வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்


ஒரு மாதுழை செடி நன்றாக பூத்திருந்தது
காண்போர்கள் கண்ணை கவரும் விதமாக இருந்தது...

அதன் அழகை அனைவரும் ரசித்து சென்றனர்
அதர்க்கு காரணம் யாரும் இல்லை தனிமையில் வளர்ந்த அந்த செடி தன்னை தானே வருத்தி தன் வேர்களை பலபடுத்தியிருந்தது...

அந்த செடி இன்று இந்த அளவு வளர்ச்சியடைய நான் தான் காரணம் என்று வேறு யாரும் கூறிவிட முடியாது...

அனைவரும் ஆச்சர்ய பட்ட நேரம் ஒருவன் மட்டும் அதன் அருகில் சென்று...உன்னால் இன்னமும் பூக்க முடியும் உன்னை நான் நம்புகிறேன் என்றான்...

அந்த வார்த்தையில் அந்த செடி அகம் மகிழ்ந்து இன்னும் அதிகமாக பூத்தது தனது கிளைகளின் சக்தியை மீறி...

மீண்டும் வந்த அவன் ஏன் இப்படி ஆகி விட்டாய் !!? 
நீ முன்பு இருந்தது தான் அழகு இலைகளுக்கு இடையே பூக்கள் தெரிந்த போது தான் நன்றாக இருந்தாய் இப்போது பார்க்க அவ்வளவு தோரணையாக இல்லை உனது கிளைகள் பலம் இழந்து தொய்ந்து விட்டது நீ அந்த பூக்களை மட்டும் உதிர்த்து விடு என்றான்...

மனம் நொந்த அந்த செடியின் ஒவ்வொரு பூக்களுமே  வாடி விழ துவங்கி விட்டன...

அப்போது தான் அந்த செடிக்கு புரிந்தது நிலையில்லாதவர்களின் பேச்சிக்கு நாம் செவி சாய்க்க தேவையில்லை !!??

தேவைக்கும் காரியங்களுக்கும் தகுந்தார் போல வார்த்தைகள் நிலையில்லாமல் மாறும் என்றால் அங்கு எதுவும் நிலையில்லாமல் தான் போகும்...


யான் பேரொளியின்

-பிரதீஸ்

Post a Comment

0 Comments