முதலில் இப்படி ஆரம்பிக்கலாம் இல்லை இல்லை வேண்டாம் என்று எண்ணி இந்த வரிகளுக்குப் பின் இதனை கூறுகிறேன். என்பது சிறிய ஆசுவாசம் தான் புரியவில்லையோ!
இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது ஆண்கள் மாத்திரம் தான் என்ற விதி ஒன்றை தேவி சீதா தனது தந்தைக்கு காசியில் திதி கொடுத்து அந்த விதியை மாற்றி எழுதினார்.
அதன் படி பாரம்பரியமாக பெண்கள் திதி கொடுக்க சீதா தனது தந்தைக்கு திதி கொடுத்த காசிக்கு செல்கின்றனர். அங்கு சீதா கயா என்ற இடம் பெண்கள் தனது தாய் தந்தையருக்கு திதி கொடுக்கலாம். என்ற கொடுப்பினை அடைய பல மாநிலங்களில் இருந்து பெண்கள் தங்கள் குடும்பத்தினரோடு வருகிறார்கள்.
யாம் வியந்த விஷயம் யாதெனில் அங்கு இருக்கும் புரோகிதர்கள் தென்னிந்திய அனைத்து மொழிகளும் பேசுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் பெண்கள் அங்கு தனது இறந்து போன தாய் தந்தையருக்கு மாத்திரம் தர்ப்பணம் செய்யவில்லை. பதினாறு தலைமுறைக்கு செய்கிறார்கள்.
அது சித்தி, சித்தப்பா அவர்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேரர்கள், அவர்கள் அண்ணன் தம்பி என்று வரிசை நீண்டு கொண்டே போகும் இதில் யாரும் விடுபடுவது இல்லை.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்கள் அனைவருக்கும் அன்று பதினாறு தலைமுறைக்கும் அவர்கள் ஆன்மா முக்தி அடைய பிராத்தனை செய்யும் குடுப்பினை அனைவருக்கும் வாய்ப்பதில்லை என்பது உண்மை.
தர்ப்பணம் கொடுக்கும் போது முன்னோர்கள் ஆன்மா சாந்தி அல்லது முக்தியடைய திதி கொடுப்பவர்கள் ஐந்து காய்கள், ஐந்து பழங்கள் என்று உறுதி அழிக்க வேண்டும் ஏதாவது ஐந்து பழங்கள், மற்றும் காய்கள் அந்த காய், கனிகளை இனி வாழ்நாளில் உண்ணக் கூடாது என்பார்கள் அதனால் நாம் உண்ண முடியாதா பழம், காய் பெயர்களை கூறுவது சிறப்பு.
காசி பயணம் நினைப்பவர்கள் அனைவருக்கும் கிடைப்பது இல்லை. அது இறையருளால் தானாக அமைவது. நீங்கள் நாத்திகரோ, ஆத்திகரோ அதைப்பற்றிய தெளிவு தேவையில்லை.
ஆனால் யாராகா இருந்தாலும் நமக்கு அப்பாற் உள்ள தெய்வ காந்த அலைகளை உணர மறுக்காதீர்கள். உங்கள் அறியாமையையும், ஆங்காரத்தையும் மூட்டைக் கட்டிக் கொள்ளுங்கள்.
காசி ஒரு ஆத்மீக தெய்வீக பயணம்.
0 Comments
நன்றி