கையில் பணம் சேரும் போது
மனம் பதவிக்கு ஆசைப்படும் !!
பின் புகழுக்கு ஏங்கி அதன்பின்
ஓடும் !!
அவமானங்கள் பின் தொடருவதை
மறந்துவிடும்!!
குடும்பம் பிரிவதை வேடிக்கைப்
பார்க்கும்!!
காத்திருந்த பதவி ஓர் நாள்
பறிபோகும்!!
ஓங்கியிருந்த புகழ் எச்சில் உமிழும்!!
அன்று போராட மனம் இருக்காது,
நிற்க தெம்பு இருக்காது !!
பாவங்கள் மட்டும் பணமாய்
குவிந்திருக்கும் !!
ஒன்றை அடைய மற்றொன்றை இழக்க ஏனோ
இந்த மனம் ஒருபோதும் மறுப்பதே இல்லை !!
பதவி ஆசை மாபெரும் நடிகனாக்கும்!!
நடிக்க கற்றும்தரும்!!
பணம் உபரி அதிகமாக எந்த எல்லைக்கும் சிந்தனை செல்லும்!!
நஞ்சு, நண்மையெல்லா பார்த்திருக்காது
நயவஞ்சகம் குடித்து நிற்கும்!!
உதவி என்ற பெயரில் பொருள் சேர்க்கும்!!
புண்ணியம் என்றபெயரில் சொத்து சேர்க்கும்!!
நன்கொடைகள் வாரி வழங்கும்!! எல்லாம் ஊர் பணமாகா கதையிருக்கும் !!
லஞ்சம் வாங்கி குவிக்கும், பஞ்சம் வராமால் தடுப்பேன் என்று பொய் வாரியிரைக்கும்!!
மனிதம் மாண்டு போகும், வாரிசுகளுக்கும் வாங்கி பதுக்கும்!!
பதவி, பணம், புகழ் எல்லாம் கரைபடியும் வெள்ளை சட்டைகள்!!
அதனை ஓவியமாக்க முயலலாம்! ஆனால் ஒரு போதும் சாத்தியமில்லை!!
யான் பேரோளியிலிருந்து
பிரதீஸ்
1 Comments
👍🏻
ReplyDeleteநன்றி