இயற்கை நமக்கு கற்று தரும் பாடங்கள் அநேகமாகும் பஞ்சபூதங்கள் என நமது முன்னோர்கள் நல்லதொரு பெயரும் கொடுத்து சென்றனர்
நிலம்
நீர்
நெருப்பு
காற்று
ஆகாயம்
ஏன் பூதங்கள் என்றனர் என்று சிந்தித்தால் ஆம் காரணம் இருக்கின்றது பொதுவாக சிவனுடனான பூதங்கள் அன்பானவை அவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை அதே சமயம் மிகுந்த ஆபத்தானவைகளும் கூட அவர்களை சீண்டி விட்டால் நாம் அவ்வளவு தான்.
அதனால் தான் என்னவோ இவை ஐந்தையும் பூத வம்சத்தில் சேர்த்திருக்கின்றனர் போலும்.
நமது கற்பனைகளை தூண்டி விடும் அற்புத ஆற்றல் கொண்டது இந்த இயற்கை. மாலை நேர குளிர் காற்றும் அந்த நேரத்தில் வானத்தின் அற்புத காட்சிகளும் நம்மை நாமே மறந்து ஒரு காலம் கடந்த நினைவுகளின் பயணத்திற்க்கு கொண்டு சென்று விடும்.
ஆம் இதனை யாராலும் மறுக்க முடியாது. இயற்கையையும் மனைதனையும் பிரிக்கவே முடியாது அதனை நாம் உணர மறுக்கக்கூடாது வெறும் 21% நிலபரப்பு மட்டுமே கொண்ட இந்த பூமியை சுற்றி கடல் சூழ்ந்துள்ளது எந்த நேரத்தில் இயற்கை நினைத்தால் ஒரு நொடி பொழுது போதும் அனைவர் உடலும் அமிலம் ஊறச் செய்திருக்கும். இருந்தும் மனிதன் இயற்கைக்கு மாறாக எவ்வளவு கெடுதல்கள் செய்தும் இயற்கை நீண்டதொரு பெரும் பொருமையை கையாழுகின்றது.
இந்த பொருமை எத்தனை நாட்கள் என்று தெரியாது பல முறை அதன் கோவத்திற்க்கும் நாம் ஆளானப் பிறகும் இன்னும் நாம் திருந்தியபாடில்லை.
மனதை உலக மாந்தரோடு ஓடச் செய்யாதீர்கள் மனம் எப்போதும் இயற்கையோடு இசைந்திருக்கட்டும் அப்போது கவலைகளை மறந்து மனம் இனம் புரியாத ஒரு ஆனந்தத்தை அனுபவிப்பதை நீங்கள் உணர முடியும் அது தான் இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு அதனை ஓர் நாளும் இழந்து விடாதீர்கள் மனம் என்ற ஒன்று இருப்பதால் மட்டுமே தான் நாம் மனிதன் ஆகின்றோம் மனம் சித்தத்தோடு இணைந்திருப்பின்
அதன் பலம் இயற்கைக்கு ஈடானது, பஞ்சபூதங்களையும் தன்வசம் இணைத்திடும் பாலம் அது, நீங்கள் அரும் பெரு தவஙகள் செய்ய தேவையில்லை.
வாழும் வரை இயற்கையை போற்றி வணங்கி பிறர் மனம் புண்பட காரியம் செய்யாது தன்னை தான் ஒரு கட்டுபாட்டுக்குள் இயக்க கற்று கொண்டறிந்தால் போதும் உன்னை கட்டுபடுத்த அறிந்த உனக்கு அதன் பின் உலகத்தை கட்டு படுத்தும் ஆசை வாராது.
நீ நடப்பதை நடக்க விட்டு கடல் அலைகளை ரசிக்கும் மனிதன் போல் ஓரமாக இருந்து அதனை ரசித்துக் கொண்டு இருப்பாய் உலகம் என்றும் அழிய போவது இல்லை
இருப்பினும் இயற்கைக்கு நாம் செய்யும் இடையூரு நம்மை அழியச் செய்து விடும் அவ்வளவே.
என்றும் அன்புடன்
இவன்
Nice
ReplyDelete