Posts

Showing posts from August, 2023

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

அழ மட்டும் தெரிந்த அவளுக்கு 👰 (She knows only crying) 😭

Image
அழ மட்டும் தெரிந்த அவளுக்கு 👰 இன்பத்திலும், துன்பத்திலும், கோபத்திலும், எறிச்சலிலும், சோகத்திலும், வலியிலும் உடன் சார்ந்தோர் துன்பத்திலும் என அனைத்திற்கும் நீ அழ நான் எப்படி ஆறுதல் கூற... ! ஆண்டுகளாய் தேனீக்கள் சேர்த்து வைத்த கூட்டில் கல் எறிந்தார் போல நிற்காமல் கொட்டும் உன் கண்ணீருக்கு நான் என்ன பதில் கூற...! எதற்காக இப்படி அழுகிறாய் பெண்கள் என்றாலே இப்படித்தானா இல்லை நீ மட்டும் தானா எத்தை முறை என்னை நானே கேட்க சில வேளை எரிச்சலும் கூட! என்னை வேணுமானால் இரண்டு அடி அடித்து உதைத்துக் கொள் அழ மட்டும் வேனா என்ற என் கெஞ்சல் உனக்கு உற்சாகமாக உள்ளதோ..? என்னுடைய சிறு அதட்டல் தாங்காது உடனே கண்களை கசக்கும் நீ வீட்டு வேலையும் கண்ணில் கண்ணீரும் எப்படி டி உன்னால் மட்டும் முடிகிறது என்ற கேள்விக்கு உன் புன்னகை தான் பதில் எனக்கு...!  சில நேரங்களில் இரண்டு நிமிடத்தில் இயல்பு நிலை என அழுகைக்கும் உனக்கும் நெருங்கிய பிணைப்பு தான் நீ நினைத்த கனம் வருகிறதே...!  சில வேளைகளில் உன்னழுகை தாங்காது என்மனமும் வலிக்கிறது இருந்தும் கண்ணீர் வரவில்லை துன்பங்களில் சுழந்து வளர்ந்ததினால் என்னவோ ம

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *