்களின் ஆசைகளை எழுத்து வடிவில் அவர்கள் பெயருடன் எழுதி கீழே இவைகள் நடக்கட்டும் என்று எழுதி வைத்திருந்தான். யாருக்கும் ஒருவரை பிடிக்க எந்த காரணமும் தேவையில்லை இருந்தும் வெறுமனே பிடிக்கும் என்பதற்கு பதிலாக ஒரு காரணத்தை சேர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அன்று யோசோதா நினைத்து போல அவனுடன் பொழுதை கழிக்க முடியவில்லை. ஆனால் இரவு முழுவதும் அவனுடன் தான் இருந்தாள். அவன் தனிமையில் இருந்த அந்த வீட்டின் மொட்டை மாடியும் நட்சத்திரங்களும் அவர்களுக்கு துணை.

அவள் தனது ஆடைகளை சிறிது இறக்கிக் கொண்டாள் அவன் அதற்கெல்லாம் மயங்குவோன் இல்லையே. ஆனாலும் அவளை தொடாமலே அவனது பரஸ்பர காதல் சக்தியை அவளிடம் பரவச் செய்தான். ஊடல் கொள்ளா ஊடலில் இருவரும்.

அவள் காதலன் காமனின் மைந்தன்.










Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *