Posts

Showing posts from January, 2021

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

இயற்கையோடு உறவாடுங்கள்

Image
இயற்கை நமக்கு கற்று தரும் பாடங்கள் அநேகமாகும் பஞ்சபூதங்கள் என நமது முன்னோர்கள் நல்லதொரு பெயரும் கொடுத்து சென்றனர் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஏன் பூதங்கள் என்றனர் என்று சிந்தித்தால் ஆம் காரணம் இருக்கின்றது பொதுவாக சிவனுடனான பூதங்கள் அன்பானவை அவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை அதே சமயம் மிகுந்த ஆபத்தானவைகளும் கூட அவர்களை சீண்டி விட்டால் நாம் அவ்வளவு தான். அதனால் தான் என்னவோ இவை ஐந்தையும் பூத வம்சத்தில் சேர்த்திருக்கின்றனர் போலும். நமது கற்பனைகளை தூண்டி விடும் அற்புத ஆற்றல் கொண்டது இந்த இயற்கை. மாலை நேர குளிர் காற்றும் அந்த நேரத்தில் வானத்தின் அற்புத காட்சிகளும் நம்மை நாமே மறந்து ஒரு காலம் கடந்த நினைவுகளின் பயணத்திற்க்கு கொண்டு சென்று விடும்.          ஆம் இதனை யாராலும் மறுக்க முடியாது. இயற்கையையும் மனைதனையும் பிரிக்கவே முடியாது அதனை நாம் உணர மறுக்கக்கூடாது வெறும் 21% நிலபரப்பு மட்டுமே கொண்ட இந்த பூமியை சுற்றி கடல் சூழ்ந்துள்ளது எந்த நேரத்தில் இயற்கை நினைத்தால் ஒரு நொடி பொழுது போதும் அனைவர் உடலும் அமிலம் ஊறச் செய்திருக்கும். இருந்தும் மனிதன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *