மானுட வள்ளி அவள்

வாசிக்க வாசிக்க நேசிக்கத் தோன்றும்
கவிஞன் இல்லை நான்!!

பார்க்க பார்க்க இரசிக்கத் தோன்றும்
அழகன் இல்லை நான்!!

பேச பேச கேட்கத் தோன்றும் 
பேச்சாளன் இல்லை நான்!!

சொல்ல சொல்ல புரியத் தோன்றும்
புலவன் இல்லை நான்!!

ஏதும் இல்லா என்னிடம் நீ ஏது கண்டாய்!?
என் கரம் பற்றி !! 

என்னையே சுற்றி வந்த மாயம் என்ன?
மாயவளே என் மாசில்லாத தூயவளே!!

என் கற்பனை காட்டினில் தீ மூட்டி இரசித்தவளே!!
பற்றி எறியும் நேரம் விட்டுச் சென்றவளே!!

அல்லியே, இரக்கம் இல்லா செல்லியே!!
என்னை வாட்டும் மானுட வள்ளியே!!

போதும் என்னை விட்டு விடு !!
இல்லையேல் என்னை கொன்று விடு!!

உன் காதல் கூட்டினில் அகபட்ட 
கற்ஜனை அடங்கிய மானுட சிங்கம் நான்!!


Post a Comment

0 Comments