கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

போகும் பாதை

தவிப்புகள்
தன்னடக்கம்
தலைசாய்வு
இவைகள்
பெண்ணின் 
குணமாம்.

பொக்கிஷங்களை தொலைத்த பெரியதொரு காவிய கதை ஒன்று காதலை மையம் கொண்டு திளைக்குமோ?

தோன்றல் எல்லாம் தோற்றுப் போகும் போது மீதம் இருக்கும் நம்பிக்கை மட்டுமே வாழ்வின் மிச்ச தூரத்தை கடக்க செய்யுமோ?

போகும் பாதையை தேர்வு செய்து இன்னும் பயணத்தை தொடங்காமல் காலத்தை தானாக கரைபுறண்டு ஓட செய்து வேடிக்கைப் பார்ப்பது என்ன நிலை?

பிறந்தாயிற்று ஏதோ ஒன்றை தர்மமாக செய்து அல்லது தர்மத்தின் பாதையிலாவது செல்ல பழகி கொள்ளலாம் என்றால்,
தர்மம் என்றால் எதை செய்வது என்ற கேள்வி தோன்றுகிறது...

இருப்பது அனைத்தையும் தர்மமாக கொடுத்து விட்டு ஆண்டியாக காசி சென்று விடலாமா என்று, ஆமாம் இருப்பது அனைத்தையும் கொடுத்து விட்டால் காசிக்கு எப்படி செல்வது என மனம் கேட்க 
நடந்து தான் என்று உன் மனம் ஒன்று கூற நாம் அமைதியாக இருந்தாலும் வெளியுலகத்தோரோடு எந்த வாக்கு வாதமும் இல்லாவிட்டாலும் அகத்தில் கூச்சலும், வாக்குவாதமும், குழப்பமும் ஒரு போதும் தீர்ந்த பாடில்லை...

இத்தனை வருடங்கள் ஆகியும் இன்னும் மாறாமல் இருப்பது இந்த அகத்தில் நடக்கும் கேலிகளும் கூத்துகளும் தான்

பல நேரங்களில் இவைகளை சத்தமாக பேசி விட தோன்றும் நடந்து செல்லும் வழியில் நமக்கு பிடிக்காத ஒருவனை சத்தமாக திட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் அடிகடி வரும் இருந்தும்

சித்தம் கலங்காததனால் அனைத்தை கட்டு படுத்திக்கொண்டு அப்படியே கடந்த காலங்கள் பல...

பாதைகள் எப்படி கிளை கொண்டு முடிவில்லாமல் செல்கின்றனவோ அப்படியே தான் இந்த மனதின் அலைவரிசையும் ஒன்று போனால் இன்னொன்று!!

தனிமையில் அமர்ந்து இருக்கும் போது நான் பலமுறை கோவம் கொண்டு பேசாமல் இருந்த நாட்கள் உண்டு இருந்தும் அவன் இல்லாமல் பேச்சில்லையே அது, ஆம் எண்ணங்களை தான் கூறுகிறேன்.

போட்டி ஒன்று துவங்கும் முன்பே இதில் நீ தான் அதிக ரன் எடுக்க போகிறாய் முதல் பந்திலயே சிக்சர் அடிக்க போகிறாய் என்பான் மிகுந்த ஆர்வத்துடன் நமக்கு தராதா பேட்டிங்கையும் சண்டையிட்டுக் கொண்டு மட்டையை வாங்கி ஒரு மாவீரனைப் போல் தோரணையில் களம் இறங்க தயாராகும் வேளையில் அவன் சொல்வான்

முதல் பந்திலயே அவுட் ஆனா கேவலம் முதல் பந்து பேட்டில் மீட் மட்டும் பண்ணு என்று ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை ஒரு பதட்டத்திலேயே கொண்டு போக அவனால் மட்டும் தான் முடியும்

இன்னும் எத்தனை நாட்கள் தான் உன் ஆட்டம் பார்க்கலாம் ஓர் நாள் உன்னை ஓட ஓட விரட்டத்தான் போகிறேன் என எனது எண்ணங்களிடம் சவால் விட்டிருக்கிறேன்...

நன்றி

பேரொளியின் கற்பனையிலிருந்து 
நான் 

Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *