பேராசை பெரும் நஷ்டம் என்பார்கள், உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் அந்த பழமொழி மிக பெரிய உண்மை தான் அதனை நாம் அனைவருமே ஏதாவது ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம்.
அல்லது நம்முடன் இந்த வாழ்வில் பயணப்பட்ட யாரோ ஒருவர் மூலம் அறிந்திருப்போம். ஆம், நம்மில் பலபேர் மாத சம்பளம் அல்ல தின கூலி வாங்குபவர்களாக இருப்போம்.
பணம் மட்டும் தான் இன்றைய காலத்தில் மக்கள் வாழ்வில் அதீத தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மனித உயிரினை விட பணத்திற்க்கு முக்கியதுவம் அதிகம், வாழ்வில் ஒரு முறை மருத்துவமனைக்கு சென்றிருந்தால் கூட இந்த உண்மை அறிந்திடலாம்.
அப்பேர் பட்ட இந்த பணத்தை நாம் எவ்வளவு உதாசினப்படுத்துகிறோம், என்று என்றேனும் நினைத்தது உண்டா?
ஆடம்பரத்திற்க்கு ஆசை படும் நாம் சில நாட்களிலே அதனை வெறுத்தும் விடுவோம்!!
உதாரணத்திற்க்கு பல நாள் ஆசை பட்டு. ஏதோ ஒன்றை வாங்க, சில வருடங்கள் சேர்த்து வைத்த, உண்டியல் காசு கொண்டு,
அதனை வாங்கி சில நிமிடங்களில் மனம் அதன் மீதுள்ள ஆசையை இழக்கும் அதனை யாரேனும் உணர்ந்ததுண்டா?
அதனுடன், அந்த விலையுயர்ந்த பொருளை பயன்படுத்த, பயமும் அதிகரிக்கும். கீழே போட்டு விட கூடாது.
ஏதேனும் பழுதும் ஆகி விட கூடாது, அதனை சில நாட்கள் கண்ணும் கருத்துமாக கவனிப்போம்.
எத்தனை நாட்கள் வரையென்றால் முதலில் கீழே விழுந்து சிறிது உரசல் ஏதாவது படும் வரை, அந்த முதல் உரசலில் உயிரே போகும் அவ்வளவு வேதனையும் அடையும் மனது.
உண்மையில் அது உங்களின் நேசங்களுக்கு உள்ளாகியிருக்கும் என்று நம்புகிறீர்களா?
பொருமை இன்னும் சிறிது நாட்களில், அதனை எப்பொழுதும் மெதுவாக வைக்கும் நாம் நின்று கொண்டே தூக்கி எறிய முற்படுவோம்!!ம்ம்ம்...
அது வரை யார் யார் கேட்டும் கொடுக்காத நாம் அதன் பின் யார் கேட்டாலும் அதோ கிடக்கிறது என்று உதாசினபடுத்துவோம்.
இப்போது யோசித்து பாருங்கள் அந்த ஒன்றை வாங்க நீங்கள் எவ்வளவு கடின பட்டீர்கள் என்று.
ஆம்!! இவ்வளவு தான் காலமும், பணமும் விரையமானது.
அதுவும் அது வாங்கிய அன்றே நம் துர்துஷ்ட்ட வசத்தால் விழுந்து நொருங்கியிருந்தால்?
பேராசை பெரும் நஷ்டம் தான்!!
முதலில் நாம் நம்முடைய வருமானம் என்ன ?
என்பதில் தீர்மானமாக இருக்க வேண்டும்.
நம்முடைய கடன் எவ்வளவு, மாதம் தோரும் கடன் மற்றும் வீட்டு செலவுகள் போக நம்மிடம் ஒரு ஆயிரம் ரூபாயாவது இருக்கும்மாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
நான் கூறுவது அன்றாடம் அத்தியாவசிய செலவுகளுக்கே கடின படுவோருக்கு!!
இதனிடையில் நம்மை அறியாது ஏதாவது வாங்கவேண்டும் என்ற ஆசை வரும் போது, உங்கள் சிந்தனையை சிறிது மாற்றிவிடுங்கள்
இல்லையேல் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தீர்க்கமாகிவிடும்.
நீங்களும் அதனை நிச்சயம் வாங்கிவிடுவீர்கள் ஏனென்றால் உங்கள் எண்ணத்தின் வலிமை அப்படி.
அது இப்போது கிடைக்கும் தவணை முறையில் வாங்கி இன்னமும் கடனை அதிக படுத்தியிருப்போம்..
இன்றைய காலத்தில் நடுத்தர குடும்பத்தில் ஆசை கொள்ளும் அனைவருக்கும் தவணை முறை என்பது பேருதவி செய்கின்றது என்பதில் மாற்றம் இல்லை.
இருந்தும் நம்மை கடன் காரனாகவே வைத்திருக்கின்றது.
அது மட்டும் அல்லாது உங்களுடையை ஆசை நிரந்தரமற்றது நாளுக்கு நாள் மாறும்,
இடத்திற்க்கு இடம் மாறும்! அய்யோ பாவம் நீங்கள் ஏதாவது ஒன்றை கூட வாங்க முடியாத நிலையில் இருக்கும் போது இந்த மனம் செய்யும் வேலையை கவனீத்திர்களா?
நீங்கள் உண்ணும் உணவில் ஆசை வரும் நாளை இதை சாப்பிட வேண்டும் அல்லது கடையில் சென்று மதிய உணவு உண்ண வேண்டும் என்று, ஒரு நிலையில்லா பணவிரயம் செய்ய உங்கள் மனம் துடி துடிக்கும்!!
ஆசைகளை வலுகட்டாயமாக கட்டு படுத்த வேண்டாம், இருந்தும் நல்லதொரு ஆலோசனை எடுங்கள். யாருடைய ஆசைக்கும் உங்களை நீங்கள் பலி செய்யாதீர்கள் அந்த துயரம் மிக கொடுமை.
நான் நிறையபேரை பார்த்ததுண்டு.
அதனால் வாழ்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரம் ஒவ்வொன்று சொல்லி செல்வார்கள்,
அந்த வார்த்தைகளை கேட்டு உத்வேகம் அடையும் நிலையில் நாம் இல்லை என்பதை உணருங்கள்.
உங்கள் திறமையை முழுக்க முழுக்க நம்புங்கள்.
செய்யும் வேலையில் முழு ஈடுபாடோடு இருங்கள்.
கடன் வாங்குவதை விட்டு விடுங்கள்,
அதவாது ஆசைக்காக கடன் வாங்குவதை விட்டு விடுங்கள், தவணை முறை பொருள் வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.
இருப்பதை சிறிது சேமியுங்கள், மீதத்தை கொண்டு வாழ்வை வாழுங்கள்.
உங்கள் உழைப்பில் முழு கவனம் செலுத்துங்கள், அதுவே உயர்வு தரும்.
ஆசை நிரந்தரம் அல்ல, தொழில் தான் நிறந்தரம், பொருள் மீது வரும் ஆசையை,
பதவி மீது வையுங்கள் அதற்க்காக கஷ்ட்ட படுங்கள் பொருள்( பணம் ) தானாக உங்களை தேடி வரும்...
பணத்திற்க்கு காந்த சக்தி உண்டு என்பார்கள் அது முற்றிலும் உண்மை.
ஆனால், நாம் அதனை ஈர்க்கிறோமா? இல்லை நம்மை அது ஈர்க்கிரதா என்பதில் தான் உள்ளது நமது 🏆 வெற்றி...
வாழ்வோம் வளமுடன்
Comments
Post a Comment
நன்றி