ஏதோ பொழுதை போக்க செய்வதறியாது வலைதளங்களில் உலாவிக் கொண்டிருந்தேன் அப்படியே யூடியூப் பக்கம் வர எதேர்ச்சையாக “கந்த புராணம்” காணொளி கண்ணில் பட்டது.
மனதில் உள்ளிருந்து ஓர் இனம் புரியாத ஈர்ப்பு கந்த புராணத்தை கேட்க துவங்கினேன், கேட்க கேட்க ஒரு வித ஆனந்தம் முருக பெருமானின் அறிவார்ந்த விகையாட்டு தந்தைக்கும் பாடம் புகட்டிய கதை, கந்த பெருமானின் படைத்தளபதியாக வீரபாகு என்று பல சுவாரஸ்யங்கள் மனதை வசீகரிக்க நான்கு நாட்களாக தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு ஒரு வழியாக சூர சம்காரம் நடந்த பதிவு மட்டும் கேட்க முடியாமல் இருந்தது.
நண்பர் ஒருவர் அவருடைய விடுமுறைக்கு இந்தியா செல்ல அவரை வழியனுப்ப நானும் அவருடன் சென்றிருந்தேன். வாகனம் இரண்டு மூன்று தினங்களாக டிரைவர் சரியாக ஓட்டினாலும் யாராவது குறுக்கே வருவது என்பதாக இருக்க நான் டிரைவரிடம் கூறியிருந்தேன், ஏதாவது கோவிலுக்கு போய்ட்டு வா நீ சும்மா போனாலும் யாராவது வந்து இடையூறு செய்றான் என்று. அவரும் சிரித்துக் கொண்டே ஆமா நேரம் சரியில்லை போல என்றார்.
ஏர்போர்ட் செல்லும் பாதையில் தீடீரென வாகனத்தை நிறுத்தினார். என்ன என்று கேட்க அண்ணா இது முருகர் கோவில் போய்ட்டு வரீங்களா என்றான்!
நீ வரவில்லையா என்ற என் கேள்விக்கு சிரித்துக் கொண்டே இல்லை என்று தலையை மட்டும் அசைத்தான்.
நான் உள்ளே செல்ல கோவில் முகப்பே பிரமாண்டமாக இருந்தது நுழைவு வாயிலில் பிரமாண்டமாக அமைந்திருந்தது சிவபெருமான் சிலை. இப்படி கோவில் மிகவும் பிரமாண்டமாக இருந்தது. தேர் மிகவும் பெரியதாக இருக்க வேண்டும் என்பதை தேர் அறையை வைத்து கற்பனை செய்ய முடிந்தது.
பதினெட்டு சித்தர்கள் சூல முருக பெருமான் வள்ளி, தேவானையுடன் குமரனாக காட்சி அளித்தார் என்னுடல் சிலிரிக்க முருகா என்று சரணடைந்தேன்.
நானாக தேடி போகவில்லை முருகப்பெருமான் என்னை அழைத்து அரவணைப்பதாகவே உணர்வு பெருகியிருந்தது. இறைவனின் கருணை வார்த்தைகளில் கூறிவிட முடியாது.
இது போல பல முறை இறைவனால் ஆட்கொள்ள பட்டிருக்கிறேன். முருக பெருமானின் அருள் இது போல பலமுறை கிடைத்துள்ளது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கோவில் நடையுள் முதலடி எடுத்து வைக்கவும் உச்சி கால பூஜைக்கு இசை மற்றும் மேளம் துவங்கப்பட்டது. முருக பெருமானின் அருள் மழையில் நனைந்து கருணை கடலில் மூழ்கி சாகா வரம் பெற்றேன் என்று எண்ணுகிறேன்.
அனைத்தும் எனக்காக நடப்பது போலவே இருந்தது. பூஜை முடியும் வரை முருகனை ரசித்துக் கொண்டே இருந்தேன்.
எனக்கு முருகனிடம் எந்த பிராத்தனையும் இல்லை, அன்று நடந்த நிகழ்வின் பிரமாண்டத்தில் இருந்தே என்னால் வெளி வரமுடியவில்லை.
ஓம் சரவணபவ!
பல தத்துவங்கள் பலர் கூற எந்த தத்துவத்தையும் ஏற்றுக் கொண்டு நம்மை நாம் குழப்பிக் கொண்டிருப்பது வீண், புராணங்கள் கூறிய கடவுளாகவே அனைவரையும் ஆத்மார்த்தமாகா வணங்கி அருள் பெறுவோம் வீண் ஆராய்ச்சி தேவையற்ற சித்த விரத்தியை உருவாக்கும்.
0 Comments
நன்றி