Posts

Showing posts from July, 2021

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

பக்தன்

                ஓம் சக்தி!!                                                                                                       பராசக்தி!!                                   குரு வாழ்க!!                               குருவே துணை!! ஓம் குருவே ஸ்ரீராஜகுமாரனந்தாய பகவதே...  பரமஹம்ஷாய அருளாளனே சிவாய நமக!! ஆதி அகத்திய மகரிஷியே போற்றி போற்றி!! ஆதி பராசக்தியின் மாபெரும் கருணையினாலும், பரம்பொருளின் வழிகாட்டுதலினாலும், சித்தர்கள், ரிஷிகள், மற்றும் ஞானிகளின் அருளாலும்    இவ்வுலகினில் வாழும் அனைத்து என் ஆத்ம சொந்தகளுக்கும் என் ஆத்ம  வணக்கம்... பக்தன் என்ற இந்த புத்தகத்தை மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களுக்கு நல்ல பக்தனாக இருக்கும், இருக்க முயற்சிக்கும் மற்றும் முயற்சித்த அனைத்து பக்தர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் !! இது உண்மை கதையை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது... நமச்சிவாய வாழ்க;          பொதுவாக பக்தி என்றால் அனைவரின் மனதிலும் என்ன தோன்றும்? பக்தி என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது கண்னப்பன் தான்!! இறைவன் கண்களில் வரும் இரத்ததைப் பார்த்த அடுத்த நொடி அவன் கண்களை இறைவனுக்கு கொட

இருப்பதை கொண்டு வாழ்வது எப்படி?

பேராசை பெரும் நஷ்டம் என்பார்கள், உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் அந்த பழமொழி மிக பெரிய உண்மை தான் அதனை நாம் அனைவருமே ஏதாவது ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம். அல்லது நம்முடன் இந்த வாழ்வில் பயணப்பட்ட யாரோ ஒருவர் மூலம் அறிந்திருப்போம். ஆம், நம்மில் பலபேர் மாத சம்பளம் அல்ல தின கூலி வாங்குபவர்களாக இருப்போம். பணம் மட்டும் தான் இன்றைய காலத்தில் மக்கள் வாழ்வில் அதீத தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனித உயிரினை விட பணத்திற்க்கு முக்கியதுவம் அதிகம், வாழ்வில் ஒரு முறை மருத்துவமனைக்கு சென்றிருந்தால் கூட இந்த உண்மை அறிந்திடலாம். அப்பேர் பட்ட இந்த பணத்தை நாம் எவ்வளவு உதாசினப்படுத்துகிறோம், என்று என்றேனும் நினைத்தது உண்டா? ஆடம்பரத்திற்க்கு ஆசை படும் நாம் சில நாட்களிலே அதனை வெறுத்தும் விடுவோம்!! உதாரணத்திற்க்கு பல நாள் ஆசை பட்டு. ஏதோ ஒன்றை வாங்க, சில வருடங்கள் சேர்த்து வைத்த, உண்டியல் காசு கொண்டு,  அதனை வாங்கி சில நிமிடங்களில் மனம் அதன் மீதுள்ள ஆசையை இழக்கும் அதனை யாரேனும் உணர்ந்ததுண்டா? அதனுடன், அந்த விலையுயர்ந்த பொருளை பயன்படுத்த, பயமும் அதிகரிக்கும். கீழே போட்டு விட கூடாது.  ஏதேனும் பழுதும் ஆகி விட கூடாது

வாழ்கை

சில வேளைகளில் திமிர்  பிடித்தவனாகவும்  அடஙகாதவனாகவும் !! சில நேரங்களில்  குழந்தையாகவும் அன்பிற்க்கு  ஏங்குபவனாகவும்!! பல நேரங்களில்  தனியாகவும்  ஆதரவற்றவனாகவும்!! இந்த வாழ்கை எதை உணர்த்த இத்தனை வேடதாரியாக்குகின்றது? ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு விளஙகளும் வாழ்வியலும் சிந்தனையும்  ஏதேதோ கூறி திரிகின்றது... சத்தியத்தில் ஏதோ சாத்தியம் இல்லா உணர்வினில் நான்? திகைப்பின் உச்சம்!! வாழ்வின் மிச்சமாகிவிடலாகாது!!  வாழ்கை வாழும் வரை மட்டிமே!! கடந்த காலஙகள் அனுபவமாக நடக்கின்ற காலம் வெறுப்பாகவும் எதிர் காலம் அதீத எதிர்பார்ப்புடனும் நகர்ந்து கொண்டே இருக்கின்றது...

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *