Posts

Showing posts from May, 2023

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

என் பாட்டி

Image
ஒரு நாள் வேலையிலிருந்து சீக்கிரமாக வீடு வந்தேன் வீட்டில் அனைவரும் என்ன மக்களே சீக்கிரமா வந்துருக்கு என்று கேட்டனர் ?  நான் இயல்பான முக பாவனையுடன் ஒன்றும் இல்லை சும்மா தான் என்று கூறி விட்டு என் அறைக்குள் சென்றேன் !!  இரண்டு மணி நேரத்தில் பத்து முறையாவது என் அறைக்குள் வந்து என்ன ஆச்சு மக்களே என என் அம்மாவும் பாட்டியும் வந்து வந்து கேட்டிருப்பார்கள் !! ஒன்னும் இல்லம்மா கொஞ்சம் சும்மா இருங்க என்று கத்திகொண்டே அறையை விட்டு வெளியே வந்தேன்!! அங்கு என்னுடைய பாட்டி என் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீருடன் மக்கா நீ பதினைந்து வயதில் பாத்த வேலையில் பட்ட கஷ்டத்தை விட இது ஒண்ணும் இல்ல உனக்கு நான் இருக்க செல்லமே நீ சங்கட படாத பாட்டி எப்போதும் உனக்காக இருக்க மக்களே... உன் கூடவே இருப்பேன்... என்று என் கைகளை அவள் கண்ணீரில் கழுவி முத்தமிட்டு சென்றாள் !!  அந்த வார்த்தைகளின் போது நான் அவள் ஆன்மாவுடன் இணைந்திருக்க முடிந்தது அவ்வளவு ஆழமாக இருந்தன அவள் வார்த்தைகள் !! நான் எதையும் கூறாமல் வெறுமனே என்னுடைய முகத்தை பார்த்து நான் ஏதோ குழப்பத்தில் இருக்கிறேன் என்று அறிந்திருந்த பாட்டி நான் சிந்த வேண்டிய

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *