ஒரு முறையல்ல வாழ்வில் ஒவ்வொரு முறையும் வெற்றிப் பெற திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். திறன்கள் என்பது எதை எதையோ சாதிக்க வேண்டும் நான்கு பேர்கள் நம்மை பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் சாரலில் இருக்கக் கூடாது.
அது முழுவதும் நாம் என்ன வேலை செய்கிறோம் அல்லது நமக்கு என்ன பிடிக்கும் என்பதை நன்கு தெளிவு படுத்தி அதில் அடுத்து அடுத்து என ஆழ்ந்து செல்ல அதைப் பற்றிய முழுமையான அறிவு தேவை அவற்றை நாம் நமது சொந்த முயற்சியுடன் அவற்றை கற்றுக் கொள்ள வேண்டும்.
கற்றல் என்பது கவனித்தலை முன்னிலைப் படுத்துகிறது, கவனம் அனைவருக்கும் இயல்பாக இருப்பது இல்லை. வாகனம் ஓட்டும் போது அல்லது ஏதோ பயணங்களில் போது இதனை உங்களில் நீங்கள் நிச்சயம் கவனித்து இருப்பீர்கள்.
உங்கள் பார்வை எங்கோ இருக்கும் ஆனால் நீங்கள் உங்கள் மனதின் வாசம் பயணித்துக் கொண்டிருப்பீர்கள், பெரும்பாலோனோர் இதனை நினைவு கூற முடியும்.
அப்படி கற்பனையில் அலைவது இல்லை கவனித்தல் என்பது கண்கள் காண்பதை காதுகள் கேட்பதை கிரக்கங்கள் ஏதுமின்றி மூளை புத்தியின் வழியாக அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் எந்நேரமும் கவனிக்க துவங்கி விட்டோம் என்றால் வினிப்புணர்வு என்பது தானாகா நிகழ்ந்து விடும். அவ்வாறு விழிப்புணர்வு என்பது நம்மில் பிரகாசிக்கும் போதும் அனைத்தும் தானாகா உள்வாங்கிக் கொள்ள முடியும் தொழில் சார்ந்த நம் திறனை மேம்படுத்த முடியும்.
அப்படியாக அனைத்திற்கும் ஆணிவேர் கவனித்தல் என்ற விழிப்புணர்வு…
0 Comments
நன்றி