முந்தானை

முந்தானையை நனைத்து அவள் வயிற்றிலும் தோள் துண்டை நனைத்து அவன் வயிற்றிலும் கட்டிக் கொண்டார்கள் வழக்கமாக வரும் நேரம் தான் ஆனால் இன்னும் வர வில்லை காலை மாலை இரவு என அனைத்து பொழுதுகளும் பொய்த்து போயின பானையில் இருந்த நீரும் தீர்ந்து போய் இருக்க 

ஏய் காமாட்சி செத்த நேரம் இரே நான் அங்குட்டு ஊத்துல போய் தண்ணி பிடிச்சிட்டு கழக்க வெளிச்சம் ஏதும் தெரியுதா ன்னு பாத்துட்டு வாரே என்னங்குற என்று கேட்க அவளோ இந்த கருக்கல்ல எங்கேயும் போவேனா

இந்த சாமம் மட்டும் பொருத்துப்போ காலைல வந்துருவா ஏதாவது அவசர சோலியா வெளிய எங்குட்டாச்சும் போயிருக்கும் தம்பி என்று அவள் அவனை பிரிய மறுத்து அவன் கை கோர்த்து அவள் மடியோடு இறுக்கிக் கொள்கிறாள் 

அதன் பிறகு ஐய்யனார் வாயில் இருந்து எந்த வார்த்தையும் இல்லை. காமாட்சி கூறுகிறாள் நமக்கு இது என்ன புதுசா இந்த பட்டினியோடு தான போராடுரோம் பொறந்ததுல இருந்து

அப்போலோ ஒரு வேளை கஞ்சிக்கு காலைல இருந்து ரா இருட்டு வரை மூட்டை தூக்கணும் அதுல உனக்கு கிடைக்கிற அந்த கஞ்சி தான நீ குடிக்காம எனக்கு கொண்டாந்து தந்த மறந்து போச்சாக்கும் ஐயாக்கு என்று இழுவையோடு கூற 

ஐயனார் ம்....என்கிறார் காமாட்சி புள்ளைங்க சாப்டுறுப்பாங்களோ என்னமோ என வாயில் முனு முனுக்க ஐயனார் முகம் மாறியது இப்போ ஏன் அத ஞாபக படுத்தர உன் மகன் செஞ்சது மறந்து போச்சா என்கிறார் 

காமாட்சி மூச்சு பேச்சற்று அமைதியாகினாள் ஐயனாருக்கு ஆத்திரம் அடங்கவில்லை 

நம்ம புள்ள புள்ள நீ எவ்வளவு பாசமா பார்த்தோம் கொஞ்சமாவது இந்த நாய்க்கு புரிஞ்சு இருந்தா இப்படி நம்மள விட்டுட்டு போயிருப்பானா

சரி நம்மள விட்டுட்டு போனா அவனாவது வாழ்க்கையில் நிம்மதியா இருப்பானா அவனும் நிம்மதி இல்லாம மொத்தமா வாழ்க்கை தொலைச்சுட்டு நிக்கிறான் காதலிச்ச பொண்ணு தானே அவன புரிஞ்சு இருப்பான்னு நினைச்சேன் நாம நினைச்ச மாதிரி அவன நல்லா புரிஞ்சு இருக்கா இந்த நாய் தான் அவளை பத்தி தெரியாம மாட்டிகிட்டு இருக்கான்

நாம பிள்ளைக்காக தானே சேர்த்து வைக்கணும்னு சொல்லி எல்லாமே அவன் பேர்ல வாங்கி வச்ச அவன் மொத்தமா அவளுக்கு கொடுத்துட்டு அவனும் தெருவில் நிக்கிறான்

Post a Comment

0 Comments