Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

அழ மட்டும் தெரிந்த அவளுக்கு 👰 (She knows only crying) 😭

அழ மட்டும் தெரிந்த அவளுக்கு 👰

இன்பத்திலும், துன்பத்திலும், கோபத்திலும், எறிச்சலிலும், சோகத்திலும், வலியிலும் உடன் சார்ந்தோர் துன்பத்திலும் என அனைத்திற்கும் நீ அழ நான் எப்படி ஆறுதல் கூற... !

ஆண்டுகளாய் தேனீக்கள் சேர்த்து வைத்த கூட்டில் கல் எறிந்தார் போல நிற்காமல் கொட்டும் உன் கண்ணீருக்கு நான் என்ன பதில் கூற...!

எதற்காக இப்படி அழுகிறாய் பெண்கள் என்றாலே இப்படித்தானா இல்லை நீ மட்டும் தானா எத்தை முறை என்னை நானே கேட்க சில வேளை எரிச்சலும் கூட!

என்னை வேணுமானால் இரண்டு அடி அடித்து உதைத்துக் கொள் அழ மட்டும் வேனா என்ற என் கெஞ்சல் உனக்கு உற்சாகமாக உள்ளதோ..?

என்னுடைய சிறு அதட்டல் தாங்காது உடனே கண்களை கசக்கும் நீ வீட்டு வேலையும் கண்ணில் கண்ணீரும் எப்படி டி உன்னால் மட்டும் முடிகிறது என்ற கேள்விக்கு உன் புன்னகை தான் பதில் எனக்கு...! 

சில நேரங்களில் இரண்டு நிமிடத்தில் இயல்பு நிலை என அழுகைக்கும் உனக்கும் நெருங்கிய பிணைப்பு தான் நீ நினைத்த கனம் வருகிறதே...! 

சில வேளைகளில் உன்னழுகை தாங்காது என்மனமும் வலிக்கிறது இருந்தும் கண்ணீர் வரவில்லை துன்பங்களில் சுழந்து வளர்ந்ததினால் என்னவோ மறுத்து போன மனதும் உன்னழுகை பார்த்து வேகிறது!
உன் அழுகை வரம் தான் எனக்கு சில ஆனந்த வேளைகளில் நீ அழும் அவ்வளுகை நான் வேண்டுவது தான், கண்களில் கண்ணீரும் உதட்டில் சிரிப்பும் அப்படியே இன்னமும் என்னுள் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் ! 

உன் கோபத்தை எத்தனை முறை மார்பில் தாக்கியிருப்பேன் உன்னை சமாதான படுத்த முற்படுகையில் கும்பமேளா போல எத்தனை எத்தை முறை என் மார்பில் உன் கை கொண்டு மத்தளம் கொட்டியிருப்பாய் வலிக்கவில்லை நினைவாய் அங்கேயே குடி கொண்டு உள்ளது ஒவ்வொன்றும் இருதய துடிப்பாய்... 

இத்தனை கோபம் உனக்கு ஆகாதடி என்ற என் வார்த்தையுடன் என் புஜம் கொண்டு உனை அணைக்க அண்ணாந்து நீ எனை பார்க்கும் அந்த பார்வை அதற்கு அந்த அடியே மேல் என்று தோன்றும் பல நூறு கண்ணகிகளை கண்டிருந்தேன் உன் கண்களில்..!

உன் தந்தை  இழந்த சோகம் தாழாது நான்கு நாள் என் மாரிலே கிடந்தாயே என்னுயிரே நானும் பாக்கியவான் தான் உன் தந்தை இடத்தை எனக்கு கொடுத்ததற்கு

என் தோளில் உனை சாய்த்து தேற்றுவதை தவிர வேறு ஏதும் நான் அறிந்திறவில்லை
நீ போதும் எனக்கு உன் குறும்புகளும் உன் கோபமும் உன் சிரிப்பும் உன் வெறுப்பும் உன் கனிசமும் உன் அரவணைப்பும் போதும் சகியே..!

எறும்பு கடித்தாலும் அழும் நீ நான் நிலைகுலைந்து தாங்காத சோகத்தில் வீழும் போது எல்லாம், நான் இருக்க எல்லாம் சரியாகிடும் என்ற குலசாமி வாக்கு போல உன் தோளில் எனை சாய்த்து தேற்றும் இந்த கம்பீர கருணையும் உன்னில் வெளிப்பட வியந்து பெண்ணியம் போற்றுகிறேன் 

அழ மட்டும் தெரிந்த உனக்கு....

பேரோளியிலிருந்து நான்
🍃🧘🍃

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...