பெண்கள் தேவதைகள் என்பது வெறும் வார்த்தை இல்லை அண்ட பேறண்ட வெடிப்பு எவ்வளவு உண்மையோ !
அவ்வளவு உண்மை !!
ஆண் உடலளவில் வலிமை கொண்டவனாக இருக்கலாம் ஆனால் மனதளவில் பெண்ணே பெண்மையே வலிமை கொண்டவள்...
இறைவன் மிகவும் இரசனை கொண்டவன் என்பதை என்னால் மறுக்கவே முடியாது ஏனென்றால் பெண்ணை படைக்கும் முன் அவன் நீண்டதொரு பெரும் ஆலோசனையில் ஆழ்திருக்கிறான் ....
அவள் உச்சம் முதல் மச்சம் என அவள் எச்சில் வரை வர்ணிக்க வர்ணிக்க வார்த்தைகளுக்கே பஞ்சம் வரசெய்திருக்கிறான் !!
ஆனால் அவள் மனதிற்க்குள் துடிக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை அவள் முழுவதும் அனுபவிக்க முடிகின்றதா ?
இறைவன் இத்தனை நீள யோசனை செய்து அவள் அங்க நரம்புமண்டலங்களில் செலுத்திய கவனத்தை சிறிது அவள் வாழ்வியலிலும் கொடுத்திருக்கலாம் !!
Mind Voice;
என்ன சொல்வது அப்படி இறைவன் கொடுத்திருந்தாலும் நாம் அதிலும் ஏதாவது குறை கண்டு அதற்காக ஒரு கட்டுரை எழுதினாலும் எழுதுவோம்...
சரி உண்மையில் பெண்கள் மனதளவில் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் எங்கே தோற்றுப் போகின்றார்கள் ?
என்றால் அது பெரும்பாலும் அன்பும், பிறர் மீது கொண்ட நம்பிக்கையுமாகவே இருக்கும்.
பெண்கள் மட்டும் யாரையும் ஏமாற்றவில்லையா என்று கேட்டால்?
இது பெண்களுக்கான கட்டுரை இதில் நிறைகள் மட்டுமே நிறைந்தோட வேண்டும் சரி நெகட்டிவிட்டி எல்லாம் சிறிது ஓரம் கட்டி விடுவோம்...
அவர்கள் அன்பு எத்தகையது என்று கூற வேண்டியது இல்லை ..
பெண்களின் அன்பிற்க்கு உவமை தாயை விட வேறுயாறும் இருந்திட இயலாது அது ஒட்டு மொத்த உலகிலேயே தாயின் அன்பிற்க்கு நிகர் எதுவும் இல்லை என்பது தான் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை...
பள்ளி சென்று வரும் தன்னுடைய பிள்ளை மழையில் நனைந்து வருவதை கண்ட அவள், எவ்வளவு பொக்கிஷமே இந்த மழை நமது வாழ்வாதாரத்திற்க்கு இருந்தும் தனது பிள்ளைக்கு முன் வேறு எல்லாம் சும்மாய் என்பதனை...
தாய் அவள் அன்பில் தன் பிள்ளையை விட வேறொன்றும் இல்லை சிறிது கூட தாமதிக்காமல் அவள் கூறும் வார்த்தைகள், என் மனதிற்க்குள் இப்பொழுதும் ஒலிக்கின்றது,
பாழா போன மழை என் புள்ள வரும் போத பெய்யனும் என்று மழையை திட்டி தீர்ப்பாள் வெளியில் ஓடி வந்து தன் புள்ளையை வீட்டிற்குள் அழைத்து சென்று தனது புடவை முந்தானையால் தலை துவட்டுவாள்
அம்மா என்றாலே உலகத்தின் ஒட்டு மொத்த அன்பிற்க்கும் இலக்கணம் அவள் தான்
பல நேரங்களில் நாம் அனைவரும் நமது அனைத்து கோவங்களையும் நம் அன்னையிடம் காண்பித்திருப்போம் அவள் அது எதையும் ஏற்றுகொள்வதில்லை ஒரு நொடி கூட அவள் அதற்க்காக நம்மிடம் கோபம் கொள்வது இல்லை அவள் புன்னகை நம் மனதில் அப்படியே பதிந்திருக்கும்...
அனைவரும் ஓர் நாள் மானிட சரீரத்தை விட்டு சென்றுதான் ஆகவேண்டும் ஆதலால் கோவங்கள் இல்லாது மனம் நிம்மதியாக இருக்கும் படி சுற்றத்தாரையும் அன்னையையும் பார்த்துக்கொள்ளுங்கள் ஜன்மங்கள் பற்றிய கதைகளை சிறிது மறந்து இப்போது வாழும் இந்த வாழ்க்கையை முழுவதும் மகிழ்சியாக வாழ்ந்து செல்வோம்...
நன்றி
பேரொளியின் கருணை துகளில் இருந்து நான்
பிரதீஸ்
Comments
Post a Comment
நன்றி