நீரின்றி அமையாது உலகு (Water falls)
- Get link
- X
- Other Apps
நதிகளின் ஓட்டம் எங்கோ துவங்கி எங்கங்கோ சென்று மாபெரும் ஆழி பெருங்கடலில் வந்து சேர்கிறது
இடையில் அதன் பயணம் கால சூழ்நிலையாலோ அல்லது பல சில எதிர்ப்புகளினாலும் அதன் பாதையை அதுவே மாற்றிக் கொண்டு எங்கும் எதனுடனும் விருப்பு வெறுப்பு அற்று வந்த பாதையில் ஆயிரம் நலம் செய்து ஓராயிரம் உயிர் சுமந்து எண்ணிலடங்கா சனம் வாழ வாழ்வு தந்து எதன் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்ளாது ஓடி கொண்டே இருந்தது
எத்தனை தடைகளின் போதும் அதன் பயணத்தை அது நிறுத்தியது இல்லை நிறுத்த நினைத்ததும் இல்லை சில உயிர் பலிகளும் ஏந்தியிருக்கும் அபாயம் உண்டு
அதை பொருட்டு கவலையும் இல்லை எல்லாம் அடங்கும் கோடான கோடி ஜனன சாம்ராஜ்யம் செய்யும் வேளையில் சில மரண சாம்ராஜ்யங்களுக்கான பாதையும் ஊடே நிலைக் கொள்ளுகிறது
மண்ணின் திறம் எத்தனையானாலும் அதன் திடம் அவிழ்க்கும் மாபெரும் சூட்சுமம் அறிந்தது. கடும் பாறைகளும் அதற்க்கு சான்று
கரையோர கோவில்களில் இறைவன் கால்நனைத்து சுமந்து வந்த உதிரி பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து வரும் அழகும் அதற்க்கு இசைந்தார்ப் போல காற்றும் அதன் கரம் தாழ்த்தி உதவும் காதலும் இயற்கையின் கொடை
நதிக்கு திருவிழா என்பது எத்தனை பழமை வாய்ந்து அணுகு முறை தேவியின் பெயர் சூட்டி அதில் ரசாயனங்கள் கலப்பது காலத்தின் கட்டாயம்
கண்ணீரில் துவங்கி நன்னீராய் மாறி பல்லாயிரம் உயிர் காத்து உடல் அழிக்கும் உப்பு நீருடன் கலந்து இருதியின் தன் நன்னீர் அந்தஸ்த்தை இழந்து உப்பாய் மாறி நம் வீடு வந்து சேரும் கால மாற்றம் தான் திகைப்பு
பல்லாயிரம் மரங்களின் பிள்ளைகளை சுமந்து நாடு விட்டு நாடு கடந்தி சென்ற குற்றம் தான் மாநிலம் தோறும் சிறை பிடிக்க காரணமும்
மனிதன் உனது சிறு பெரு வீழ்ச்சிகள் கண்டு மனம் மயங்கி அங்கு தன்னை சுத்தம் செய்து கொள்கிறான் சில வேளைகளில் உன் பெரும் வீழ்ச்சியில் தன்னை பயணப் படுத்திக் கொள்கிறான் எத்தனை நாள் தவமோ அது உன்மடியில் உயிர் பிரிய
இப்படி முடிவில்லாத அதன் ஓட்டத்தையும் காலம் காலமாக சொல்லிக் கொண்டே இருக்கலாம் என்றும் அதன் சிறப்பு மங்காது மாறாது
நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவன் வாக்குப் போல
இயற்கை உடனான நமது நேசத்தை போற்ற மறப்பது மான்பாகது
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
நன்றி