கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

விசம்

 எண்ணும் அனைத்தையும் கூற வேண்டுமென்ற எந்த கட்டாயமும் யாருக்குமில்லை. இருந்தும் சிலரால் அவற்றை கட்டுப்படுத்தி விட முடியாது.

மனதின் அழுத்தம் காரணமாக அவர்களால் எண்ணங்களை அதிகப்படியாக கோர்வையாக கடந்த முடிவதில்லை. ஆகையால் தோன்றியவற்றை உடனே பேசி முடிக்கிறார்கள். 

என்ன பேசுகிறோம் என்று கூட அவர்கள் அக்கறை கொள்வது இல்லை. பல வேலைகளில் நெருங்கிய சிலருடன் பலர் பெரும் சோகங்களை கொட்டித் தீர்ப்பதாகவே எண்ணிக் கொண்டு இப்படி தலைகால் இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள்.


பேசுவது என்றால் அதில் அர்த்தம் இருக்க வேண்டும். அர்த்தமற்ற வார்த்தைகள் எதற்க்கு. ஏதோ பேச வேண்டுமென்று பேசியவற்றையே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருப்பவர்களும் உண்டு.

நண்பர்கள் கூடிய மாலை விருந்து அது அங்கு மது போதை தலைக்கு ஏறிய ஒருவன், அருகிலிருந்தவனை பார்த்து “நீ யாரு தெரியுமா எனக்கு? நீ என்னோட உசுரு மச்சான் உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் தெரியுமா” என்றான் அடுத்து கொஞ்சம் நேர அமைதியில் மற்றவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.

தொங்கிய தலையை உயர்த்திக் கொண்டு “மச்சான் நீ யாரு தெரியுமா எனக்கு” என்று ஆரம்பித்தான் இங்கு என்னவோ இரண்டாம் முறை தான் அங்கு அது பல பத்துகளை கடந்து விட்டது. இருந்தும் அவன் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்பார்கள் அது நட்பு.

என்றான போதிலும், விஷம் கலந்த வார்த்தைகளை சிலர் வெளிப்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகிறது.

இப்படி பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்வையும் செம்மையாக வாழ மாட்டார்கள், யாரையும் வாழவும் விட மாட்டார்கள். அவர்கள் தேவை எல்லாம் யாரையாவது பற்றி அவதூறு பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

அதில் அவர்களுக்கு ஒருவித அலாதி இன்பம், பலவகையான மனிதர்களை காணமுடிகிறது. சிலர் பிறர் அவர்களுக்கு தீங்கு விளைவித்தாலும் அவர்கள் அதனை பெரிதாக வெளிக் காட்டிக் கொள்வதில்லை, மனதிலே வைத்துக் கொள்கிறார்கள்.

பலர் அவர்களை பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் துடிக்குறார்கள். சிலர் அவற்றை பிறரிடம் கூறி தங்களை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார்கள்.

எத்தைய உணர்வை வெளிப்படுத்தினாலும் அனைவரும் பாதிக்கப் பட்டவர்கள் தான். பேச்சில் விஷம் என்பது வார்த்தைகளில் நயவஞ்சகம் இருக்கும்.

என்றோ செய்த தவறுகளை சாடையாக சுட்டிக் காட்டிக் பேசுவார்கள். அது மட்டுமல்லாமல் பலர் வீடுகளுக்கு சென்று அவர்கள் குறைகளை வெளிப்படையாக முக பாவனையை மாற்றிக் கொண்டு இத்தனை வருசம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையா ஏதாவது பாவம் பண்ணிருப்பீங்க என்று சொல்லி விடுவார்கள்.

வார்த்தைகள் ஒருவரை எத்தனை ஆழம் பாதிக்கும் என்ற அறிவு இல்லாதவர்கள் அவர்கள்.

பல பேச்சுகள் கேட்டு, பிறரை பேசி பின் வருந்தி எத்தனை காலம் மனித சமூகம் இப்படியே போகும். 

எந்திரங்கள் வரும் தெளிவாக பேசும். தேவையற்ற பேச்சுகளை அவைகள் பேசப் போவது இல்லை. 

Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *