கற்பனைகளின் தாக்கம்


நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது !

இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் !

நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது !

நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் !

பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றியோ எந்த சிந்தனையும் அல்லது தனக்கு தோன்றிய படி பேசிக் கொண்டிருக்கும் அவர்கள் தான் நமது ஆத்ம விசுவாசிகள் போலும் !

மாலை அல்லது காலை நேர நடைபயணம் கற்பனைகளை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் சில கற்பனைகள் கொடுரமானவைகள் தான் இருந்து அதன் போக்கை நிறத்தி விட விருப்பம் இல்லாது அதன் கொடுரத்தை மிஞ்சும் மாபெரும் கொடுரனாக நாமும் அதன் வளைவு நெளிவுகளை பட்டை தீட்டித் தான் ஆக வேண்டும் !




கற்பனைகள் வாழ்வாகப் போவதில்லை என்ற ஆழ்ந்த நம்பிக்கையாக கூட அது இருக்கலாம், இருந்தும் நடக்காத ஒன்று கற்பனையில் உதிக்க காரணம் தான் என்ன ?

நிச்சயம் நடக்காத ஒன்று கற்பனைக்குள் நுழையாது அது ஏதோ ஒரு பரிணாமத்தில் நடத்த ஒன்று அல்லது நடக்கும் ஒன்றாகவும் இருக்கும் இயல்பான நமது வாழ்வில் கூட வந்து போகலாம் !

கற்பனைகள் மனதில் உதிக்கும் போது மனம் ஒரு வற்றிய கிணறு போல சுவாசம் அற்று மௌன நிலையை தக்க வைத்துக் கொண்டு இருக்கும் தோன்றல்கள் எல்லாம் நீர் போல அதன் போக்கிலேயே தன் பசியாற்றிக் கொள்ளும் அதன் நிறைவு பகுதி தான் நீர் மட்டம் உயர்வதும் கற்பனை எழுத்தாக மாறுவதும்

இப்படி நிச்சயமற்ற ஒன்றின் பிடியில் அமர்ந்துக் கொண்டு அதனை நிச்சயம் செய்துக் கொள்ள துடித்துக் கொண்டு இருக்கும் மனம்

Post a Comment

1 Comments

நன்றி