கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

நிலா

நிலா என்றால் யாருக்கு தான் பிடிக்காது?

 அப்படித்தான் நானும்.
அது ஒரு காலை பொழுது. மார்களி மாதம். கோவிலில் திருவெம்பாவை பாடல் பெண்கள் அனைவரும் கூடி பாடும் இதமானா காலை. மனதை கொள்ளை கொள்ளும் வரிகள். நான் குழிக்கச் சென்றேன் ஊரிலுள்ள குளத்தில்

 எதிர் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தாள். ஒரு பெண். அதற்க்கு முன் அவளை நான் பார்த்ததே இல்லை.

மனதில் நான். யாராக இருப்பாள் இவள்.? இந்த அதிகாலையில் நட்சத்திர ஒளியை மழுஙகடிக்க செய்திருந்தது அவளுடைய பிரகாசம். என்னால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. அங்கேயே என்னை மறந்து நின்று கொண்டிருந்தேன்.

என்னை, ஒரு வித கோவம் கலந்த ஆச்சர்யத்துடன் பார்த்தாள் அவள். கோலத்தை பாதியில் விட்டு விட்டு வீட்டிற்க்குள் ஓடினாள். நானும் சற்று பயந்து போனேன். எதிர் வீட்டு காரனுக்கும் எனக்கும் ஆகவே ஆகாது. தெருகுழாயில் தண்ணீர் எடுப்பது முதல் மழை நீர் நிறைந்தோடும் ஓடைக்காக வரை, இருவரும் மாறி மாறி வாக்கு வாதம் செய்து கொள்வோம். எங்கள் இருவருடைய கருத்தும் ஒரு போதும் ஒத்து போனது கிடையாது.

நான் இனி இங்கு நிற்பலாகாது என்றுணர்ந்து. அங்கிருந்து நகர்ந்தேன். இருப்பினும் என்னால் அந்த ஒளி பொருந்திய அவளுடைய முகத்தை. அந்த வளவளப்பானா கேரளத்துப் பெண்களை போன்ற மஞ்சள் கலந்த ஒந்த பொன்னிரம் கொண்ட. அவள் உடுத்தியிருந்த அடர்ந்த பச்சை நிற தாவணி, தெருவிளக்கு ஒளியில் இன்னும் சற்று தூக்கலாக அவள் அழகை மெருகேற்ற. இந்த காட்சிகள் அனைத்தும் என்னை விட்டு நீங்காமல் திரிம்ப திரும்ப என் மனதினில் ஓடிக்கொண்டே இருந்தன.

குளத்தினில் யாரும் இல்லை. குழமோ நன்றாகா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. என்பது என் மனதிற்க்குள் தோன்ற நான் மெதுவாக எழுப்பினேன்.

படிக்கறையினில் இருந்த. அந்த இடைவெளி வழியே சென்று. இரண்டாவது படிகட்டு வரை பெருகி நின்ற, குளத்தின் நீரிடம் நான் அருகினில் அமர்ந்து,  குளமே, குளமே என மெதுவாக அஸ்தி குரலில் அழைத்தேன். மறுபடி நண்பா நன்றாக நீ தூக்கி கொண்டு இருக்கின்றாயா? இப்போது நேரம் என்ன ஆனது தெறியுமா? அனைவரும் இன்னும் சிறிது நேரத்தில் வரிசையாக குளிக்க வரும் நேரம். உன்னை யாரும் மதிக்காமல் சடக் சடக் என குதித்து உன் தூக்கத்தை, நீ பதறும் வகையில் கலைத்து விடுவார்கள் ...

நீ இப்போது எழுவாய் என்றேன், அயர்ந்து தூங்கும் வேளையில், நம் அன்னை நமது அருகில் அமர்ந்து. நமது தலையை மெதுவாக கோதி விடுவாள். அதைப் போன்றதொரு உணர்வினை அந்நேரத்தில் குளம் அடைந்தது போன்றதொரு உணர்வு என்னுள்.

நான் கூறினேன். நீயோ இப்படி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தால், நான் எப்படி அந்த சொர்ண ரூப சுந்தரியை பற்றி உன்னிடம் கூற முடியும், என்றேன்? அவ்வளவு நேரம் எந்த ஒரு உணர்வுமற்றிருந்தது இயற்கை. தீடீரென மெதுவாக சில்லென்ற காற்று வீச நீரின் மேற்பகுதி அலை அலையாக வந்து முதல் படியில் வைத்திருந்த எனது கல்களை நனைத்து நனைத்து சென்றது.

என் உடல் சற்று சிலிர்த்தது. எனக்குள் ஒரு புதுவித மகிழ்ச்சி. 
மங்கை என்றாலே மனம் மயங்காத ஏதும் உலகில் இல்லையோ என்ற கேள்வி? ஒருபுறம் என்னுள் எழ. நானோ என்னையரியாத ஒரு உணர்வில் மிதந்து கொண்டிருந்தேன்.

அடுத்து நான் பார்த்த மங்கை பற்றி கூற துவங்கினேன். தூரத்தில் யாரோ வருவது போல் தோன்ற. சரி நான் நாளை இன்னும் சீக்கிரமாக வந்து உன்னிடம் கூறுகின்றேன். என்று சிறிது நீர் எடுத்து வணங்கி விட்டு, வலது கையில் மறுபடியும் சிறிது நீர் எடுத்து தலையில் வைத்து கொண்டு ஒவ்வொரு படியாக நீரினுள் இறங்கி குளித்து விட்டு கறையேரினேன்.

அப்போது அங்கு குளிக்க வந்தவர் எனது எதிர் வீட்டுக்காரர்.  எனக்கு மனம் பட படவென்றது ஏனென்றால் அது அவர் குளிக்க வரும் நேரம் அது அல்ல. அவருடன் ஆறு அடி உயரம் இருக்கும். அடர்ந்த கருப்பு தேகம் அந்த மனிதன்.  அதிகாலை நிலா வெளிச்சத்தில் அவருடைய கண்களும், பற்களும் மட்டும் தெளிவாக தெறிய இன்னும் பயம் அதிகரித்தது உடல் நடுங்க, எதிர் வீட்டுக்காரர் என்னை...


தொடரும்...

பேரொளியின் கற்பனை துகளில் இருந்து 

நான் 

Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *