கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

கல் நெஞ்சக் காரி அவள்

தோற்று போகிறேன் அவளிடம் 

 தொலை தூரப் பயணம், வேலை என்று வீட்டை ஏமாற்றிவிட்டு அவளைக் காண விமானம் ஏரியாயிருந்து.

புறப்பட பதினைந்து நிமிடம் தாமதம் ஆகும் என்ற அறிவிப்பு முதல் விமான பயணம் என்பதனால் கொஞ்சம் அச்சம் வேறு, ஒரு வழியாய் விமான பயணம் திருப்தி அள்ளித் தெளித்திருந்தது. 

அந்த நாடும் என் நாடும் பெரிய வித்தியாசம் இல்லை. என்னை சந்திக்க வருவதாக கூறியவளை இன்னமும் காணவில்லை. நீண்ட நேரமாக காத்திருந்தேன்.

என் காத்திருப்பு ஒரு பெண்ணுக்கானது தான் என்பதை எப்படியோ தெரிந்துக் கொண்ட அருகில் இருந்த பெண்மணி சிறு புண்ணகையுடன் பேச துவங்கினார். ஆனால் அவர்களுடைய முதல் வார்த்தை என்னை ஆச்சர்ய பட வைத்துவிட்டது. ஒரு வேளை மந்திரக் காரியாக இருக்குமோ என்று.

“Don’t worry she will come” என்று எனது டேபிள்எதிர் இருக்கையில் அமர்ந்தார். நன்றாக பேசினார் பேச்சி தொடர எங்கே தங்க போகிறீர்கள் என்று கேட்டார். அவளை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாதே!

நான் அவர்களிடம் இல்லை எனக்கு தெரியவில்லை, அவள் வந்த பின் தான் முடிவு செய்யவேண்டும் என்றேன்.

ஒரு வித கேலி சிரிப்புடன், நீங்கள் இங்கு ஐந்து மணி நேரங்களுக்கு மேல் காத்திருக்கிறீர்கள், உங்கள் அழைப்பையும் அவள் ஏற்க்க வில்லை இனியும் அவள் வருவாள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்றாள்.

நான் அமைதியாகவே இருக்க, அவள் தொடர்ந்தாள் அதிகமாக காதலில் ஆண்கள் இந்த போராட்டத்தை சந்திப்பதை நான் பார்த்திருக்கிறேன். பெண்களால் ஒரு ஆணை அவ்வளவு எளிதில் முதல் முறை சந்திக்க மனம் ஒவ்வாது.


அவர்களுக்குள் ஒரு பெரிய தயக்கம் இருக்கும். அதுவும் காதலன் எனும் போது அது எப்படி அவள் மிகைபடுத்துவாள். என்று அவள் தொடர…

நான் இல்லை நீங்கள் சொல்வதை தான் ஏற்க்க மறுக்கவில்லை. இருந்தும் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் நான் இங்கு வந்தது அவளை பார்க்க, அவளை பார்க்க மாத்திரம். 

என் காத்திருப்பு வீணாகாது, நீங்கள் உங்களுக்கு வேறு ஏதும் வேலையிருந்தால் பார்க்கலாம் என்று கொஞ்சம் வேகமாக பேசிவிட்டேன்.

அவள் இருந்தும் அங்கிருந்து நகரவில்லை. அவள் கூறுகிறார் நீங்கள் வீணாக இங்கு காத்திருப்பதற்கு பதிலாக இவ்வளவு செலவு செய்து வந்து வீணாக அமர்ந்து இருக்காமல் இந்த நாட்டை சுற்றிப் பார்க்கலாம் என்றாள்.

காத்திருப்பின் அலாதி இன்பத்தை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். எத்தனை சுற்றுப் பயணமும் இதற்க்கு ஈடாகாது என்றேன். 

ஒரு ஆழ்ந்த புன் சிரிப்புடன் அங்கிருந்து சென்று விட்டாள். 

வெயிட்டர் : கடை மூடும் நேரமாகிவிட்டது இது வரை நீங்கள் எதுவும் ஆர்டர் செய்யவில்லை, யாருக்காகவோ காத்திருக்கிறீர்கள் என்று அறிகிறேன். விரைவில் நீங்கள் அவர்களை சந்திக்க வாழ்த்துகிறேன் என்று அங்கிருந்து நகர்ந்தார்.

நான் கொண்டு சென்றிருந்த அந்த தோள் பையையும் அவளுக்காக பல பரிசுகளை வாங்கி வைத்திருந்த அந்த காதல் சுமையையும் நேசத்தோடு இழுத்துக் கொண்டு அங்கிருந்து எழுந்தேன்.

எதிரே ஒரு கார் வந்து நின்றது. காலையில் என்னிடம் பேசிக் கொண்டிருந்த அந்த பெண் காரில் இருந்து வந்தார் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே என்ன சார் ஊருக்கு கிளம்பிட்டிங்களா என்றாள். 

நானோ இல்லை கடை அடைக்க போகிறார்களாம் அதான் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அமர செல்கிறேன் என்றேன். 

அவ்வளவு சிரம பட வேண்டாம் என்று காரில் இருந்து ஒரு குரல். அது வேறு யாராக இருந்திட கூடும்!

எனது காதலை இப்படி சோதித்திருக்க வேண்டாம் அவள்… 

“அவள் கல் நெஞ்சக் காரியில்லை என் காதல் ராணி”


Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *