திடீரென நிச்சயமான திருமணம்!!
ஒரு பவுன் தங்கமாவது தாலிக்கு
போட வேண்டும் என்பது உத்தேசம்!!
ஏற்கனவே வாங்கிய வட்டி கடன்கள்
-எராளாம்!!
யாரை தேட!?
கொடுக்க நினைக்கும் மனங்களுக்கு
கையில் இருப்பு இல்லை!!
இருப்பு தான் இல்லை கொஞ்சம் கூட
மாட ஒத்தாசை பண்ணலாமுனு
சில மனசு!!
இருப்பு இருக்கும் கைகளுக்கு தகுதி தட்டுபாடானது...
நடுபகல் பொழுது என் கண்களை மட்டும்
-காரிருள் சூழ்ந்திருந்தது.
சில சொந்தங்கள் எல்லாம் என் ஏற்பாடு
என்று
ஆகாய கங்கையை உச்சந்தலையில்
பாய்ச்சினர் - குளிர்ச்சி
அடங்கும் முன்பு பணத்தை மட்டும் நீ
கொடுத்து விடு என்று குளிருக்கு
இதமற்ற நெருப்பு மூட்டி சென்றனர்!!
செலவுகளுக்கு வர்ணமளித்து
கொடுத்தனர் அதன் கனம் கூட!!
எல்லாம் கடமைக்கு செய்வதாயின்
சொந்தங்கள் எதற்கு?
கடமையை முடிக்க கடைசியில்
வாய்க்கரிசி போட்டு சென்றால்
போதுமல்லவா!!
வாழ உதாவாதா சொந்தங்கள்
ஓலை பாயில் போகும் போது வந்து
எதற்கு!?
நாம் உறவுகள் என்று நினைக்கும் பலரும்
நம்மை அவ்வாறு நினைக்கவில்லை என்பது
ஒரு சில சூழ்நிலைகள் தானே தெரிய
- படுத்துகிறது
இருந்தும் உதவவில்லை, உதவ மனமும்
-இல்லை சில சொந்தங்களுக்கு!??
காரணங்கள் ஆயிரம் அடுக்கிச் சென்றனர் அலமாரியில்!!
ஆண்டுகள் பல கழித்து உதவும் என்ற நம்பிக்கையில்!!
வாழ்கை எனும் நாடகத்தில் நான் அணிந்த கதாபாத்திரங்கள் பல!
அதில் முழுவதும் கதாபாத்திரமாகவே
மாரியதனால் பெற்ற விமர்சனங்கள் பல
- உண்டு.
ஊர் கூடி, தெரு கூடி, வீட்டு திண்ணைகள் பல
என் கதையும், கதா பாத்திரமும் சுமந்து
-இருந்தது!!
தேவையென்றால் தங்கமாவேன்!! இல்லையென்றால் விமர்சனமாவேன்!!
காரணமற்ற பழியும் பாய்சு செல்வார்கள்
வீதியில்!!
இவ்வளவு தானே! யாருக்கு அஞ்ச
வேண்டும்?
அத்தனை பேரும் உத்தமராக இருந்து
விட்டு போகட்டுமே!??
மனதிற்கு உண்மையாக இருக்கும்
போது பல வெறுப்புகள் வந்து
குவியத்தான் செய்யும்!!
விரோதங்கள் பல முழைக்கத் தான்
-செய்யும்!!
கொடுத்த வேடத்தை சிறப்பாக நடித்து
முடித்தால் போதும்..
இருந்தும்
இன்னமும் நடித்து கொண்டு தான்
இருக்கின்றேன்!!
ஆனால் இன்று
விருப்பம் இல்லாத வேடம் அணிந்து!!
விருப்பமான வாழ்கையில்!!
யான் பேரொயிலிருந்து
-பிரதீஸ்
0 Comments
நன்றி