கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

வார்த்தைகள்

நாம் பேசும் வார்த்தைகளுக்கு நிச்சயம் வர்ணங்கள் பூசியாக வேண்டும். இல்லை நான் இப்படித்தான் யார் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள் என்று அவ்வளவு எளிதாக கூறி கடந்து செல்லமுடியாது!!

ஏனென்றால் நாம் பேசு வார்த்தைகள் அனைத்திற்க்கும் நாம் தான் பொருப்பு ஏற்று ஆக வேண்டும் வாய்க்கு வந்த படி பொருளற்று ஏதேனும் உளறி செல்லலாகாது !!

வார்த்தைகள் உண்மையில் அற்புத சக்தி கொண்டவை தான் நம் வார்த்தைகளால் ஒருவரை வீழ்த்தவும் முடியும், வீழ்ந்து கிடக்கும் ஒருவனை எழ வைக்கவும் முடியும்!!

சிரிக்க வைக்கவும் முடியும், அழ வைக்கவும் முடியும், சிந்திக்க வைக்கவும் முடியும், இந்த வார்த்தைகளும் அதற்க்கு முன் தோன்றும் எண்ணங்களும் தான் இன்று வரை உலகை ஆளுகின்றன!!

இந்த மாயாஜால வார்த்தைகளால் ஒருவரை அன்பில் கட்டி போட முடியும் என்றால் உண்மையில் எத்தனை அற்புத சக்தியை கொண்டிருக்கின்றன இந்த வார்த்தைகள், குறைவாக பேச வேண்டும் சிந்தித்து பேச வேண்டும், நேரம் காலம், இடம், பொருள், ஏவல் அறிந்து பேச வேண்டும் என்பார்கள் 

ஆனால்! நாம் எத்தனை பேர் அதனை சரியாக கடை பிடித்திருப்போம்!? மேற்கூறிய அனைத்தும் புத்திசாலித்தனமான செயல்கள் ஆனால் நாமோ நமது புத்தியினை கழற்றி சற்று ஓரமாக வைத்துக் கொண்டு தான் பேசவே தொடங்குவோம்!!

ஆம்!! மனதில் என்ன தோன்றுகிறதோ அது அனைத்தையும் மடை திறந்த வெள்ளம் போல் கட கடவென பேசி முடித்து விட்டபின் தோன்றும் அமைதியில், மனதில் தோன்றும் எல்லாம் உளரிவிட்டோமோ என்று!! ஹா....ஹா....

பேசும் முன்பு எதை பற்றியும் யோசிப்பது இல்லை, பெரும்பாலும் நாம் தொடர்ந்து இதையே செய்கிறோம்...

இருப்பினும் ஏன் அதிகம் பேச வேண்டாம் என்று அனைவரும் கூறுவதன் பின்னணி தான் என்னவாக இருக்கும் என்று யாரேனும் சிந்தித்தது உண்டா?

அதிகம் பேசினால் வாக்கு வாதம் வந்து விடும் இல்லை சண்டை வந்து விடும் என்பதால இருக்கலாம் இருந்தும் முக்கியமாக நாம் பேசும் போது நமது சக்திதை அதிகம் செலவு செய்கிறோம் என்பது தான் உண்மை!!

பேசும் போது நம்முள் இருந்து அதிகபடியான பிராண சக்தி வெளியேறுகிறது இதனால் நாம் வெகு எளிதில் சோர்வு அடைகிறோம் என்பது அனுபவ அளவில் உண்மை 

உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையென்றல் இதை செய்து பாருங்கள் கூட்டமான இடமோ அல்லது யாரும் இல்லாத தனிமையாகவோ இருக்கட்டும் கிராமபுறங்களில் இருப்பவர்கள் என்றால் வயல், தோப்பு பகுதிகளுக்கு செல்லுங்கள், நகர்புறங்களில் வசிப்பவராக இருந்தால் மாடியில் சென்று அமருங்கள் மாலை பொழுதுகளில் 

மாடியில் அமர்ந்து கொண்டு சற்று வானத்தை பாருங்கள், ம்....பார்த்து கொண்டேயிருங்கள் உங்களுக்குள் என்ன தோன்றுகிறதோ அந்த எண்ணங்களை கவனியுங்கள் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள்,  கவனித்துக்கொண்டே இருங்கள்.

இனி அப்படியே சற்று உடலை தளர்வாக்கிக் கொண்டு மெதுவாக ஒரு ஆழ்ந்த சுவாசம் செய்து கொண்டு கண்களை மூடி அமர்ந்த படியே தூங்குங்கள், எந்த கேள்வியும் கேட்காதீர்கள் அமர்ந்து கொண்டே உறங்குங்கள்,

உடலில் ஒரு புதுவித மாற்றம் உறுவாகும் அந்த மாற்றத்தினை உணருங்கள் இதனை தொடர்ந்து செய்யுங்கள் நீங்கள் உண்மையில் ஒரு ஆக சிறந்த சிந்தனையாளராக மாறுவீர்கள்!!

உங்கள் வெற்றி உங்களாலேயே சாத்தியம்!!

நன்றி

வாழ்வோம் வளமுடம்


Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *