கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

வெற்றியில் கற்றுக் கொண்ட பாடங்கள்

 தோல்வி தினம் தினம் நடப்பது தான், அப்படிப்பட்ட தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது என்று தான் கடந்து விடுகிறார்கள். ஆனால் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை தோல்வியில் இருந்து அல்ல

ஆம், நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை வெற்றியில் இருந்து. தோற்றுப் போக பல காரணங்கள் உண்டு. ஆனால் வெற்றிப் பெற ஒரே ஒரு காரணம் தான் அது தான் நம்பிக்கை

நம்பிக்கை என்ற ஒன்று போதும். நம்மால் செய்ய முடியாது என்ற செயல்கள் மீது முதலில் பயம் தான் வரும், பயம் பக்தியை உருவாக்கும், பக்தி நம்பிக்கையை தரும், நம்பிக்கை பலத்தை தரும் சில வேலைகளில் அமானுஷ்யங்களையும் செய்யும்.

நம்பிக்கை சாத்தியமில்லா எல்லாவற்றையும் சாத்தியமாக்கும். அது மனித மனத்தின் அகத்தில் இருந்து புது உத்வேகத்தை உருவாக்கும்.

வெற்றியின் காரணம் அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியமானது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

வெற்றி நாம் நினைப்பது போல பலரை தோற்கடிப்பது இல்லை. வெற்றி என்பது தனித்தன்னை. அது பல நிபந்தனைகளை கொண்டிருக்கும். 

முறையான நம் பயிற்சி அந்த வெற்றியை நோக்கி இழுத்துச் செல்லும். நம்மை நாம் அறியாத வரை வெற்றியின் சுவை கிடைத்தாலும் பயன் இல்லை.

நம்மால் என்ன செய்ய முடியும் முடியாது என்று முதலில் நாம் முடிவு செய்ய வேண்டும். அதன் பின் அனைத்தை பற்றியும் ஆலோசனை செய்யலாம்.

ஆதரவு கரம் நீட்ட பல பேர் உண்டு. ஆனால் வெற்றி பெற்ற பின்பு தான் உனக்கான மரியாதை உனக்கு கிடைக்கும். அதுவரை உன்னை யாரும் மதிக்கப் போவது இல்லை.


இந்த உலகம் யாரையும் கணக்கில் கொள்ளாமல் இல்லை, ஆனால் அனைவருக்கும் ஒரு இயல்பை தருகிறது அந்த இயல்பை வைத்து நம்மையும் நம் மனதையும் இயற்கை தான் வழி நடத்துகிறது.

நாம் என்னவோ நம்மை நாம் வழி நடத்தி செல்வதாக எண்ணிக் கொண்டு இருக்கிறோம். 

ஆனால் உண்மை அதுவல்ல வே, வெற்றி உன்னை மீண்டும் மீண்டும் வெற்றிப் பெற செய்யாது. அது ஆனால் மீண்டும் வெற்றி பெற என்ன என்ன செய்ய வேண்டும் என்ற முழு சாத்தியங்களையும் கற்றுத்தரும்.

ஆகையால் வெற்றியை கொண்டாடுவோம் என்பதை கடந்து வெற்றியை ஆராய்வோம்….

Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *