*மனமாய்....கதைக்கிறேன்....*
காலம் சென்றது!! வாழ்வும் நின்றது!!
அறிவை கொன்றது!! நினைவை தின்றது!!
மனமா வென்றது!! குணமே என்றது!!
ஜலமாய் சென்றது!! உயிராய் நின்றது!!
உணர்வை கொன்றது!! உடலை தின்றது!!
காணும் யாவையும் கண்ணால் தின்றது!!
எண்ணக்கடலில் மிதவாய் என்றது!!
வாழ்வாய் என்றது!! வீழ்வாய் என்றது!!
புத்தன் என்றது!! பித்தன் என்றது!!
மெய்யும் என்றது!! பொய்யும் என்றது!!
நரம்புகள் பிளவுபட கத்து என்றது!!
நோய் என்றது!! பேய் என்றது!!
என்னையின்றி உனக்கு பலமில்லை என்றது!!
*அறிவாய்.....கதைக்கிறேன்*
மனமே என்றேன்!! நினைவை கொன்றேன்!!
காலம் வென்றேன்!! ஞானம் பெற்றேன்!!
தெளிவாய் நின்றேன்.....
உன்னால் உன்னால் உன்னால்.............
சிவமே.....சிவனே......என் சீவனே.....
அறமே....அகமே.....அன்பே......என் சிவமே.....
பிறந்தேன் நான் பிறந்தேன் உன்னால் சிவமே....
வளர்ந்தேன் நான் வளர்ந்தேன் உன்னால் சிவமே....
அணுவாய் மறைந்தாய் அகிலம் தெறிந்தாய்
முக்தி என்பதை முடிவில் தந்தாய்!!
இடையில் ஏனோ பலபிறப்புகள் என்றாய்!!
பாவம் என்றாய்!! புண்ணியம் என்றாய்!! படைப்புகளில் ஏனோ பல மாற்றம் தந்தாய்!!
உணர்வும் தந்தாய், வலியும் தந்தாய்
பின் ஏனோ எல்லாம் மாயை என்றாய்!!
நீயே படைக்கிறாய், நீயே காக்கிறாய், நீயே அழிக்கிறாய் பின் ஏனோ தனி தனி சிந்தனைகள் தந்தாய்!!
சிவமே.......
சிந்தை தெளியவே விந்தை புரிந்தாயோ!!
பாவம் மனிதன் என என்றேனும் நினைத்தாயோ?
காரணம் இல்லாமல் காரியம் இல்லையென்றாய்!!
காரணம் தெறியாமலே காரியம் செய்கிறோமே.!!
படைப்புகளும் வெவ்வேறு, வாழ்வும் வெவ்வேறு
குணமும் வெவ்வேறு, நினைவும் வெவ்வேறு
நித்தம் உன் நாமம் கேட்கும் அங்கு பலவாறு!!
எல்லாம் நீயோ? இல்லை எல்லாம் நானோ?
பாவியும் நானோ? ஞானியும் நானோ?
நீயும் கற்பனை பித்தன் தானோ?
கேள்வியாகவே நிற்கிறாயே சிவமே.....
பதிலாய் உனைக்காண பெருவெள்ளம் நடுவில் நான் நிற்க்க, என்று நீ அருள்வாயோ?
சிவமே.......
அகமே நிறைவாய் அருளைத் தருவாய்!!
பணிந்தேன் உனை நான் நினவாய் எனை நீ
சக்தியோடு இணைந்து நீ சத்தியம் உறைத்திடு
சிவமே....
உன்னை நினைத்து வாடும் எனை நீ உன் பாதம் சேர்ப்பாயோ!??
துன்பங்கள் தந்தாய் துவண்டு மீள்ந்தேன்
இன்பங்கள் தந்தாய் இடிந்து வீழ்ந்தேன்
அனைத்தும் அனுபவம் என்றாய் அறிவாய் கொண்டேன்!!
சிவமே.....
யுகம் யுகமாய் வாழும் சிவனே
தவம் தவமாய் புரியும் சிவமே
இத்தனையும் எதற்க்கு
பதிலில்லா கேள்விகளும்
கேள்வி இல்லா பதிலுமே
உன் பரிசோ?
தாண்டவமா இங்கு தாண்டவமா
ஆடவா ஈசனே என் ஈசனே
என் குரல் கேட்கவில்லையா
இல்லை என் பாவம் தீரவில்லையோ?
என்றும் அன்புடன் நான்
பிரதீஸ்.
Comments
Post a Comment
நன்றி