முட்டுக் கொடுப்பவர்கள் அரை வேக்காடுகள்
- Get link
- X
- Other Apps
ஒரு தவறு ஒருவன் செய்வானாகில் அது எத்தகையது என்பதை முதலில் உள்வாங்க வேண்டும். அது கண்டிக்க பட வேண்டியதா இல்லை சொல்லி புரியவைத்து விடலாமா என்று.
தவறுகளின் வீரியம் எத்தகையது என்பதை பொறுத்து அதற்க்கான தண்டனைகளை சமூகம் அரசியல் சட்டம் உருவாக்கி வைத்துள்ளது. அப்படி அந்த சட்டங்கள் முறையானவையா என்பவை அல்ல விவாதம்.
தவறுகளுக்கு கண்டனங்கள் தெரிவிக்கும் போது அது தவறே இல்லை என்று அவர்களுக்கு துணை நிற்பார் சிலர். அது ஏற்புடையது அல்ல.
ஒரு சிறு தவறு தான் என்றாலும் அதனை நிச்சயம் புரியவைக்க வேண்டும். அல்லாது அவர்களுக்கு முட்டுக் கொடுப்பது அவர்கள் வாழ்வை தவறான பாதையில் கொண்டு போய் சேர்க்கும்.
இன்று அவர்கள் துணை நிற்க சிறிய தவறு பெரிய தவறாக மாறும். இன்று இவர்கள் உதவி செய்தது போல அந்த பெரிய தவறிற்கு உதவ முடியாத நிலையில் அவர்களும் தள்ளப் படலாம்.
அண்மையில் காவலதிகாரி ஒரு வேனை நிறுத்தினார். அந்த வேனில் டிரைவர் இறங்கி செல்ல வாகனத்தின் பத்திரங்கள் அனைத்தையும் கேட்க அவரும் அவற்றை அவர்களிடம் காண்பிக்கிறார்.
ஆனால் அவர் அதில் திருப்தியாகாதவரை அவருடைய ஓட்டுநர் உரிமம் கேட்டார் அதையும் அந்த வாகன ஓட்டிக் கொடுத்தார்.
காவலதிகாரிக்கு அவரை எப்படியாவது மடக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது. வாகனத்தை சோதித்தார். வாகனத்தில் இருந்தவர்களை விசாரித்தார். எல்லாம் சரியாக இருக்க சரி நீ கிளம்பு என்று அனுப்பினார்.
ஏதோ நினைத்தவராய் அவனை நில் என்று கூறி அருகில் சென்று உன்னுடைய ஐடி கார்டை கொடு என்று கேட்க அவன் தீய நேரம் அவன் ஐடி கார்டை எடுத்து வர மறந்து விட்டான்.
அவ்வளவு தான் அந்த காவலருக்கு ஆனந்தம். அவந்த ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். என்ன காரணம் என்றால் எப்போதும் ஐடி கார்ட் கையில் இருக்க வேண்டுமாம்.
என்று ஒரு சப்பை காரணத்தை கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மூன்று மணிநேரங்கள் பின் இரண்டாயிரம் காசு வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை ஏன் கூறுகிறேன் என்றால் இதுபோன்ற காவலர்கள் அராஜகம் செய்ய நாம் தான் காரணம். நாம் தான் அந்த அரை வேக்காடுகள்.
முதலில் 100௹ 200௹ கொடுத்து இவர்களை பெரிய ஜாம்பவான்கள் ஆக்கியது நாம் தான். நம் பணத்தில் வாழும் இது போன்ற அரசி அதிகாரிகள் வரம்பு மீறி தான் செயல்படுகிறார்கள்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
நன்றி