Posts

Showing posts from April, 2024

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

சோம்பல் இன்றைய தலைமுறைக்குப் பெரிய சாபம்

Image
  சோம்பல் இன்றைய தலைமுறைக்குப் பெரிய சாபம். வசதி இல்லையென்றாலும் உணவிற்குப் பஞ்சமில்லை யாருக்கும், இப்படி ஒரு சொகுசான வாழ்கையை வாழத் துவங்கிவிட்டால் எதிர்வரும் கடுமையான சூழலைத் தாங்கும் சக்தி இருக்காது. மாறுபடும் சூழலியல் தட்பவெப்பம் என எல்லா காலநிலையையும் வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் போது உடல் தாங்கும் தன்மையை இழந்து விடும் முந்தைய தலைமுறையினர் கொஞ்சம் கஷ்டப்பட்டனர் நமது தாய் தந்தையர் உணவிற்கு அல்லல் பட்டனர். ஒரு விதத்தில் பார்த்தால் நம்முடைய இந்த சோம்பேறித் தனத்திற்கு அவர்கள் ஒரு காரணம், நான் ஒரு வேளை உணவிற்கு மிகவும் சிரமப்பட்டேன் நம் பிள்ளைகள் அந்த கஷ்டம் படக் கூடாது என்று அதிக அன்பு விதைத்து ஊர் சுற்ற முழு சுதந்திரம் கொடுத்து விட்டார்கள் எது எப்படியோ! போராடாமல் எதுவும் கிடைத்து விடாது. நன்றாக உழைக்கும் ஒருவனுக்கு, உழைத்த ஒருவனுக்கு இறைவன் உயர்ந்த பதவி ஒன்று கொடுக்கிறான், அங்கு அவனின் பணியும் சேர்ந்தால் முழுமை பேரும் உடன் இருப்போருக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் ஆனால்! அவன் அவனது சோம்பேறித் தனத்தினால் குளிரூட்டப் பட்ட அறையினுள் அமர்ந்து கொண்டு நாட்களைக் கடத்துகிறான்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *