உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...
நாலு பேரு நாலுவிதமா பேசதான் செய்வாங்க என்று கூறுவார்கள், ஆனால் அந்த நாலு பேரு யாருண்ணு இது வரைக்கும் யாரும் பாத்தது இல்லை, ஆனால் அந்த நாலு பேரு இன்னமும் இருக்கத்தான் செய்கின்றார்கள், ஏன் அவர்களை பார்க்க முடியவில்லை என்றால் நாலு பேர் என்று நான்காக பிரிக்கும் பட்சத்தில் தெருவிற்க்கு நாலு பேர் அல்லது ஊருக்கு நாலுபேர?
என்பது போல்! எழும் கேள்விகள்!
அந்த நாலு பேர் காலம் காலம் இருக்கிறார்கள் எனும் போது நிச்சயம் அவர்கள் நாலு பேர்கள் மட்டும் அல்ல, அந்த நாலு பேர் இடத்திற்க்கு இடம் நேரத்திர்க்கு நேரம் மாறுபடுகின்றார்கள், சில நேரங்களில் அந்த நாலு பேரில் ஒருவர் நாமாக கூட இருக்கின்றோம் என்பதை யாராலும் மறுக்க இயலாது, உண்மையாக உங்களை நீங்களே கேட்டு பாருங்கள் பிறர் கதைகளை பற்றி நான் பேசியதே இல்லை என்று ஒருவர் கூட கூற இயலாது. அந்த நாலு பேரை இது வரை காணமுடியாததன் மர்மம் அதில் நாமும் இருப்பதால் தான்....
Comments
Post a Comment
நன்றி