சோம்பல் இன்றைய
முந்தைய தலைமுறையினர் கொஞ்சம் கஷ்டப்பட்டனர் நமது தாய் தந்தையர் உணவிற்கு அல்லல் பட்டனர். ஒரு விதத்தில் பார்த்தால் நம்முடைய இந்த சோம்பேறித் தனத்திற்கு அவர்கள் ஒரு காரணம், நான் ஒரு வேளை உணவிற்கு மிகவும் சிரமப்பட்டேன் நம் பிள்ளைகள் அந்த கஷ்டம் படக் கூடாது என்று அதிக அன்பு விதைத்து ஊர் சுற்ற முழு சுதந்திரம் கொடுத்து விட்டார்கள்
எது எப்படியோ! போராடாமல் எதுவும் கிடைத்து விடாது. நன்றாக உழைக்கும் ஒருவனுக்கு, உழைத்த ஒருவனுக்கு இறைவன் உயர்ந்த பதவி ஒன்று கொடுக்கிறான், அங்கு அவனின் பணியும் சேர்ந்தால் முழுமை பேரும் உடன் இருப்போருக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் ஆனால்! அவன் அவனது சோம்பேறித் தனத்தினால் குளிரூட்டப் பட்ட அறையினுள் அமர்ந்து கொண்டு நாட்களைக் கடத்துகிறான். நான் முந்தைய காலங்களில் கஸ்ட்ட பட்டதனால் இறைவன் கொடுத்தது என்று பிதற்றிக் கொள்கிறான்.
காலம் என்றும் ஒரே நேர்கோட்டில் யாருடைய வாழ்வையும் பயணிக்கச் செய்வதில்லை. இடை இடையே மேடு பள்ளம் இல்லையென்றால் நல்லது கெட்டது அசை போடும் பக்குவம் இருக்காது மனிதனுக்கு. ஆகையால் விதிக்கப் பட்ட விதி எங்கனம் இருந்தாலும் அமைதியாக நம் கடமையை செவ்வனே செய்தோமானால் எதிர் வரும் காலங்கள் அனைவருக்கும் சிறப்பாக அமையும்.
1 Comments
👍🏻
ReplyDeleteநன்றி