Padine kumar(பாடினி)
- Get link
- X
- Other Apps
பொதுவான பேச்சி, எதையாவது பேச வேண்டுமே என்றாக கூட இருக்கலாம். இன்றைய காலம் எவ்வளவோ மாறிவிட்டது. நாம் படித்த படிப்பு சார்ந்த வேலையை தான் செய்ய வேண்டுமென்றும் என்ற கட்டாயம் இல்லை.
நமக்கு எந்த வேலை பிடித்திருக்கிறதோ அதனை தாராளமாக செய்ய சுகந்திரம் இருக்கிறது. முன்பு காலங்களில் படித்த வேலை கிடைக்க வில்லை என்றால் கிடைத்த வேலையை படித்துக் கொள், அப்படியே பிழைத்துக் கொள் என்பார்கள்.
இல்லையென்றால் மாடுதான் மேய்க்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் மாறிவரும் காலம் ஒரு வேலை செய்பவர்களையும் கற்றலில் ஆர்வம் குறைந்து அவர்களை பிரபலம் ஆக செய்கிறது.
பின்னொரு நாளில் பணம் மட்டுமே அத்தியாவசியம் என்ற பணத் தேவையை நோக்கி நகரச் செய்கிறது.
அப்படியே மாடல் அழகிகள் சினிமாவிற்கு தேர்வானா காலங்கள் கடந்து இன்று யார் வேண்டுமானாலும் நாயகிகள் ஆகலாம், அல்லது நாயகன் ஆகலாம் என்ற தீர்க்கத் தனமான நம்பிக்கையை இணையம் செய்து வருகிறது.
பல மருத்துவ பெண்கள் நடிகைகளாக வலம் வருவதை பார்க்க முடிகிறது. சாய் பல்லவி தொடங்கி இன்று சமூக சோஷியல் மீடியா நடிகைகள் வரை பலர் டாக்டர்.
பிறகு ஏன் இந்த நடிப்பு ? இன்றைய தலைமுறைகள் தொழில் என்று ஒன்று மற்றுமொன்று பேஷன் என்று இரண்டு வகையாக வேலையை பிரிக்கிறார்கள்.
படித்த வேலையை செய்வது தொழில் வருமானத்திற்காக அப்படியே பிடித்த ஒன்றை செய்வது மன திருப்திக்ககா பல ஆண்கள் இயக்குனர் அல்லது போட்டோ கிராபர் கேமரா மேன் கனவுகள் இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது.
ஏதாவது ஒன்றை சிறப்பாக செய்தால் போதும் என்ற நிலை மாறிவிட்டது. நமக்கு எல்லாம் பிடித்தது என்றால் விளையாட்டு தான் தொழில் என்றால் வேலை மற்றைய நேரங்கள் முழுவதும் விளையாட்டு தான்.
இன்று கல்லூரி அல்லது பள்ளி படிக்கும் இளைஞர்கள் இணையம் வழி சம்பாதிக்கிறார்கள். போகிற நிலையில் உணவை யார் தயாரிக்கப் போகிறார்கள் என்பது கவலையாக உள்ளது.
உணவை விட்டுத் தள்ளுங்கள் பஞ்சம் பசி பார்த்த சனம் என்று பாடினால் போதும், வார்த்தைகளுக்கு வசப்படும் மனிதர்கள் வாழ்வை இழந்து நிற்கிறார்கள்.
ஆனது ஆகட்டும், மருத்துவம் படித்து விட்டு இருக்கும் நோய்களுக்கு நான்கு மருந்துகளை மனப்பாடம் செய்து படித்து விட்டு வரும் நோயாளிகளுக்கு அவற்றைக் கொடுத்து நானும் டாக்டர் என்று மார் தட்டிக் கொள்வதில் என்ன பெருமை.
ஒன்று மருத்துவராக பணியாற்றி வரும் நோயாளிகளை நன்கு ஆராய்ந்து நோய்க்கு மூலம் என்ன என்பதை அறிந்து தகுந்த மருந்து கொடுக்க வேண்டும். சில நோய்கள் அவர்கள் இருப்பிட சுற்றுச் சூழல் கூட காரணமாக இருக்கலாம்.
நோய்களின் வெளித் தோற்றம் கண்டு மருந்துகள் கொடுத்து விட்டு. முழு நேர நடிகர், நடிகைகளாக வலம் வராதீர்கள்.
ஒன்று மருத்துவத்தை முழுமையாக பாருங்கள் இல்லை என்றால், நடிகையாக முழு நேரத்தை எடுத்துக் கொண்டு சிறந்த நடிகைகளாக மாறுங்கள்.
மக்கள் வாழ்வை மேம்படுத்த மருத்துவம் படித்த உங்களால் முடியவில்லை என்றால் படித்த படிப்பு என்பது நிச்சயம் பயனற்றது தான்.
மருத்துவ துறை அதி நவீன வளர்ச்சிப் பெற்று மூளையில் நியூரோ சிப் பொருத்தும் அளவு வளர்ந்துள்ளது. நாமும் நம்மை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
மருத்துவத்திலே அதிக வருமானம் இருந்தும் அனைவருக்கும் இன்றைய காலத்தில் அனைவரும் பிரபலம் ஆக வேண்டும் என்று தங்களை வருத்திக் கொள்கிறார்கள்.
உணவை குறைத்துக் கொண்டு முழு நேர உடற்ப்பயிற்சி செய்து மாரடைப்பு ஏற்படும் அளவு அனைவரும் வரம்புகளை மீறி உயிரை விடத் தயாரா உள்ளது இன்றைய இணைய, இளைய தலைமுறை.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
நன்றி