சிலருக்கு நட்புகள் பாரம், சிலருக்கு தான் வரம் இருந்தாலும் நட்பு என்ற ஒரு புள்ளி இல்லாமல் வாழ்வை தகர்த்த முடியாது என்பது தான் எதார்த்தம்.
நட்பு எப்போது எல்லாம் தேவைப்படும் என்றால் நட்பு எப்போதும் தேவைப்படும். திருமணம் என்ற ஒன்று ஆகும் வரை நட்பு ஊரில் அல்லது ஊரை சுற்றி, பள்ளியில் அல்லது கல்லூரியில் வேலை செய்யுமிடங்களில் என்று ஆணுக்கும் ஆணும் அல்லது பெண்ணும் இருக்கலாம்.
பெண்களுக்கு தான், இருப்பினும் நாம் நினைப்பது போல நட்பு என்பது ஒரு உறவு முறையல்ல அது ஒரு உணர்வு தாய் தந்தையரிடம் நண்பர்களாக இருக்கலாம். மனைவி அல்லது அண்ணன் தம்பிகள் என எல்லா உறவுகளிலும் தான் நட்புகள் உள்ளது.
நட்பின் பரிணாமம் ஒளிவு மறைவு அற்றது. அது சுயநலமற்ற ஒரு உணர்வு விட்டுக் கொடுக்கும் மனது என்று அங்கு உணர்வுகள் அன்பால் மாத்திரம் கொட்டிக் கிடக்கும்.
புதிதாக பேருந்து பயணத்தில் ஒரு நபரை சந்திக்க முதல் நட்பு புன்னகையில் மலர்கிறது அடுத்த அடுத்த சந்திப்பு சிறிது சிறிதாய் நட்பை கசிகிறது.
அந்த நட்பு டீ கடையில் தொடர, பிராண்டி கடையில் தொடர என உயிருக்கு உயிரான நண்பர்களாக்கி இருவீட்டார் நட்பாகி பெண்கொடுத்து பெண்ணெடுக்கும் வரை அந்த நட்பு பலமாகிறது.
இப்படி இந்த நட்பு என்ற உணர்வு நம்பிக்கையின் வெளிப்பாடு. ஆனால் அதனை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்கள் சில சமயங்களில் புரிந்து கொள்கிறார்கள் சில வேலைகளில் கடந்து விடுகிறார்கள் ஆனால் அது நட்பில் இல்லை என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும்.
நட்பு என்ற உணர்வு அவனை புனிதனாக்கி விடும். நட்பு ஒருவர் மீது உள்ளது என்றால் அவரை பற்றி நன்றாக புரிந்து கொண்டுள்ளனர் என்று அர்த்தம். ஒருவரைப் பற்றிய புரிதல் இல்லாமல் அவர் எனது உயிர் தோழனன் என்பது அறிவருப்பு.
அதனை எப்படி நட்பு என்று கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. பலர் இப்படித் தான் நட்பு என்றால் என்னவென்று தெரியாமல் ஏதோ நான்கு நாள் பேசி பழகினாலே நட்பாகி விடும் என்று நினைக்கிறார்கள்.
நட்பு தான் இல்லை யென்று மறுக்க முடியாது என்றாலும் நட்பு என்றால் என்னவென்று விளங்கிக் கொள்ளவாது வேண்டுமே.!
அனைவருக்கும் சிறுவயது நண்பர்கள் பிடிக்காமல் இருப்பது இல்லை. நான்பார்த்த பலருக்கு வாழ்வு முழுவதும் அவர்கள் அதுபோலவே தொடர்வதை பார்த்துள்ளேன்.
அப்படியான நட்புகளை கண்டு பொறாமை கொண்டுள்ளேன். என்று பலர் கூற கேட்டிருப்போம் அப்படி ஒரு நட்பிற்குள் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
அது ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. காதலை போல நட்பும் அன்பின் உணர்வு இரண்டும் தரும் இன்பங்கள் வெவ்வேறு.
காதல் உணர்வு மேலோங்கி கீழிறங்கி நிலையில்லாமல் இரண்டு எல்லைகளையும் மாறி மாறி தொட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் நட்பின் உணர்வு ஒரே நிலையில் பயணிக்கும். அது பாடுபடுத்திப் பார்க்காது.
அதீத உரிமைக் கொண்டிருக்கும். வேற்றுக் கருத்துக்களுக்கு அங்கு இடமிருக்காது. உலகில் வாழும் காலங்கில் இயற்கை கொடுத்த இந்த மகத்தான உணர்வுகளை அனைவரும் அனுபவித்து விடுங்கள்.
காதல், காமம், நட்பு, அரவணைப்பு, அன்பு, நேசம் என்று பலவாறான இரு எதிர் உணர்வுகளும் அனுபவித்துப் பார்க்கவே.
0 Comments
நன்றி