கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

பணம், பதவி எல்லாம் !

அரவிந்திற்கு வயது பதின்மூன்று இருக்கும். யாரும் அறிவுரை கூறாமலே அவனாகவே அவனது வீட்டு அருகில் உள்ள கோவில் வளாகத்தில் நடைபெறும் சிலம்பம் பயறிச்சியில் சேர்ந்தான்.

குருவை மிஞ்சிய சிசியன் என்பது போல சிலம்பத்தில் வேகமாக தேர்ந்தான் ஓராண்டு முடுவு பெற அவன் சிலம்பத்தில் அசாத்திய வேகம் கொண்டு ஊடுருவும் கட்டைகளை துவம்சம் செய்யும் அளவு அசாத்தியா சிலம்ப விளையாட்டு வீரனான்.

சிலம்பம் ஆசிரியர் அவனை கண்டு பெருமைக் கொண்டார் அவனால் பல ஊர் மாணவர்கள் இங்கு வந்து சிலம்பம் கற்க ஆர்வம் கொண்டனர். 

மாணவன் எவ்வளவு சாமர்த்தியவானாக இருந்தாலும் பெருமை என்னவோ குருவிற்கு தானே. குருவின் வளர்ப்பு தானே! அதனை யாரும் மறுக்க முடியாது என்றாலும், ஒவ்வொரு தனித் தனி மாணவனும் அவனது தனித் திறமைக்கு ஏற்றார் போல யுக்திகளை கையாள பழக்கப் படுவார்கள்.

அரவிந்திற்கு அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பது ஆசானின் எண்ணம், ஆகையால் அவர் நல்ல நாள் ஒன்றை தேர்வு செய்து மாலை கோவில் பூஜை முடிந்த பின்னர். கோவில் வளாகத்தில் சிலம்பம் அரங்கேற்றம் நிகழ்ச்சி துவங்கியது.



சிறுவர்கள் பத்து வயதிற்குள் உள்ளவர்கள் அடுத்து இருபது, முப்பது என்று பத்து வயது வித்தியாசத்தில் தனிப் பிரிவினராகா ஒவ்வொரு அணியினரும் சிலம்பம் விளையாட்டில் கைத் தேர்ந்தவர்கள் பல விளையாட்டுகளை விளையாடி ஊர் மக்களை ஆச்சர்யப் படச் செய்தனர்.

அரவிந்த் முதலில் சிலம்பத்தில் குருவணக்கம் செய்வது வரை அவருடைய ஆட்டம் சாதாரணமாக இருந்தது பக்தியோடு குருவை வணங்கி துவங்கிய ஆட்டம் அவனை யாராலும் கட்டுப் படுத்த முடியவில்லை. கர கோஷம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.

அரவிந்த் குறைந்தது நாற்பது நிமிடங்களுக்கு மேல் சிலம்பம் சுற்றியிருப்பான் வயது பன்னிரெண்டு என்றாலும் வேகம் இருவது வயது உடையவனைப் போல இருந்தது. 

கடைசியாக அவன் சிலம்பை சுற்றி முடித்து அருகில் இருந்த ஒருவரிடம் சிலம்பை ஒப்படைக்க. இரு வீரர்கள் கட்டு மஸ்தானா உடம்புடையவர்கள் வந்து நின்றனர். இருவரும் தங்களது கால்களை மடக்கி கொஞ்சம் அகட்டிய கால்களுடன் நின்றுக் கொண்டு இரண்டு கால்களுக்கு நடுவில் கைகளை மடக்கி தரையில் வைத்தார்கள். 

அரவிந்த் ஒவ்வொருவர் கையிலும் மூன்று சுழல்சுற்றி. அனைவரையும் ஆச்சர்ய படச் செய்து விட்டான். அவர்கள் கால்களுக்கு இடையே வைத்திருக்கும் இரு கைகள் மீது அரவிந்த் தனது ஒற்றைக் காலை வைத்து அவர்கள் தோளை பிடித்து நிற்பான் இருவரும் ஒத்து கைகளை தூக்க அரவிந்த் ஆகாயத்தில் சென்று மூன்று குட்டிக் காரணங்கள் அடிப்பான் நான்காவது சுழல் பூமியில் கால்களைப் பதித்து கொள்வான்.

அவனை பாராட்டாத யாரும் இல்லை. அன்று அவனது அரங்கேற்றம் பலரால் பேசப்பட்டது. 

ஒரு சிறு வயதில் அத்தனை வாழ்த்துக்களை பக்குவமாய் ஏற்றுக் கொள்ளும் தன்னை இல்லை தான்.

பாராட்டுகள் எவ்வளவு குவிந்தனவோ அவ்வளவு பெண்கள் அவன் மீது மையல் கொண்டனர். அவனது தோற்றம் கூட ஒரு வித காரணமாக இருக்கலாம்.



விளையாட்டில் எவ்வளவு வேகமாக சிறந்தவன் என்ற பெயரை பெற்றானோ அத்தனை வேகமாக பொறுக்கி என்ற பெயரையும் வம்படியாக வாங்கி சூட்டிக் கொண்டான் எனலாம்.

பள்ளி ஆசிரியரை எதிர்த்து பேசியது, சக மாணவனை அடித்தது, ஊருக்கு ஒதுக்கு புற மாந்தோப்பில் பெண்களுடன் உல்லாசம் என பதினேழு வயதில் அவன் முழு வாழ்வையும் வாழ துவங்கிவிட்டான். 

அனைத்திற்கும் காரணம் அவன் பெற்ற பெயரும் அவனுடைய வீரமும் எனலாம். கொஞ்சம் கொஞ்சமாக பெண்களுக்கு மட்டுமில்லாமல் கள்ளுக்கும் அடைமையானான். 

எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறமையுடைய அவன் வாகனம் ஓட்டவும் தனது மூத்த சகோதர்களிடம் இருந்து கற்றுக் கொண்டான். அன்று சிமோந்து மூட்டைகளை டெம்போவில் ஏற்றிக் கொண்டு அறுபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கட்டிட்கத்திற்கு கொண்டு செல்ல அரவிந்த் அழைக்கப்பட்டான்.

அவன் அருகில் வழக்கமாக லோடு கொண்டு செல்லும் போது வீட்டுக் காரர்களிடம் பணம் பெற்றுக் கொள்ள கடையில் இருந்து ரவி செல்வது வழக்கம்.

அரவிந்த் ஊர் சாலையை கடந்து முக்கிய இணைப்பு சாலை வந்ததும் டெம்போவை வேகமாக செலுத்தினன். அருகில் இருந்த ரவி கொஞ்சம் மெதுவா போ…போ என்று கூறியவண்ணம் உள்ளார், அரவிந்த் கேட்பதாக தெரியவில்லை. அவர் வேகத்தை குறைக்கச் சொல்ல சொல்ல அவன் வேகத்தை அதிகமாக்கிக் கொண்டே இருந்தான்.

அதிக லோடு இருந்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் டெம்போ அவன் கட்டுப் பாட்டை மீறியது. எதிரே வந்த லாரி மீது மோதியது. அதிஷ்டவசமாக அருகில் இருந்த ரவிக்கு எந்த காயமும் இல்லை. டெம்போவில் மேல அமர்ந்திருந்த லோட் மேன் இருவருக்கும் பலத்த காயம்.

அரவிந்திற்கு ஸ்ட்ரிங் இடையே மாட்டி அவனது இடது கால் எலும்புகள் பல துண்டுகளாக நொறுங்கியது. இடுப்பு எலும்பும் கூட உடைபட்டது. அவன் சீட்டின் இடைய மாட்டியிருந்தான் வாகனம் அவன் பக்கமாக சாய்ந்து கிடந்தது முன்பக்க கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக நொறுங்கி இருந்தது.

அரவிந்த் ரவியை உதவிக்கு அழைக்க அவர் அவனது நெருங்கிய கால்களை பார்த்து பயந்து ஓடி விட்டார். முழுக்க முழுக்க அரவிந்த் அவனுடைய மன தயிரியத்தில் நெருங்கிய கால்களை கைகளால் தூக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வெளியே வந்தான். அங்கு சுற்றி வந்தோர் அவனை கண்டு மெய் சிலிர்த்தனர். 

பின் ஆம்புலன்ஸை வரவழைத்து அவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

ஊர் முழுக்க பேச்சு அவன் பிழைப்பது கடினம் என்று. யார் என்ன பேசினாலும் காலம் ஒரு கணக்கு வைத்திருக்கும் அல்லவா. அவன் மன உறுதி அத்தகையது பிழைத்துக் கொண்டான் வாலிப வயது என்பதனால் ஒரு வருடத்தில் முழுவதும் இல்லாவிட்டாலும் துணைக்கு ஒரு கையில் கம்பு ஒன்றை வைத்துக் கொண்டு நடக்க துவங்கினான்.

அவன் அப்போதும் சும்மா இல்லை. ஒரு காலில் முழுவதும் கம்பி வைத்து ஆபரேஷன் செய்யப் பட்டுள்ளது. கம்பிகள் அனைத்தும் வெளியில் கொஞ்சம் நீட்டப் பட்டு இருந்தது. எழுந்து நடக்க துவங்கியவன். மீண்டும் மாந்தோப்பு மங்கையரை சந்திக்க துவங்கினான். 

பின் காலம் நகர நகர இரண்டு மூன்று வருடங்களில் முழுவதும் குணமாகி வாகனம் ஓட்ட துவங்கினான். அதுவும் கல்லூரி வேன். பெண்கள் கல்லூரி வேறு அவன் அசாத்திய பேச்சு திறமையால் அங்கும் பல பெண்கள் அவனை வட்டமிட அங்கு அவன் ஒருத்தியிடம் காதலில் கைதானான்.



பின் அந்த பெண் வீட்டார் சம்பதம் இல்லாமல் அவளை திருமணம் செய்து பழைய பழக்கங்களை எல்லாம் தவிர்த்து அவளுக்காக வாழ ஆரம்பித்தான்.

அதன் பின் குடும்பம் என்று ஆன பின் அவன் எண்ணம் எல்லாம் பணம் பணம் என்று ஆனது. அவன் செய்ய முயலாத தொழில் இல்லை ஆனால் உழைக்காமல் இல்லை அவன் கடின உழைப்பு அவனை படிப் படியாக உயர்த்தியது. 

திருமணம் ஆன ஓராண்டில் பெண் குழந்தை பெற்றெடுத்தான். பெண் என்றாலே மகாலஷ்மி தானே அவள் வந்த நேரம் வெகு வேகமாக வளர்ந்தான். மனைவியை படிக்க வைத்தவன் அவளை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பினான். அங்கு நல்ல வருமானம் அவளுக்கு என்று மிகவும் சந்தோசமாக நகர்ந்தது அரவிந்தின் வாழ்கை.

பணம், பணம் என்ற அவனது ஓட்டம் தற்போது பணம்வந்ததும், பதவி, பதவி என்றாக ஒரு கட்சியில் சேர்ந்தான் பொறுப்புகள் கிடைக்க பணம் கைமாற்றப் பட்டது. பதவி வந்தவனுக்கு முன்னாள் காதலி ஒருத்திக்கு உதவும் நிலை வந்தது. 



அரவிந்தின் மனைவியோ வெளிநாட்டில் இருக்க. வாடிய செடி ஒன்று பல ஆண்டுகள் கழித்து இங்கு துளிர் விட ஆரம்பித்தது. முன்னாள் காதலியிக்கு இரண்டு குழந்தைகள். அவள் கணவன் இறந்து விட்டான் என்றாலும் அவளுக்கு கோடிக் கணக்கில் சொத்துக்களை சேர்த்து விட்டான். 

அரவிந்த் காலம் இது என்பது போல் அவனுக்காக வந்து அமைகிறது. அவன் ஊர் அறிய முன்னாள் காதலியுடன் பழக அது அரவிந்தின் மனைவிக்கு தெரிய வருகிறது. அவள் வெளிநாட்டில் வேதனை அடைகிறாள். 



இவன் இங்கு உல்லாசம் கொள்கிறான் முன்னாள் காதலியிடமிருந்து அதிக அளவு பணத்தை பெறுகிறான் அவளுக்கு பேராசையை ஊட்டி, இவன் அரசியல் ஆதாயம் அடைய அடைய அவன் கண்கள் அறியாமல் அவன் குடும்பம் சிதைவதை அவன் காண மறுக்கிறான். பதவி ஆசை அவன் கண்களை மறைத்து அவனை மூடனாக்கி கொண்டுள்ளது.

கடைசியில் அவன் நினைத்த மாநில அந்தத்தை பெற முடியவில்லை என்றாலும் அவன் வாழ்ந்த ஊரில் அவனை அறியாதவர் யாரும் இல்லை. நினைவில் வைக்குமளவு நல்லது செய்தது குறைவு என்றாலும் மக்கள் மனதில் ஒருவன் செய்த கெடுதல் என்றும் மறக்காது அந்த இடத்தில் அவனும் நிரப்பிக் கொண்டான். 

Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *