உன்னை நினைத்து

உன்னிடம் காதல் சொல்ல !
உன்னை வர்ணித்து கவிதை சொல்ல !
உன்னை நேசிக்க !
உன்னோடு உறவாடா !
இதையும் தாண்டி, 
உனக்கு பிடித்த பலர் இருக்கலாம் !
இந்த அவனியில்.

ஆனால் உன்னையே நினைத்து !
உன்னை மட்டுமே இதயத்தில் தாங்கி !
நீ என்னுடன் பேசும் நேரத்திர்க்காக காத்து கிடந்து !
உன்னை காணும் நாட்களுக்காக தவித்து இருந்து !
ஆயிரம் காதலை மனதில் கொண்டு !
உன்னிடம் கூறாது காத்திருக்கும்,
அந்த வேதனையுடன் கூடிய ஒரு இன்பத்தை 
நொடி நொடியாய் அனுபவிக்கின்றேன் !!

மனதின் குமுறல்களை கொட்டிவிட தான் ஆசை,
வேண்டாம் துயரங்கள் என்னோடு போகட்டும்...!

உனக்கு வந்த வாழ்த்துகளில் இதும் ஒன்றாக என் நேசம்
கடந்து விட கூடாது....

இப்படிக்கு...

உன்னை நினைத்து தவித்து தவம் இருக்கும்
தூர தேசத்து காதலன்...




Post a Comment

0 Comments