Posts

Showing posts from July, 2023

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

Image
  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்...  பிறப்பின் சூ

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *