Posts

Showing posts from June, 2021

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

சேரமாதேவி கொழுந்துமலை முருகன் கோவில்

Image
தென்காசியில் இருந்து சேரமாதேவி வழியாக பணகுடி செல்லும் வழியில் கொழுந்து மலை முருகன் கோவில் உள்ளது மூலவர் முருகர் பால முருகனாக காட்சி தருகிரார் மிகவும் பழமையான கோவில் பழைய கல் தூண்கள் மிகவும் பிரமாண்டமாக உள்ளது சன்னதியின் உள் நின்று கோவில் மேல் பார்க்கும் போது அந்த பிரமாண்ட கல் தூண்கள் கிடைமட்டமாக வைக்க பட்டிருப்பதை பார்க்கலாம். கோவிலை புகைபடம் எடுக்க முடியவில்லை இந்த இயற்கை எளில் மிகு காட்சிகள் கொழுந்துமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வழியினில் எடுக்கப்பட்டது. சுற்றிலும் மலை சூழ பிராமாண்ட பிரமிப்புக்கு நடுவே வீற்றிருக்கிறர் ஐயன், கோவில் பிரகாரத்தை வலம் வரும் போது முதலில் வினாயகர் சன்னதி உள்ளது அதன் பின் நாகர் சன்னதி அடுத்ததாக நேராக மூலவரின் பின் புறம் சீர் நேராக சித்தர் ஜீவசமாதி உள்ளது அங்கிருந்து சிறிது நேரம் தியானம் செய்து செல்லலாம், கோவிலில் திருமணமான தம்பதிகள் குடும்பமாக வந்து கோவிலில் கணவன் மனைவி இருவரும் வெளி பிரகாரத்தில் அமர்ந்து ஒருவருக்கொருவர் மாலை மாற்றி இறைவனை வணங்கி செல்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *