என் பாட்டி
- Get link
- X
- Other Apps
ஒரு நாள் வேலையிலிருந்து சீக்கிரமாக வீடு வந்தேன் வீட்டில் அனைவரும் என்ன மக்களே சீக்கிரமா வந்துருக்கு என்று கேட்டனர் ?
நான் இயல்பான முக பாவனையுடன் ஒன்றும் இல்லை சும்மா தான் என்று கூறி விட்டு என் அறைக்குள் சென்றேன் !!
இரண்டு மணி நேரத்தில் பத்து முறையாவது என் அறைக்குள் வந்து என்ன ஆச்சு மக்களே என என் அம்மாவும் பாட்டியும் வந்து வந்து கேட்டிருப்பார்கள் !!
ஒன்னும் இல்லம்மா கொஞ்சம் சும்மா இருங்க என்று கத்திகொண்டே அறையை விட்டு வெளியே வந்தேன்!!
அங்கு என்னுடைய பாட்டி என் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீருடன் மக்கா நீ பதினைந்து வயதில் பாத்த வேலையில் பட்ட கஷ்டத்தை விட இது ஒண்ணும் இல்ல உனக்கு நான் இருக்க செல்லமே நீ சங்கட படாத பாட்டி எப்போதும் உனக்காக இருக்க மக்களே... உன் கூடவே இருப்பேன்...
என்று என் கைகளை அவள் கண்ணீரில் கழுவி முத்தமிட்டு சென்றாள் !!
அந்த வார்த்தைகளின் போது நான் அவள் ஆன்மாவுடன் இணைந்திருக்க முடிந்தது அவ்வளவு ஆழமாக இருந்தன அவள் வார்த்தைகள் !!
நான் எதையும் கூறாமல் வெறுமனே என்னுடைய முகத்தை பார்த்து நான் ஏதோ குழப்பத்தில் இருக்கிறேன் என்று அறிந்திருந்த பாட்டி நான் சிந்த வேண்டிய கண்ணீர் அவள் கண்களிலும் மற்றும் அம்மாவின் பேரன்பை நான் எங்கனம் விளக்க !!
நேசத்தினால் மட்டுமே தைக்கப்பட்ட நெஞ்சம் எனது !! சிறு கடும் சொல் தாங்காது !!
உணர்வுகளை பரிமாறிக் கொள்ள வார்த்தைகள் தேவையில்லை புரிந்த உறவுகள் போதும் !!
யான் பேரோளியிலிருந்து
பிரதீஸ்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
நன்றி