Posts

Showing posts from October, 2023

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

முந்தானை

முந்தானையை நனைத்து அவள் வயிற்றிலும் தோள் துண்டை நனைத்து அவன் வயிற்றிலும் கட்டிக் கொண்டார்கள் வழக்கமாக வரும் நேரம் தான் ஆனால் இன்னும் வர வில்லை காலை மாலை இரவு என அனைத்து பொழுதுகளும் பொய்த்து போயின  பானையில் இருந்த நீரும் தீர்ந்து போய் இருக்க  ஏய் காமாட்சி செத்த நேரம் இரே நான் அங்குட்டு ஊத்துல போய் தண்ணி பிடிச்சிட்டு கழக்க வெளிச்சம் ஏதும் தெரியுதா ன்னு பாத்துட்டு வாரே என்னங்குற என்று கேட்க அவளோ இந்த கருக்கல்ல எங்கேயும் போவேனா இந்த சாமம் மட்டும் பொருத்துப்போ காலைல வந்துருவா ஏதாவது அவசர சோலியா வெளிய எங்குட்டாச்சும் போயிருக்கும் தம்பி என்று அவள் அவனை பிரிய மறுத்து அவன் கை கோர்த்து அவள் மடியோடு இறுக்கிக் கொள்கிறாள்  அதன் பிறகு ஐய்யனார் வாயில் இருந்து எந்த வார்த்தையும் இல்லை. காமாட்சி கூறுகிறாள் நமக்கு இது என்ன புதுசா இந்த பட்டினியோடு தான போராடுரோம் பொறந்ததுல இருந்து அப்போலோ ஒரு வேளை கஞ்சிக்கு காலைல இருந்து ரா இருட்டு வரை மூட்டை தூக்கணும் அதுல உனக்கு கிடைக்கிற அந்த கஞ்சி தான நீ குடிக்காம எனக்கு கொண்டாந்து தந்த மறந்து போச்சாக்கும் ஐயாக்கு என்று இழுவையோடு கூற  ஐயனார் ம்....என்கிறார் காமாட்சி பு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *