கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

பக்தன்

         


      ஓம் சக்தி!!                                                                                                       பராசக்தி!!


                                  குரு வாழ்க!!                               குருவே துணை!!

ஓம் குருவே ஸ்ரீராஜகுமாரனந்தாய பகவதே... 
பரமஹம்ஷாய அருளாளனே சிவாய நமக!!

ஆதி அகத்திய மகரிஷியே போற்றி போற்றி!!


ஆதி பராசக்தியின் மாபெரும் கருணையினாலும், பரம்பொருளின் வழிகாட்டுதலினாலும், சித்தர்கள், ரிஷிகள், மற்றும் ஞானிகளின் அருளாலும்    இவ்வுலகினில் வாழும் அனைத்து என் ஆத்ம சொந்தகளுக்கும் என் ஆத்ம  வணக்கம்...

பக்தன் என்ற இந்த புத்தகத்தை மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களுக்கு நல்ல பக்தனாக இருக்கும், இருக்க முயற்சிக்கும் மற்றும் முயற்சித்த அனைத்து பக்தர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் !!

இது உண்மை கதையை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது...


நமச்சிவாய வாழ்க; 


       பொதுவாக பக்தி என்றால் அனைவரின் மனதிலும் என்ன தோன்றும்?

பக்தி என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது கண்னப்பன் தான்!!

இறைவன் கண்களில் வரும் இரத்ததைப் பார்த்த அடுத்த நொடி அவன் கண்களை இறைவனுக்கு கொடுக்க நினைத்த மனம். எதிர்பார்ப்பற்று இருந்தது, அது போலவே நம்மில் பலர் இறைவனை நினைத்து முழுமனதோடு பிராத்தனை செய்வது, இறைவனுக்கு உண்மையாக இருப்பது, இறைவனுக்குப் பூஜை செய்வது, இறைவன் பால் கொண்ட பக்தி மிகுதியினால் தொண்டு செய்வது, ஆதரவற்றுக்கு உணவளிப்பது, என கூறி கொண்டே போகலாம்.

ஆனால் உண்மையில் பக்தி என்பது என்னவென்றால் ? முழுமையான சரணாகதி. கண்னப்பன் சிவன் மீது கொண்டிருந்தது போலவே,  அது இறைவன் பால் இருக்கலாம் அல்லது குரு, மாதா பிதா, என யரோ ஒருவர் மீது இருக்கலாம். அந்த சரணாகதி என்பதன் அர்த்தம் நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்கும். ஆம் உண்மையில் சரணாகதி என்பது முழுமையான அர்பணிப்பு. நடக்கும் செயல் எதுவும் என்னால் இல்லை என்பதனை முழுமையாக உணர்ந்து என் செயல் முழுவதும் அவனால் நடக்கிறது என்பதனை உணர்ந்து நான் தான் எல்லாம் என்ற ஆணவத்தில் விழாமல் எல்லாம் அவன் என்ற சரணாகதியில் விழவேண்டும்...

என்னை பொருத்தவரை பக்தி என்பது பிராத்தனைகள் அற்றது, வேண்டுதல் இல்லாதது, பயமற்றது, நிதானமானது, நிதர்சனமாது, எந்த சூழ்னிலையிலும் மாறாதது, எதிர்பார்புகள் அற்றது, சதா அவன் நினைவாலே, அவன் அருளாலே அவதனித்து இருப்பது. ஆனால் நம்முடைய பக்தியோ தேவைகளைப் பொருத்தது, வாழ்வின் கால கட்டத்தைப் பொருத்தது...

அவை ;

  • பரிட்சை எழுத செல்லும் மாணவனுக்குப், பரிட்சையில் தேர்ச்சி பெற்று விட வேண்டும் என்ற பிராத்தனை.!
  • பணி தேர்வுக்குச் செல்பவனுக்கு வேலை கிடைத்து விட வேண்டும் என்று பிராத்தனை.!
  • மணபெண் கிடைக்காதவனுக்குத் திருமணமாக வேண்டி பிராத்தனை.!
  • தீராத நோயுற்று நீண்ட நாள் அவதிபடுபவனுக்கு உடல் நலம் பெற வேண்டும் என்ற பிராத்தனை.!
  • விவசாயம் செய்பவனுக்கு மழை வேண்டிய பிராத்தனை!!
  • திருமணமாவர்களுக்குக் குழந்தை வேண்டி பிராத்தனை.!
  • கருவுற்றவளுக்குச் சுக பிரசவம் ஆக வேண்டி பிராத்தனை!
 என ஒவ்வொருவர் சூழ்நிலைகளையும், பொருத்து அவரவர் பிராத்தனை வேறுபடுகிறது.. ஆனால் அனைவரும் அவரவர்களை பொருத்த வரை பக்தர்கள் தான். தினமும் ஆலயம்  சென்று பக்தியில்  இறைவனை வணங்கி பிராத்தனை செய்கிறார்கள். உண்மையில் இன்னமும் இது தான் பக்தி என்று நாம் நினைக்கின்றோம்... 
ஞானம் இல்லை, பகுத்தறிவும் இல்லை தெரிந்தது எல்லாம் பிராத்தனை மட்டும் தான் என்ன செய்ய முடியும்? முதலில் எதை நாம் பகுத்து அறியவேண்டும் ? ஆம் சிறுவயதில் இருந்தே கோவில் சென்றால் நல்ல புத்தியை கொடு, நல்ல கல்வியை கொடு, நல்ல உடல் நலத்தை கொடு என்று தான் பிராத்தனை செய்ய வேண்டும் என்று அம்மா சொல்லி தருகிறாள் குழந்தை மனதில் அது ஆழமாக பதிகிறது, குழந்தை என்ன நினைக்கும்?  குழந்தை  அது வளர வளர மனது ஒரு தீர்மானத்திற்கு வரும் நமது அம்மா அப்பாவிடம் கேட்டு கிடைக்காததை கோவிலில் கேட்டால் கிடைக்கும் என்று நம்பும் அப்படியே அந்த பிராத்தனைகள் தொடருகிறது...

நம்முடைய பிராத்தனைகளுக்கும் இறைவன் செவி சாய்க்கிறான் என்றால் உண்மையில் நாம் பக்தன்  தானே !!?

அப்படி இறைவன் பொழியும் கருணையை அனுபவிக்கும் நாம் எதனை பகுத்தறிய வேண்டும் என்ன நடந்தாலும் அவன் இருக்கிறான் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை தவிர வேறு என்ன வேண்டும்? இந்த பக்தி நம்மை நிலைபடுத்துகிறது இறைவன் மீதான ஆழ்ந்த நம்பிக்கை நம்மை பக்குவபடுத்துகிறது... 

அப்படி நடந்த ஓர் கதை தான் நினைவுக்கு வருகிறது...


பதினேழு வயது பாலகன் விளையாட்டில் இருந்த ஆர்வம் பாடத்தில் இல்லை பெற்றோரின் கட்டாயத்தில் பள்ளி செல்கிறான் எதிர்காலத்தை பற்றிய சிந்தனை சிறிதும் இல்லை வாழ்கையை பற்றிய புரிதல் எப்படி இருக்கும்? கொடிய விஷ பாம்பை பார்த்தால் பயம் தான் அனைவருக்கும்.. ஆனால் பாம்பை தனியாக பார்த்தால் அலறி அடித்து ஓடும் கோளை அவன்.  பத்துபேர் மத்தியில்  அந்த பாம்பை பார்த்தால் தனியாக மிரட்டும் கொடிய அரக்கன் அவன். சுற்றி நிற்கும் பத்துபேருக்கு  வீரன்.. இந்த வேறுபாடு எப்படி ?  ஏன் ?எல்லாம் சாதாரணமாகவே தோன்றும்... ஆனால் இரு மாறுபட்ட நடவடிக்கை கொள்ளும் நபர்கள் நிச்சயம் மனதளவினில் பலவீனமானவர்களே, சிறுவயதில் நடத்த ஏதாவது ஒரு விஷயம் மனதளவின் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்திரிருக்கும்.   யார் எதை கூறினாலும் பொருட்படுத்தாத மனது ஆனால் அனைத்தையும் அசை போடும்....

கோவிலை சுற்றி சுற்றி விளையாட்டு கிரிகெட், மற்றும் கிராமப்புற விளையாட்டுகள் பம்பரம் குத்துதல், கோலி, குத்து பந்து என பல விளையாட்டுகள் அது தொலைபேசி இல்லாத காலம் என்பதனால் உணவு உண்ணும் நேரம் மற்றும் இரவு தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்கள் முழுவதும் விளையாட்டு மட்டுமே முழு நேர பொழுது போக்கு....

அப்படி பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த அவனுக்கு   ஆம்! அன்று பன்னிரண்டாம் வகுப்பு கணக்குப் பாடத்தின் பொது தேர்வு நடை பெருகிறது.

தேர்வு எழுதி கொண்டிருக்கும் அந்த பக்தனுக்கு எதற்கும் பதில் தெறியவில்லை, எல்லாம் எங்கோ பார்த்திருக்கும் நினைவு வருகிறது, ஆனால் எழுத முடியவில்லை.

வாய்பாடுகள் பகுதி நினைவு வருகிறது ஆனால் எதுவும் தெரியவில்லை, மூன்று மணிநேர தேர்வு இரண்டரை மணி நேரங்கள் எப்படியோ ஓடி போனது.

அருகில் இருக்கும் நண்பர்களிடம் கேட்க வாய்ப்பும் இல்லாமல் போகும் அளவு தேர்வு நடத்துனர் அவன் அருகிலேயே நீண்ட நேரங்களை அங்கும், இங்கும் நடந்து அவனை திக்கு முக்காட செய்து விட்டார்.

இருந்தும் ஏதாவது எழுதி தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இறைவனை பிராத்தித்துக்கொண்டு தெறிந்த கணக்குகளை தேர்வு தாளில் எழுதி வைத்தான்.

இருநூறு மதிப்பெண் கேள்விக்கு நாற்ப்பது மதிப்பெண் அளவுக்கு கூட பதிலளிக்கவில்லை.

தேர்வு நேரம் முடிய எப்படியும் தோற்று விடுவோம் என்று முழுவதும் தெரிந்தாயிற்று அதனை வெளியில் நண்பர்கள் யாரிடமும் கூற முற்படவில்லை.

நண்பர்களிடம் ம்....எழுதினேன் பாஸ் ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன் என்று கூறிவிட்டு அடுத்த தேர்விற்க்கு படிக்க பயிற்ச்சி வகுப்பிற்கு சென்றான்.

அங்கு தேர்வு எழுதி வந்த மாணவர்கள் அனைவரும் எந்த எந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வில்லை மற்றும் ஒரு மதிப்பெண் கேள்விகளில் எத்தனை சரியாக எழுதினோம் என்று சரி பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

இவன் அதனை எதுவும் பொருட்படுத்தாது மனதில் வேதனையுடன் அடுத்த தேர்வுக்காக தயாராக முற்பட்டான்.

பயிற்சி ஆசிரியர் எப்போது கேட்கும் கேலி கேள்வியை அவனிடம் கேட்டார் என்ன பாஸ் ஆகிருமா? என்ற கேள்வி தான் அது அவர் அந்த கேள்வியை கேட்கும் தோரணையிலேயே அருகில் இருக்கும் அனைவருக்கும் நம்முடைய படிப்பின் லட்சணம் புரிந்து விடும்.

அவன் வளக்கமான புன் முருவலுடன் எழுதிருக்கேன் பாஸ் ஆகிடுவேன் என்று பொய் கூறிவிட்டு, அந்த பொழுது கடந்தான்.

ஆனால் அவன் மனதிற்க்குள் ஆழ்ந்த பயம் பன்னிரண்டாம் வகுப்பு நாம் தோற்று விட்டால் நம்முடைய வாழ்கையே முடிந்து விடும்.

அடுத்த கல்லூரி செல்ல முடியாது.

நம்மை இத்தனை நாள் கஷ்ட பட்டு படிக்க வைத்த நம் அன்னைக்கும் அவமானம்.

தந்தை நம்மை சிறுவதிலேயே விட்டு சென்ற பின்னரும் அவள் தனி ஆளாக பீடி சுற்றி என்னையும் அண்ணனையும் படிக்க வைத்தாள்.
எல்லாம் முடிந்து விட்டது இனி அவ்வளவு தான் 
என தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தான்.

அந்த நேரம் ஊரில் உள்ள அவனுடைய குலதெய்வ கோவில் தீபாராதனை நடை பெற முதல் மணி ஒலித்தது.

தற்கொலை செய்ய நினைத்தவன் அந்த முடிவை சிறிது காலத்திற்க்கு ஒத்தி வைத்தான்.

அது, அவன் மணி ஓசை கேட்டு அன்னையை தரிசிக்க கோவில் சென்றான், அன்னையிடம் அவன் வைத்த பிராத்தனை இந்த பொது தேர்வில் நான் எப்படியாவது தேர்ச்சி பெற்றுவிட வேண்டும்.

அதிலும் கணக்கு பாடம் முக்கியமாக வெற்றி பெற வேண்டும் இல்லையென்றால் நான் இறந்து விடுவேன். என்று அன்னையிடம் பிராத்தித்தான்.

இந்த பிராத்தனை அன்றோடு முடிந்து விட வில்லை தினம் தினம், உண்னும் போதும் உறங்கும் போது, தினமும் கோவில் பூஜை நடைபெரும் போது தொடர்ந்தது.

அனைத்து தேர்வுகளும் முடிவுற்றன.

விடுமுறை முழுவதும் நண்பர்கள் உடன் கோவில் மைதாணத்தில் காலை முதல் மாலை வரை விளையாட்டு.

இதில் மதிய உணவிற்கு மட்டும் தான் வீட்டிற்கு செல்வது என ஒன்றரை மாத விடுமுறை முடிந்து தேர்வு முடிவுகளுக்கான நாள் செய்திதாளில் வெளியானது.

பயம் அதிகமானது பிராத்தனையை விடவில்லை. இந்த தேர்வில் அவன் கணக்கு பாடத்தில் நாற்பது மதிப்பெண்களுக்கு கூட எழுதவில்லை என்பது அவன் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும்.

நான் தோற்று விட்டால் இறந்து விடுவதாகவும் அவனிடம் மட்டுமே கூறியிருந்தான்.

தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன இரவு முழுவதும் அவனால் உறங்க முடியவில்லை.

காலை எழுந்ததும் கோவில் சென்று வழக்கமான அதே பிராத்தனையை தாயிடம் கூறிகொண்டு அந்த நண்பனை தன்னுடைய மிதிவண்டியில் வைத்து  அருகில் உள்ள மருந்து கடைக்குச் சென்று பூச்சிமருந்து வாங்கினான்.

அங்கிருந்து சிறிது தூரத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள தோப்பின் மத்தியில் உள்ள பாறை ஒன்றின் மீது இருவரும் அமர்ந்து இருந்தனர்.

நண்பன் விஷத்தை அவன் கையில் வைத்து கொண்டான் அவன் கேட்டும் கொடுக்க மறுத்து வைத்திருந்தான்.

தேர்வு அறிக்கையும் வெளிவந்தது, கைபேசியை எடுத்து பள்ளி நண்பன் ஒருவனை அழைத்தான்  அனைவரும் அவனுக்கு தொடர்ந்து முயற்ச்சித்ததால் தொடர்பு கிடைக்கவில்லை.

அவனும் காத்திருந்தான் தேர்வு முடிவு வெளியாகி அரை மணி நேரம் ஆனது இன்னும் அவனுடைய முடிவு தெரியவில்லை, அவனால் அந்த பதட்டத்தை கையாளவும் முடியவில்லை.

அவன் நண்பனிடம் இருந்து அழைப்பு வந்தது கைபேசியை பார்த்து கொண்டே இருந்த அவன் அழைப்பு வந்த அடுத்த நொடியே அழைப்பை எடுத்தான்.

எதிரிலில் பேசிய நண்பன் கூறியது நீ எல்லாம் பாஸ் பண்ணிட்ட என்றான், இவனால் அதனை ஏற்று கொள்ள முடியவில்லை இவன் மனம் முழுவதும் கணக்கு பாடம் முடிவு பற்றியே இருந்தது. 

இவனும் அவனிடம் கணக்கு படத்திற்க்கு எத்தனை மதிப்பெண் என கேட்டான் அங்கு நண்பர்கள் பலர் உறையாடல் நடந்தது இவன் கேள்விக்கு பதில் இல்லை, இவன் இன்னும் அழுத்தமாக டேய் கணக்கு பாடத்திற்க்கு எத்தனை மதிப்பெண் என கேட்க அவன் அழைப்பை மற்ற நண்பர்களிடம் பேசியபடியே துண்டித்து விட்டான்.

அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்று விட்டோம் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

மறுபடியும் அவனை அழைக்க முயற்ச்சித்தான் அவனால் அந்த பதற்றத்தில் இருந்து வெளிவர முடியவில்லை. ஒரு வழியாக அழைப்பை ஏற்றவன் சொல்லு டா என கூற, டேய் கணக்கு பாடத்திற்கு மதிப்பெண் எத்தனை என்று கேட்டான்?

டேய் ஒரு நிமிடம் காத்திரு பார்த்து சொல்கிறேன் என்றான், இவன் உனக்கு எத்தனை முறை அழைக்க உனக்கு இணைப்பு கிடைக்கவே இல்லை என்றான். டேய் எல்லாரும் எனக்கு கால் பண்ணிட்டே இருந்தாங்க ஒவ்வொருதருக்க பாத்து சொல்லிகிட்டே இருக்கேன் என்றான். அப்புறம் உனக்கு தெறியுமா சர்வேஸ் தோற்று விட்டான் என்றான் இவனுக்கு மறுபடியும் ஆச்சார்யம்! அவன் மூன்றாவது இடத்தை இது வரை நழுவ விட்டது கிடையாது எந்த தேர்விலும் இது வரை தோற்றவனும் கிடையாது என்ன டா சொல்லுர?

எப்படி எந்த பாடம் என்றான்? அது தெரியவில்லை ஆங்கிலத்தில் இரண்டு மதிப்பெண். வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கான். மறு பரீசீலணைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறிகொண்டு இருந்தான் என்றவன் சரி உன்னுடைய மதிப்பெண்களை கூறுகிறேன், குறித்துக்கொள் என்றான்.

இவன் நீ முதலில் கணித பாடத்தின் மதிப்பை சொல் என்றான் எழுபது என்றான் அவன் இருநூறு மதிப்பெண்ணுக்கு எழுபது எடுத்தால் வெற்றி இவன் தேர்ச்சி அடைந்து விட்டான் ஆனால் இவன் நாற்பது மதிப்பெண்களுக்கு கூட எழுதவில்லை.

சரி நான் மற்றவற்றை பயிற்சி வகுப்பில் வந்து வாங்கி கொள்கிறேன் என அழைப்பை துண்டித்தவனுக்கு, மகிழ்ச்சி ஒரு புறம் கண்களில் அவனை அறியாது கண்ணீர் அவனது நண்பன் சரி வெற்றி பெற்றுவிட்டாய் அல்லவா வா ஊருக்கு செல்வோம் என்றான்.

நடந்த ஆச்சர்யத்தில் இருந்து அவனால் வெளிவர முடியவில்லை, மனதிற்கும் ஆயிரம் முறை இறைவனுக்கு நன்றி செலுத்தினான்.

ஊருக்கு சென்றதும் கோவிலுக்கு சென்றான் தாய் முன்பு விழுந்து வணங்கி கண்ணீரை காணிக்கையாக்கினான். ஏனென்றால் தேர்வு எழுதிய அன்றே அவனுக்கே தெரிந்து விட்டது தோற்று விடுவோம் என்று.

வெற்றி பெற ஒரு துளி அளவும் வாய்ப்பு இல்லாத தேர்வு தாளில் வெற்றி மதிப்பெண்கள் சரியாக எப்படி வந்தது?

அவள் அருள் இன்றி வேரெதுவும் இல்லை என்பதை உணர்ந்தான்.

ஆனால் இது பக்தி அல்ல, இது பிராத்தனை மட்டுமே, அவன் நான் இறந்து விடுவேன் என்று இறைவனை மிரட்ட இயலாது. ஏனென்றால் அவனுடைய மரணம் எப்போது நிகழும் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றல்லவா!!

அவனுடைய விடா முயற்சி பிராத்தனையில் இருந்தது. அவன் அந்த முயற்சியை படிப்பதில் காட்டியிருக்கலாம், காலம் எதனையோ அவனுக்கு உணர்த்த துவங்கியிருக்கின்றது.

பக்தி அது நிறைவு, சதா இறைவன் நினைவு.

ஆம் இருந்தும் நாம் நம்முடைய தேவைகளை உருவாக்கி அது நிறைவேற இறைவனை வேண்டும் வரை நாம் முழு பக்தன் ஆகிவிட முடியாது!

நம்மை படைத்த இறைவனுக்கு நமக்கு என்ன வேண்டும் என்பது தெறியும். அவன் நமக்கு கொடுத்ததை வேண்டி முழு மனதுடன் நன்றி கூறுவதும் அதனால் நிறைவுறுவதும் தான் முழுமையான பக்தி.

பக்தியில் வேறுபாடில்லை, பக்தி என்பது ஓர் பரவச நிலை. பக்திக்கும், பிராத்தனைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இருந்தும் பக்தி இல்லாமல் பிராத்தனை பலிக்குமா? 

பிராத்தனை பக்தனின் அடிபணிந்த வேண்டுதலினால் இறைவன் அருள் செய்கின்றானா? இல்லை வேறெதுவும் காரணங்கள் இருக்குமா என்றால் காரணங்கள் நிறைய இருக்கின்றன.

ஆனால் மனித வாழ்வில் கண்னப்பன் போன்று இறைவனுக்கு பிள்ளைகறி சமைத்து கொடுத்த கதையும் நாம் அனைவரும் அறிந்தது தான்.

இங்கே ஏன் இறைவன் சோதிக்க வேண்டும் என்று தோன்றுமல்லவா? ஆம் இதே கேள்வியை இராமகிருஸ்ண பரமகம்ஷரிடம் அவருடைய சீடர் கேட்கும் போது அவர் அளித்த பதில்.
சோதனை இல்லாமல் சாதனை என்பது சாத்தியம் இல்லை, வைரமானது அடிக்க அடிக்க தான் அதன் பிரகாசம் கூடும், நாம் அனைவரும் வெற்று வைர கற்கள் போல் தான், நாம் நம் வாழ்வில் ஜொலிக்க வேண்டும் என்றால் அடிபட்டு தான் ஆக வேண்டும். சோதனைகளை புறிந்து எதிர்கொள்ளதான் வேண்டும்.

ஆனால் ஒரு போதும் இறைவன் நம்மை கைவிட மாட்டான், ரஜினி பட வசனம் போல தான், இறைவன் நல்லவர்களை சோதிப்பான் ஆனால் கைவிட மாட்டான், கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான். என்பது போல தான்.

நாம் எதை நோக்கி நகர்கின்றோம் என்ற துல்லியமான தொலை நோக்கு பார்வை அவசியம்.

பக்தர்களாக நாம் அனைவரும் பிராத்தனையின் முன் நிற்கிறோம் அதே பிராத்தனைகளை இறைவன் அருளவும் தயங்குவது இல்லை, இருந்தும் இறைவன் அங்கே ஒரு சில நிகழ்வுகளை நிகழ்த்துகிறான் அது எதற்கான சோதனை என்றால் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் அவன் மீதான நம்பிக்கையில் என்பதை அறியவே.

உண்மையான பக்தர்களின் பிராத்தனை ஓர் போதும் நிராகரிக்கப்படுவதில்லை.

அங்கே பதினைந்து வயது வாலிபன் ஒருவன் குடும்ப சூழ்நிலை காரணமாக சுமை தூக்கும் வேலைக்கு செல்கிறான், ஒரு முறை கொடுத்த சுமையை கொண்டு சென்று விட்டான்.

அடுத்த முறை பாதிவழியில் அவனால் முடியாமல் கீழே போட்டு விட்டான். அனைவரும் சிரித்தார்கள்.

அவன் அதனை அங்கேயே போட்டு விட்டு வீட்டிற்க்கு வந்து விட்டான் வீட்டில் என்ன ஆயிற்று என்று கேட்ட போது அது மிகவும் கனமாக உள்ளது கழுத்து உள்ளே போகிறது என்றான்.

அவர்களும் நகைத்த படியே சரி அப்போம் கழுத்து எப்பொம் தான் பலம் வரும்? சுமை தூக்க தூக்க தான் கழுத்து பலம் பெரும் என்றார்கள்.

அவன் இரண்டு வாரங்கள் கழித்து மறுபடியும் சென்றான் அதே சுமைதூக்கும் பணிக்கு. அன்றும் அவனால் முடியாமல் அன்று பாதி நேர வேலை வரை தாக்குபிடித்து விட்டு முடியாமல் வீட்டிற்கு வந்து விட்டான்.

அனைவரும் அவனை கேலி செய்தார்கள், நண்பர்களும் அவன் செல்லும் இடமெல்லாம் கேலி செய்தார்கள், அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை, அவமானத்தில் கண்ணீர் அவனை அறியாது வருகிறது, தனியாக வீட்டினுள் இருந்து அழுகின்றான்.

அவனுக்கு ஆருதல் கூற யாரும் இல்லை. அவனுக்கு துணைக்கு யாரும் இல்லை கோவிலுக்கு சென்றான் இறைவன் இடம் கேட்டான் ஏன் என்னால் முடியவில்லை?

மெலிதாக இருப்பவர்கள் கூட சுமை தூக்கி செல்கின்றார்கள். இனி என்னை யாரும் கேலி செய்ய கூடாது, அனைவரையும் விட சிறந்தவனாக வேலை செய்ய வேண்டும். யாரும் என்னை இனி கேலி செய்ய கூடாது. நீ தான் என்னுள் இருந்து அருள் செய்ய வேண்டும் சுமை தாங்கும் வலிமையை எனக்கு கொடு. என்று பிராத்திக்கிறான். வருடம் ஒன்று கடந்தது மறுபடியும் அதே வேலைக்கு செல்கின்றான்.

கடினமாக இருந்தாலும் வேலை முடியும் வரை செய்தாயிற்று, கழுத்து வலி வேலை முடிந்த பின்பு உடன் வேலை செய்பவர்கள் அவன் பின் நின்று இங்க திரும்பி பாரு என்றார்கள் அவன் திரும்ப முயற்ச்சித்து பார்க்கிறான் கழுத்து திரும்பவில்லை வலியும் கூட, ஆனால் அனைவரும் சிரித்தார்கள் இப்படி வீடு செல்லும் வரை அவன் அசைவுகளை பார்த்து கேலி செய்தார்கள் அவன் மனதிலும், உடலிலும் வலியை பொருத்து கொண்டு புன் சிரிப்போடு விடு சென்றான்.

அதன் பின் ஒரு வாரங்கள் கழித்து வேலைக்கு சென்றான், கழுத்து முன்பை விட பரவாயில்லை, அதிக சுமை கூட தாங்கியது, இப்படி நாட்கள் கடந்தன அவன் நன்கு பலமாக திகழ்ந்தான்.

அவனை கேலி செய்தவர்கள் கூட ஒரு சில நேரம் தடுமாற கூடும். அவன் அவர்களுக்கு உதவி செய்தான். புதிதாக இன்னுமொருவன் பணிக்கு வந்தான், பணி முடிந்த பின்பு அவனையும் அனைவரும் கழுத்தை திருப்ப கூறி கேலி செய்தனர். அப்போது இவனுக்கு புரிந்தது இந்த மனிதர்களின் மன நிலை என்றும் எதுவும் மாறபோவது இல்லை. இடம் மற்றும் நபர்கள் மட்டுமே தான் மாறுகிரார்களே தவிற செயல் அன்று போல் தான் இன்றும் நிகழ்கிறது. தன்னை யாரும் கேலி செய்யாத வண்ணம் உடல் வலு கொடுத்து செயல் புறியவைத்த இறைவன் அவனுக்கு மானச குருவானார். 

என்றும் இறைவன் அருளானே அவன் வாழ்கை பயணப்பட்டது.

பக்தனின் பிராத்தனைக்கு இது செவி சாய்க்காத தெய்வம் இல்லை. இருந்து ஏன் பக்தர்கள் என்றும் பிராத்தனையிலேயே மூழ்கியிருக்கிறோம்.

பிராத்தனையை தாண்டி எவ்வாறு செல்வது?

இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழ்திருக்கும், அதில் யாதொரு மாற்றமும் இல்லை.

இருந்தும் பிராத்தனை நம்மை மனித வாழ்விலேயே கட்டி போடுகின்றது என்பதை நாம் எப்போது உணர்வது? எப்படி உணர்வது?

உயிராய் பார்க்காத தெய்வம் உருவமாய் அருள் செய்யுமோ? அருவம் அருள் செய்யும் சூட்சுமம் தான் என்ன?

நீ எதை நினைத்து பிராத்தனை செய்தாலும் நடக்கும் ! எப்படி? 

பக்தன் பிரத்தனைகள் ஒன்று நடக்க, அடுத்த பிராத்தனை துவங்கும், அப்படியானால் எப்போது பக்தன் உண்மையில் பிராத்தனைகள் இன்றி நிறைவு பெருவான்?



தொடரும்......

Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *