Posts

Showing posts from October, 2022

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்

Image
ஒரு மாதுழை செடி நன்றாக பூத்திருந்தது காண்போர்கள் கண்ணை கவரும் விதமாக இருந்தது... அதன் அழகை அனைவரும் ரசித்து சென்றனர் அதர்க்கு காரணம் யாரும் இல்லை தனிமையில் வளர்ந்த அந்த செடி தன்னை தானே வருத்தி தன் வேர்களை பலபடுத்தியிருந்தது... அந்த செடி இன்று இந்த அளவு வளர்ச்சியடைய நான் தான் காரணம் என்று வேறு யாரும் கூறிவிட முடியாது... அனைவரும் ஆச்சர்ய பட்ட நேரம் ஒருவன் மட்டும் அதன் அருகில் சென்று...உன்னால் இன்னமும் பூக்க முடியும் உன்னை நான் நம்புகிறேன் என்றான்... அந்த வார்த்தையில் அந்த செடி அகம் மகிழ்ந்து இன்னும் அதிகமாக பூத்தது தனது கிளைகளின் சக்தியை மீறி... மீண்டும் வந்த அவன் ஏன் இப்படி ஆகி விட்டாய் !!?  நீ முன்பு இருந்தது தான் அழகு இலைகளுக்கு இடையே பூக்கள் தெரிந்த போது தான் நன்றாக இருந்தாய் இப்போது பார்க்க அவ்வளவு தோரணையாக இல்லை உனது கிளைகள் பலம் இழந்து தொய்ந்து விட்டது நீ அந்த பூக்களை மட்டும் உதிர்த்து விடு என்றான்... மனம் நொந்த அந்த செடியின் ஒவ்வொரு பூக்களுமே  வாடி விழ துவங்கி விட்டன... அப்போது தான் அந்த செடிக்கு புரிந்தது நிலையில்லாதவர்களின் பேச்சிக்கு நாம் செவி சாய்க்க தேவையில்லை !!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *