இந்த தலைப்பை நான் அணுகுவது முறையாக இருக்கும் ஏனென்றால் எனக்கு சுற்றுலா பிடிக்காது. அது விரைய செலவு என்பதனால் அல்ல அது நம்மை சுற்றியிருப்பவர்கள் மிகைப் படுத்தும் ஓர் கற்பனை எண்ண பிம்பம் அவ்வளவு தான்.
பலர் என்னிடம் கூறுவதுண்டு எனக்கு வாழ்நாள் கனவு பேரிஸ் செல்ல வேண்டும் என்பது, இப்போது காலத்திற்கு ஏற்றார் போல பல இடங்கள் அவர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கும்.
நமது ஊரில் நம்மை சுற்றி அல்லது நமது ஊரை ஊற்றி உள்ள அழகானா காட்சிகளையே நாம் ரசிக்க விரும்புவது இல்லை. இதில் சுற்றுலா என்று ஊர் விட்டு ஊர். நாடு விட்டு நாடு என்று சென்று என்ன ரசித்து விட போகிறார்கள்.
நான்கு நாட்கள் பன்னை தின்னதும் நம்ம ஊரு பழைய கஞ்சி நினைப்பும் அதன் ருசியும் ஊரைப் பார்த்து இழுத்து வந்து விடும்.
தற்போதைய காலங்களில் அலைபேசியில் சோஷியல் மீடியாவில் யாரோ சென்றோ காணொளிகளைக் கண்டு அது அற்புதம் அது பிரமாதம் என்று கூறுவதை நம்பி அவர்களும் செல்லத் துடிக்கின்றனர்.
ஒரே ஒரு கேள்வி தான் கொஞ்சம் கொஞ்சமாகா சேர்த்து வைத்த அந்த பணத்தை சுற்றுலா என்ற பெயரில் விரயமாக்குவது ஞாயமாக படவில்லை எனக்கு. சரி அப்படி அந்த சுற்றுலா உங்களுக்கு என்ன கொடுத்தது.
மன நிம்மதி என்பீர் அது சொன்னால் புரியாது எனலாம் சரி எனக்கு புரிய வேண்டாம் வாழ்வே மாயம் என்ற போது வாழ்நாளில் வாழும் நாட்களில் உலகை சுற்றிப் பார்த்து விட வேண்டும் என்று ஒரு தேவையற்ற பிம்பத்தை மனதில் உருவாக்கிக் கொள்கிறார்கள்.
இப்போது உலகம் மட்டுமல்ல அண்ட சாராசரங்களையே சுற்றிப் பார்க்கலாம் இணையமும் அறிவியலும் அத்தனையையும் நம் கண்முன் நிறுத்தி வைத்துள்ளது.
குடும்பத்தோடு முதலில் ஊரை சுற்றி வரலாம் காலை துவங்கும் பயணம் மாலை வீட்டில் வந்தடையும் படி அமைய வேண்டும்.
0 Comments
நன்றி