கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

யார் இறந்தால் என்ன?

 வாசல் வரை வழியனுப்பும் மனைவிகள் ஏராளம் உள்ள ஊரில் வாசல் தாண்டி கணவன் வேலை செய்யும் இடம் வரைக்கும் வழியனுப்பவும் தயங்காதவள் தான் மகேஸ்வரி. வைராக்கிய காரிதான்.

கடுகு சிருந்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ற அவள் உடலைமைப்பு. பதினொரு வயது மதிக்கத் தக்க ஒரு குமரனின் உயரம் இருப்பாள் மகேஸ்வரி.

ஆனால் நடையில் அவள் வேகம் வேறு யாரும் ஈடுகொடுப்பது அத்தனை சாத்தியமில்லை. கோளாறு என்னவென்றால் அவள் கண்கள் நேராக சாலையை கவனிக்காது. அக்கம் பக்கம் என சிப் செயலிழந்த எந்திரன் ரோபோ வின் தலை சுற்றுவது போல மேய்ச்சல் கொள்வாள்.

அதே வேகத்தில் அடுத்த தெரு கடந்து, கமலா, மாலா என ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று கடந்து வந்த பாதையில் யாரையாவது அவர்கள் வளர்ச்சிக் கண்டு குறை கூறாமல் செல்ல மாட்டாள். 

பதினொரு வயது சிறுவன் உயரம் என்றாலும் 25வயதில் இரண்டு மகன்கள் உண்டு. மகன்கள் படிப்பை முடிக்க தான் காத்திருப்பு என்பது போல படித்து முடிக்கவும் ஊரில் யார் கை, காலிலாவது விழுந்து வேலை வாங்கி விட வேண்டும் என்ற ஆக்ரோசம் நிறைந்த அவள் அதையும் செய்து முடித்தாள்.


ஊரிலே யாரும் விரும்பாதா ஜீவன் இருந்தும் யாரும் விலக்குவது இல்லை. கணவன் மணி அவர் மேஸ்த்திரி ஊரில் அவரை தெரியாதவர் யாரும் இல்லை எனலாம்.

அவரது சிறப்பு கடமை மாத்திரம் தான், யார் இறந்தாலும் அவர் அதில் பங்கு கொள்ளவதில்லை அவரைப் பொறுத்தவரை வேலை தான் முக்கியம் அவருக்கு.

அப்படி ஊரில் நம்ம வைத்தாலும் யார் வீட்டுக் கதையாக இருந்தாலும் ஊர்த் திண்ணை அவற்றை உறிந்து விடுமே! அப்படித்தான் மணியின் கதையும்.

மணிக்கு திருமணமாகிய ஆரம்ப காலம் அது. மகேஸ்வரி அவ்வளவு அழகு எல்லாம் கிடையாது தோல் வெளுப்பு என்றாலும் தலை உடலை விட கொஞ்சம் அளவு வேறுபடும் அதிகமாக. எப்படியிருந்தால் என்ன திருமணம் ஆன பின்பு என்ன ரசனை. மணியோ மகேஸ்வரியிடம் காதலில் விழுந்தார் காதல் நாளடைவில் மனைவிக்கு அடிமையாக்கி விட்டது எனலாம். 

இப்படி திருமணமானா புதிதில் மணியின் நண்பன் ஒருவன் இறந்து போக, இறப்பிற்கு செல்ல மணி தயாரானார் ஆனால் அவன் மனைவி அவனை போக அனுமதிக்கவில்லை. அவன் மீதானா அக்கறை என்று கூறமுடியாது.

அக்கறை அவன் வேலை மீது. மணியை எகிரி பார்த்து மாதம் ஒன்று இரண்டு மரணம் நிகழும் அதற்க்ககா வேலைக்கு போகாமல் லீவு எடுத்தால் நம் பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று மணியிடம் கேட்க? அதுமட்டுமில்லாமல் நான் தான் வீட்டில் இருக்கிறேன் நான் போய் வருகிறேன் நீங்கள் வேலைக்கு செல்லுங்கள். 

யார் இறந்தால் என்ன நம்பிள்ளைகளுக்கு நாம் தான் சேர்த்து வைக்க வேண்டும். இறந்தவனா நமக்கு உதவி செய்வான் என்று கூறி மணியை ஒவ்வொரு முறையும் வேலைக்கு அனுப்பி விடுவாள். அதுவும் வழக்கமாக போகும் வழி அல்லாது காடுவழியாக வீட்டின் கொல்லை புறத்தில் இருந்து கிளம்புவான் மணி.

பலர் கூறுவதுண்டு இவன் செத்தா எவன் போவான் இப்படி பணம் பணம்னு திரியுறான் என்று. ஆனால் பாவம் மணி என்னவோ கைப்பவையாகவே மாறிவிட்டார். 

ஊர் என்பது நமது பாதுகாவல், ஊரிலுள்ள அனைவரும் ஏதோ ஒரு வகையில் உறவினர்கள் தான் ஆகவோ சுப நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளவில்லை என்றாலும், துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பார்கள். 

நாளைக்கு நமக்கும் நாலு சனம் வேண்டும் என்பதற்காக என்ற சுயநலம் மாத்திரம் கொண்டு இல்லை, நம் குடும்பத்தினர் சூழ்நிலைகளில் ஊர் மக்கள் தான் வந்து நிற்பார்கள்.

Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *