நாய்களை அறியாத மனித பிறவி ஒன்று வையகத்தில் இல்லை. மனிதனுக்கும் மிருகங்களுக்கும்மான நெருக்கங்களில், மனிதனுடன் மிகவும் நெருங்கி பழகும் ஒரு மிருகம் தான் இந்த நாய்கள்.
கோம்பை, கன்னி, சிப்பிப் பாறை என்று மன்னர் காலத்தில் நாய்களை போருக்குப் பயன்படுத்திய வரலாறும் உண்டு. அன்றாட வாழ்வில் காலை முதல் அன்றாடம் நாம் செல்லும் இடமெங்கும் நம்மை பின்தொடரும் காவல் காரன் என்றால் மிகையாகும்.
அதற்கு என்று ஒரு செல்லப் பெயர் வைத்து அழைப்பது உண்டு பலவேறு பேர்கள் இருந்தாலும் என்னுடைய ஆசை முழுவதும் கறுப்புக் நிறமான நாய் ஒன்றை வாங்க வேண்டும் அதுவும் அவனை கருப்பன் என்று பெயர் வைத்து வளர்க்க வேண்டும் என்பதாகும்.
அது ஒரு அலுவலகம், சைட் ஆபீஸ் ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமாக கடற்கரை பேக் வாட்டர் அருகில் அமைந்துள்ளது.
அந்த அலுவலகத்தில் மொத்தம் ஐந்து பேர்கள் தான் வேலை செய்கிறார்கள் அதில் இரண்டு பேர்கள் உள்ளூர் வாசிகள், மற்றைய மூன்று பேர்கள் வெளியூர் வாசிகள்.
இங்கு இந்த அலுவலக ஊழியர்களை நம்பி நான்கு நாய்கள் அவர்கள் எப்போது வேலைக்கு வந்தாலும் ஓடி வந்து வீட்டு நாய்கள் போல அவர்களை பின் தொடர்வது வழக்கம்.
சுய தேவை தானே ஒவ்வொருவரையும் மற்றொருவருடன் இணைக்கிறது. அதுவும் அப்படித் தானே பலர் கேவலமாக நாயைப் போல அண்டிப் பிழைக்கும் ஆட்கள் என்று பலரை விமர்சிப்பது உண்டு.
அப்படியானால் அனைவரும் நாய்களை போல அண்டிப் பிழைப்பவர்கள் தான். யாரும் இங்கு தனியாக மார்தட்டிக் கொண்டு நானே என்னைப் பார்த்துக் கொள்கிறேன் நான் தான் அனைத்திற்கும் காரணம் என்று கூறித் திரிவார்கள். அப்படி ஒன்று நிகழப் போவது இல்லை மனித துணை இல்லையென்றால் இயற்கையின் துணை
அவ்வளவு தான் இயற்கை அண்டி நாய்ப் போல பிழப்பு நடத்துபவர்கள் என்று தான் அவர்களைக் கூற வேண்டும்.
அப்படி அந்த அலுவலக நாய்கள் விடுமுறை நாட்களில் உணவு இல்லாமல் தவிக்கும் அருகில் உள்ள அலுவலக காவலாளி தினமும் வருவதால் அவர் கொடுக்கும் உணவுகளுக்கு சண்டை தான் நாய்களுக்குள்.
இப்படியான ஒரு வேளையில் தான் அந்த பாராட்டுதலுக்குரிய நிகழ்வும் நடந்தது. பசி பட்டினி இவைகள் எப்படி வருகின்றனவோ அப்படியே கால சுழலில் காமமும் அந்த நாய்களுக்கு சுழன்று விடுகிறது.
பெண் பால் என்றும் இன்பத்தின் பின் பெரும் துன்பம் சந்திக்கும் என்றாலும் அந்த தேவதைகள் அவற்றை விரும்பியே ஏற்றுக் கொள்கின்றன.
அப்படி கருவுற்ற நாய் ஆறு குட்டிகளை ஈன்றிருந்தது. வருத்தம் என்னவென்றால், தாய் பால் கொடுக்கும் அளவு அந்த நாய்க்கு உணவும் இல்லை உடலில் வலுவும் இல்லை. காலத்தின் நிர்பந்தம் பாலில்லாத அந்த காம்புகளை சப்பிக் கொண்டு கிடந்தன அந்த பிஞ்சு நாய்கள்.
மனதில் இறக்கம் இருந்தாலும் சேவை செய்ய பத்தில் ஒரு மனிதன் தானே முன்வருவான். மற்றையோர் விதி அப்படி இருக்கு என்று தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும். அல்லது செய்து கொள்கிறார்கள்.
சில நாட்களில் இரவு வேலைகளில் வேலை இருக்கும் அப்படி ஒரு நாள் இனி வர வேண்டாம் என்றது அந்த ஊழியர்கள் மனம்.
பகல் பொழுதில் அனைவரையும் டிராப் செய்யும் வாகன ஓட்டுநர் கவனம் இரவில் இல்லையே. வேலை செய்பவர்கள் கூட.
உணவுக்காக காத்திருந்த நாய்கள் வாகனம் அலுவலக வாசல் வந்ததும் ஓடி வருவது வழக்கம் அந்த நாய்கள் உடன் புதிய வரவுகளும் தான் சேர்ந்து வருகிறார்கள்
வருவது மட்டுமின்றி வாகனத்தின் டயர்களின்கீழ் ஓடி விளையாட, வாகனத்தை நகர்த்தும் முன் வேலை செய்பவர்கள் டயர்களின் கீழே சென்ற நாய்க் குட்டிகளை விரட்டி விடுவார்கள்.
அல்லது டிரைவர் அதைச் செய்துக் கொள்வார். அலுவலக ஓரத்தில் நிறுத்தி வைக்கப் பட்ட வாகனம் கிளம்பும் முன் ஹார்ன் அடித்து நாய்களை டயர்களின் கீழிருந்து வெளி வரச் செய்து சுதாரீப்பாகா தான் எடுப்பார் டிரைவர்.
இருந்த போதிலும் இனி என் தாய் போல பட்டினி என்னால் இருக்க முடியாது என்று எண்ணியதோ என்னவோ கண்களில் சிக்காதா அந்த நாய்குட்டி டயரில் மாட்டிக் கொண்டது இது அன்றோடு முடியவில்லை என்பது சோகத்திலும் சோகம்.
இப்படி ஒன்று இரண்டு என்றும், இரவு பகலென்றும் அந்த ஆறு குட்டிகளும் இறந்து போய் விட்டது ஆனால் அதில் இரண்டு குட்டிகள் உணவில்லாமல் சோர்ந்து போய் இறந்து விட்டன.
இறக்கம் இல்லாதா அலுவலக ஊழியர்கள்;
அப்படி கூறிவிட முடியாது, ஏனென்றால் அவர்கள் கடைகளில் தங்கள் உணவை முடித்துக் கொள்கிறார்கள். மனதில் குடிகொண்ட பாசம் அடிக்கடி அவைகளுக்கு கடையில் இருந்து உணவு அல்லது பிஸ்கட் பாக்கெட்கள் வாங்கி போடுவது வழக்கம்.
அவர்களும் வேறு என்ன செய்து விடமுடியும். வேலை பிரஷர் அதிகம் கொண்டவர்கள் அதற்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான் முதலாக இருக்கும் அல்லவா!
0 Comments
நன்றி